ADVERTISEMENT

What is Affiliate Marketing and How it works?

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

இன்ஸ்ட்மென்ட் இல்லாமல் தொழில்

சிறிய வேலை மட்டுமே செய்து பெரிய வருமானம் சம்பாதிக்க இந்த அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்தால் போதும். ஆன்லைனில் இதை நமக்கு தெரியாமல் பல மக்கள் இதை செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் இதில் வெற்றியும் கண்டுள்ளனர். இந்த அப்ளியேட் மார்க்கெட்டிங் மூலமாக ஒரு முறை மட்டுமே சரியாக வேலை செய்தால் போதும். உங்களுக்கு பணம் வந்து கொண்டே இருக்கும் பிறகு நீங்கள் எந்த ஒரு வேலையும் செய்ய தேவை இல்லை. சரி இந்த அப்ளியேட் மார்க்கெட்டிங் என்றால் என்ன இதில் எப்படி பணம் சம்பாதிப்பது மற்றும் இதில் அதிக பணம் தரும் நிறுவனங்கள் எவை என்று இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

அப்ளியேட் மார்க்கெட்டிங் என்றால் என்ன?

சாதாரணமான மக்களிடையே ஒரு நிறுவனத்தின் பொருளைக் கொண்டு சேர்க்க மார்க்கெட்டிங் செய்வார்கள். அப்படி மார்க்கெட்டிங் செய்ய வருபவர்கள் அந்த கம்பெனிகளில் இருந்து வருவார்கள். அந்தக் கம்பெனி மார்க்கெட்டிங் செய்பவர்களுக்கு மாதத்துக்கு ஒரு கூலி கொடுக்கும். ஆனால் ஒரு சில சமயம் அவர்களுக்கு கூலி கொடுத்து வேலை வாங்கினாலும் கம்பெனிக்கு லாபம் கிடைக்காது. அவர்கள் ஒரு பொருளும் விற்கவில்லை என்றால் கம்பெனிக்கு மிகப்பெரிய இழப்புதான்.

இது போன்ற பிரச்சினைகளை சந்திக்க மிகப் பெரிய நிறுவனங்கள் அப்ளியேட் மார்க்கெட்டிங் என்ற ஒரு முறையைக் கொண்டுவந்தது. அதாவது இது சாதாரணமான மார்க்கெட்டிங் போலவேதான் இருக்கும். ஆனால் அந்தக் கம்பெனியில் நீங்கள் வேலை செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. உங்களுக்கு எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ அப்போது செய்து கொள்ளலாம். இதில் நீங்கள் அந்த கம்பெனியின் ஊழியர் கிடையாது ஆனால் அவர்களுடைய பொருளை விற்றால் உங்களுக்கு ஒரு சதவீத பங்கு கிடைக்கும். அந்தப் பங்கு நீங்கள் விற்கும் பொருள் மற்றும் சதவீதம் பொருத்து அமையும்.

படிக்க : மாதம் 25000 ரூபாய் சுலபமாக சம்பாதிக்கலாம்

அப்ளியேட் மார்க்கெட்டிங் எப்படி செயல்படுகிறது?

முதலில் கம்பெனியில் தேவையான பொருளை உருவாக்கி விடுவார்கள். அது ஒரு மென்பொருளாக இருக்கலாம் அவன் பொருளாக இருக்கலாம் அல்லது வேறு ஏதாவது ஒன்றுக்காக பயன்படும் பொருளாக கூட இருக்கலாம். அதை நீங்கள் உங்களுடைய சுற்று வட்டாரத்தில் ( வலைத்தளங்கள் சோசியல் மீடியா நண்பர்களுக்கு ) யாருக்கு தேவைப்படுகிறதோ அவர்களுக்கு அந்தப் பொருளை விற்று கொடுத்தாள் உங்களுக்கு பங்கு கிடைக்கும்.

உதாரணமாக எங்களுடைய கம்பெனியில் ஒரு சாஃப்ட்வேர் உள்ளது. அதை நாங்களே உருவாக்கி உள்ளோம். எங்களுடைய வலைத்தளத்தில் நீங்கள் அப்ளியேட் மார்க்கெட்டிங் பக்கத்துக்குச் சென்று ரெஜிஸ்டர் செய்து விட்டீர்கள் என்றால். உங்களுக்கு ஒரு லிங்க் கொடுக்கப்படும். அந்த லிங்கை உங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் சமூக வலைத்தள நண்பர்கள் அல்லது வேறு எங்கே வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம். அந்த லிங்க் பயன்படுத்தி ஒரு நபர் எங்களுடைய வலைத்தளத்தில் உள்ள எங்கள் சாஃப்ட்வேர் வாங்கினால் உங்களுக்கு ஒரு சதவீத கமிஷன் கிடைக்கும். அந்த சாஃப்ட்வேர் விலை ஆயிரம் ரூபாய் எனில் நீங்கள் விற்றுக் கொடுத்ததற்காக உங்களுக்கு 100 ரூபாய் கிடைக்கும். அதை உங்களுடைய பேங்க் அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

எனவே இப்படித்தான் இந்த அப்ளியேட் மார்க்கெட்டிங் செயல்பட்டு வருகிறது. இதில் நீங்கள் யாருடைய ஒரு நிறுவனத்திலும் வேலை செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. அனைத்து நிறுவனத்திலும் வேலை செய்து உங்கள் பங்குகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கு முதலீடு தேவைப்படுமா?

அப்ளியேட் மார்க்கெட்டிங் மற்றவர் பொருளை நீங்கள் விற்றுக் கொடுப்பதற்காக செய்யப்பட்ட ஒரு முறை. இதில் உங்களிடம் யாரும் பணம் வாங்கமாட்டார்கள். எனவே உங்களுக்கு இலவசமாக அப்ளியேட் மார்க்கெட்டிங் லிங்க் மற்றும் அக்கவுண்ட் கிடைக்கும். அந்த லிங்க் பயன்படுத்தி யார் பொருள் வாங்கினாலும் உங்களுக்கு பணம் கிடைத்துக் கொண்டே இருக்கும். எனவே இதற்கு முதலீடு எதுவும் தேவைப்படாது. உங்களுக்கு இதில் முக்கியமானது மற்றவர்களை வாங்க வைக்கும் திறமை தான். அல்லது அவர்களுக்கு விருப்பம் இருந்தால் வாங்கிக் கொள்வார்கள்.

சிறந்த அப்ளியேட் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் எவை?

அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்ய பல வகையான பொருள்கள் உள்ளது மற்றும் பலவகையான வலைத்தளங்களும் உள்ளது. எனவே அவற்றில் நம்பிக்கையான வலைத்தளங்களில் நீங்கள் வேலை செய்தால் உங்களுக்கு பணம் சரியாக கிடைக்கும். இந்த வேலை முதலில் தொடங்கும் பொழுது சற்று கடினமாகத் தான் இருக்கும் ஆனால் உங்களுக்கு பிறகு பணம் வந்து கொண்டே இருக்கும். ஒருமுறை மட்டும் இதை கடினம் பார்க்காமல் செய்தால் போதும் பணம் கொட்டிக் கொண்டே இருக்கும்.

அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்ய ஒரு சில நிறுவனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை நீங்கள் பயன்படுத்தி பார்க்கலாம். இந்த நிறுவனங்களில் மென்பொருள் மற்றும் வன்பொருள் போன்ற பொருள்கள் விற்கப் படுகிறது. உங்களுக்கு அல்லது உங்களுடைய நண்பருக்கு எது தேவையோ அதை அந்த வலைத்தளத்தில் இருந்து லிங்க் பெற்று ஷேர் செய்து கொள்ளலாம்.

Amazon அமேசான்

இந்த அமேசான் நிறுவனம் ஒரு பல வகையான பொருட்களை விற்கும் தளம் ஆகும். இதில் பல கோடி மக்கள் மற்றும் பலவித பயன்பாட்டாளர்கள் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளார்கள். இதில் அனைவராலும் பொருளை விற்கவும் வாங்கவும் முடியும். அதேபோல அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்யவும் முடியும். முதலில் நீங்கள் அப்ளியேட் மார்க்கெட்டிங் பக்கத்திற்கு லாகின் செய்து உங்களுக்கு உண்டான ஒரு கணக்கை உருவாக்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு நீங்கள் மற்றவர்களுக்கு எந்த பொருளை காட்ட விரும்புகிறீர்களோ அதை தேடி கண்டு பிடித்து கொள்ளவும். பிறகு அங்கே வரும் லிங்க் மூலம் உங்களுடைய நண்பருக்கு பகிரவும். இப்போது அவர்கள் அந்த லிங்க் மூலம் பொருள் வாங்கினால் உங்களுக்கு பணம் கிடைக்கும்.

ADVERTISEMENT

படிக்க : அமேசான் மார்க்கெட்டிங் மூலம் பணம் சம்பாதிக்கலாம்

Flipkart பிளிப்கார்ட்

இந்த பிளிப்கார்ட் நிறுவனம் அமேசன் போலவே உள்ள ஒரு வலைத்தளம் ஆகும். இதில் பலவிதமான பொருள்களும் பல விதமான மக்களும் பயன் படுத்தி வருகிறார்கள். இதில் உங்களுக்கு அமேசான் போலவே பொருள்களும் கிடைக்கும். அதேபோல் அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்யும் அக்கவுண்ட் இலவசமாக கிடைக்கும். உங்களுக்கு என ஒரு தனி கணக்கை உருவாக்கி கொண்டு அதன் மூலமாக மற்றவர்களுக்கு லிங்க் ஷேர் செய்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும். எனவே இந்த நிறுவனத்தையும் நீங்கள் பயன்படுத்தி பார்க்கலாம்.

படிக்க : FlipKart மூலம் ஷேர் செய்து பணம் சம்பாதிப்பது எப்படி?

eBay இ பே

இ-பே நிறுவனம் இந்த இரண்டு நிறுவனங்களைப் போலவே செயல்பட்டு வருகிறது. இதிலும் அப்ளியேட் மார்க்கெட்டிங் பக்கம் உள்ளது. அந்தப் பக்கத்தில் நீங்க ரெஜிஸ்டர் செய்து கொண்டு மக்களுக்கு தேவையான பொருளை ஷேர் செய்தால். அவர்கள் அந்த பொருளை வாங்கி விட்டால் உங்களுக்கு ஒரு பங்கு கிடைக்கும். இந்த நிறுவனத்தையும் நீங்கள் முடிந்தால் பயன்படுத்தி பார்க்கவும்.

Shopify ஷாப்பிபை

இந்த நிறுவனம் மேலே உள்ள நிறுவனங்களைப் போலவே ஒரு வலைத்தளம் கொண்டுள்ளது. அதில் பல வகையான பொருட்களும் அதற்கு விலையும் இருக்கும். இதிலும் அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்யும் முறை உள்ளது. அதை நீங்கள் பயன்படுத்தி உங்களுக்கு என ஒரு அக்கௌன்ட் ரெஜிஸ்டர் செய்து உள் நுழைந்து கொள்ளலாம். இதில் மற்றவர்களுக்கு தேவையான பொருளை பகிர்வதன் மூலம் உங்களுக்கு பணம் கிடைக்கும்.

Bluehost ப்ளூ ஓஸ்ட்

இந்த நிறுவனம் ஒரு வலைத்தளம் ஓஸ்ட் செய்யும் நிறுவனம் ஆகும். வலைத்தளத்தின் பக்கங்கள் மற்றும் பதிவுகள் அனைத்தும் அந்த ஓஸ்ட் முறையில் சேமித்து வைத்திருக்கும். அதிகமான மக்கள் வலைத்தளம் பயன்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு அதிகமான மற்றும் வேகமான ஒரு ஓஸ்ட் தேவைப்படுகிறது. எனவே உங்கள் நண்பர் அல்லது உறவினர் களில் யாரேனும் வலைத்தளம் உருவாக்க விரும்பினால் இந்த முறையை பயன்படுத்தலாம். நீங்கள் முதலில் ஆப்பிலியட் பக்கத்தில் ரெஜிஸ்டர் செய்து கொண்டு. பிறகு லிங்க் ஷேர் செய்தால் அவர்கள் அதை வாங்கினால் உங்களுக்கு பணம் கிடைக்கும். எனவே இந்த வலைதள பக்கம் யாருக்கு தேவைப்படுகிறதோ அவர்களுக்கு பகிர்ந்து பணத்தை ஈட்ட முடியும்.

Tube buddy டியூப் படி

இந்த டீயூப் படி என்பது ஒரு மென்பொருள் ஆகும். இதை அனைவராலும் பயன்படுத்த முடியாது அல்லது அனைவருக்கும் இது பயன்படாது. ஏனெனில் இது யூடியூப் சேனல் வைத்திருக்கும் நபர்களுக்கு மட்டுமே பயன்படும். அந்த யூடியூப் சேனலை இன்னும் அதிக மக்களை கொண்டுவருவதற்கும் மற்றும் வீடியோ நல்ல பார்வைகளை கொண்டுவருவதற்கும் இந்த கருவி பயன்படுகிறது. எனவே உங்களுடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாராவது யூடியூப் சேனல் வைத்து இருந்தால் அவர்களுக்கு பகிர்ந்து இதை வாங்க சொல்லி உங்களுடைய கமிஷன் பெற்றுக் கொள்ளலாம். இந்த டியூப் படி வலைத்தளத்திலும் உங்களுக்கு ஆப்பிலியட் கணக்கு உருவாக்க பக்கம் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு என ஒரு கணக்கை உருவாக்கி கொள்ள வேண்டும். பிறகு உங்களுடைய லிங்க் உங்கள் நண்பருக்கு பகிர்ந்து கொண்டு அவர்கள் வாங்கினால் உங்களுடைய கமிஷன் பெற்றுக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

Vidiq

இதுவும் ஒரு யூடியூப் சேனல் வைத்திருக்கும் நபருக்கு பயன்படக்கூடிய ஒரு கருவியாகும். இதன் மூலமாக உங்களது அல்லது அந்த சேனல் நன்றாக வளர உதவும். இந்த வலைத் தளத்திலும் உங்களுக்கு ஆப்பிலியட் முறை வழங்கப்பட்டு வருகிறது. உங்களுக்கு என ஒரு கணக்கை உருவாக்கி கொண்டு அதன் மூலமாக நண்பர்களுக்கு லிங்க் பயன்படுத்தி பகிரவும். அவர்களுக்கு தேவைப்பட்டு அதை வாங்கினால் உங்களுக்கு 15% முதல் 25 சதவீதம் வரை கமிஷன் கிடைக்கும். இந்த கமிஷன் அவர்கள் வாங்கும் மென்பொருளின் விலையிலிருந்து சதவீதம் கிடைக்கும்.

Hostinger ஓஸ்டிங் கர்

இதுவும் ஒரு வலைத்தளத்தை ஓஸ்ட் செய்யும் நிறுவனம் ஆகும். இந்த வலைத் தளத்திலும் ஆப்பிலியட் என்ற முறை வழங்கப்படுகிறது. அந்தப் பக்கத்திற்கு நீங்கள் சென்று உங்களுக்கு என ஒரு கணக்கை உருவாக்கி கொள்ளலாம். அதில் கொடுக்கப்பட்டுள்ள சலுகைகளை பயன்படுத்தி உங்கள் நண்பருக்கு பகிர்ந்து அவர்களை வாங்க சொன்னாள். அவர்கள் அதை வாங்கினால் உங்களுக்கு பணம் கிடைக்கும்.

GoDaddy கோடாடி

கோடாடி என்பது ஒரு டொமைன் மற்றும் ஓஸ்டிங் செய்யும் நிறுவனம் ஆகும். இதிலும் உங்களுக்கு அப் பிளையேர் ரெஜிஸ்டர் செய்யும் பக்கம் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு தேவையான கணக்கை உருவாக்கி கொண்டு. உங்களுக்கு கொடுக்கப்பட்ட லிங்க் உங்கள் நண்பர் அல்லது உறவினருக்கு பகிர்ந்து அவர்களை வாங்கச் சொன்னால். அவர்கள் வாங்கினால் உங்களுக்கு பணம் கிடைக்கும். முடிந்தால் இதையும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

படிக்க : கூகிள் பே கணக்கு உருவாக்கி பணம் அனுப்புவது / பெறுவது எப்படி?

வேறு சில அப்ளியேட் மார்க்கெட்டிங்

இந்த பதிவில் ஒரு சில முக்கியமான நிறுவனங்கள் பற்றி மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்ய பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் உங்களுக்கு ஆன்லைனில் கிடைக்கும். அவர்கள் அனைத்துமே இந்த ஆப்பிலியட் முறையைப் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே நீங்கள் உங்களுக்கு எந்த நிறுவனம் பிடித்திருக்கிறதோ நல்லது எது சுலபமாக இருக்கிறதோ அதை நீங்கள் தேர்வு செய்து அதன் லிங்க் ஷேர் செய்து பணத்தை சம்பாதிக்க முடியும்.

கேள்விகளுக்கு பதில்

உங்களுக்கு இந்த மார்க்கெட்டிங் பதிவு பற்றி வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப் பெட்டியில் உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கவும். நாங்கள் உங்களுக்கு விரைவில் பதில் கூறுவோம்.

ADVERTISEMENT

படிக்க : ஷேர் செய்தால் பணம் கிடைக்கும் அப்கனிகேசன்

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 206