இன்வெஸ்ட்மெண்ட் இல்லாத தொழில்
ஒரு தொழில் தொடங்க இன்வெஸ்ட்மெண்ட் என்பது இந்த காலத்தில் தேவைப்படாது. இன்வெஸ்ட்மெண்ட் எதுவும் செய்யாமலே ஒரு தொழிலை செய்து வெற்றி காண முடியும். இன்வெஸ்ட்மெண்ட் இல்லாத ஒரே தொழில் மறுவிற்பனை தொழில் ( Reseller business ) மட்டுமே. இந்த மறுவிற்பனை தொழில் பலவகையான வகைகளில் கிடைக்கிறது. அதைப்பற்றி முழு தகவல்களும் நமது வலைப்பக்கத்தில் ஏற்கனவே உள்ளது. இன்று நாம் பார்க்கக்கூடிய மறுவிற்பனை தொழில் ஷாப் 101 எனும் அப்ளிகேஷன் மூலமாக கிடைக்கிறது. சரி இதைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.
ஷாப் 101 என்றால் என்ன?
ஷாப் 101 என்பது ஒரு அப்ளிகேசன் ஆகும். இது சாதாரண பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்று இருக்கும். ஆனால் இதில் நீங்கள் அதிகமான வருமானம் ஈட்ட முடியும். இந்த அப்ளிகேஷன் இந்தியாவில் உள்ள பல கடைகளை இணைக்கிறது. எனவே அந்தப் பொருட்களை நீங்கள் மறு விற்பனை செய்து கொடுத்தால் உங்களுக்கு கமிசன் கிடைக்கும். அந்த கமிஷன் நீங்களே எவ்வளவு வேண்டும் என செட் செய்து கொள்ள முடியும். சரி இதில் பணம் எப்படிக் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.
இதில் பணம் எப்படி கிடைக்கும்?
ஏற்கனவே கூறியது போல் இது ஒரு மறுவிற்பனை தொழிலாகும். இதற்கு நாம் எந்த ஒரு முன் பணமும் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது. அவர்களிடம் உள்ள ஏதேனும் ஒரு பொருளை விற்று கொடுத்தால் நமக்கு கமிஷன் கிடைக்கும். அந்த கமிஷன் நாம் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு பொருத்திக்கொள்ள முடியும்.
இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து திறந்த பிறகு ரெஜிஸ்டர் செய்து கொள்ளவும். அதன்பிறகு இவர்களிடம் உள்ள ஏதேனும் ஒரு பொருளை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினர்களுக்கோ பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்தப் பொருள் அவர்களுக்கு தேவைப்பட்டால் அதை நீங்கள் லிங்க் மூலம் ஷேர் செய்தால் மட்டும் போதும் உங்களுக்கு அதற்கு தேவையான கமிஷன் கிடைக்கும். இந்த கமிஷன் நீங்கள் லிங்க் ஷேர் செய்யும் முன்பு எவ்வளவு வேண்டும் என பொருத்திக்கொள்ள முடியும்.
அந்த பொருளை அவர்கள் வாங்கி விட்டால் உங்களுக்கு நீங்கள் எவ்வளவு கமிஷன் பொருத்தி உள்ளீர்களோ அந்த பணம் உங்களுடைய வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும். பிறகு அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்?
ஒரு சிலருக்கு இதில் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் எனும் கேள்வி இருக்கும். நீங்கள் எவ்வளவு பொருட்களை பகிர்ந்து கொண்டே இருக்கிறீர்களோ அல்லது விற்றுக் கொண்டு இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு கமிஷன் அல்லது வருமானம் கிடைத்துக் கொண்டே இருக்கும். நீங்கள் ஒரு பொருளுக்கு அதிகமான கமிஷன் வைத்துகூட விற்கலாம் அல்லது பல பொருள்களுக்கு குறைந்த கமிஷன் வைத்துகூட விற்கலாம். குறிப்பாக மற்றவர்கள் வாங்க வேண்டும் என்றால் ஒரு நியாயமான விலையை வைத்து அல்லது கமிஷன் வைத்து பகிர்ந்து கொண்டால் அவர்கள் அதிகமாக வாங்கும் வாய்ப்பு உள்ளது. சரி இதில் எப்படி ரெஜிஸ்டர் செய்வது மற்றும் லாகின் செய்வது என்று பார்க்கலாம்.
Shop 101 முக்கியமான அம்சங்கள்
இந்த அப்ளிகேஷனில் உங்களுக்கு பணம் கிடைக்கும். நீங்கள் வீட்டில் இருந்து கூட இந்த வேலையை செய்ய முடியும். நீங்கள் கொடுக்கும் பேங்க் அக்கவுண்டிற்கு பணம் சரியாக வந்து சேர்ந்துவிடும். இதில் நீங்கள் விற்பனை செய்ய 5 லட்சத்துக்கு மேல் பொருள்கள் உள்ளது. உங்களுடைய நண்பர் உறவினர் என யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்ய முடியும். இந்த அப்ளிக்கேஷனில் இருந்து வரும் பொருள்களுக்கு கேஷ் ஆன் டெலிவரி உள்ளது. இதில் நீங்கள் பொருள் பிடிக்கவில்லை என்றால் திரும்பவும் அனுப்பி கொள்ள முடியும்.
இதில் ரெஜிஸ்டர் செய்வது எப்படி?
இந்த அப்ளிகேஷனில் ரெஜிஸ்டர் செய்வது மிகவும் சுலபமான காரியம். முதலில் இந்த அப்ளிகேஷனை கீழே உள்ள லிங்க் மூலம் டவுன்லோட் செய்து கொண்டு இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.
டவுன்லோட் லிங்க் : go to google and search shop 101
இப்பொழுது அந்த அப்ளிகேஷனை திறந்து கொள்ளவும். அதன் பிறகு உங்களுடைய மொபைல் நம்பரை பதிவு செய்து கொள்ளவும். இப்பொழுது நெக்ஸ்ட் எனும் பொத்தானை கிளிக் செய்யவும். இப்பொழுது உங்களுக்கு ஒரு ஒருமுறை கடவுச்சொல் வரும். அந்த கடவுச்சொல்லை உள்ளிட கொடுக்க வேண்டும். அதன் பிறகு உறுதி செய்ய வேண்டும். இப்பொழுது உங்களுக்கு என ஒரு கணக்கு உருவாக்கி விடும். அதன்பிறகு நெக்ஸ்ட் கொடுத்துக் கொள்ள வேண்டும்.
லாகின் செய்வது எப்படி?
ஒருவேளை இந்த அப்ளிகேஷனில் நீங்கள் வெளியேறிவிட்டால் திரும்பவும் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும். அதன் பிறகு நீங்கள் கொடுத்த மொபைல் நம்பரை உள்ளீடாக கொடுக்கவும். இப்பொழுது உங்களுக்கு ஒரு ஒருமுறை கடவுச்சொல் வந்திருக்கும் அதை உள்ளீடாக கொடுக்கவும். இப்பொழுது உங்களுடைய பழைய கணக்கு திரும்ப வந்துவிடும்.
பயன்படுத்துவது எப்படி?
இந்த அப்ளிகேஷன் நீங்கள் ரெஜிஸ்டர் செய்த பிறகு உங்களுக்கு அடுத்த பக்கம் திறக்கும். அதில் உங்களுடைய மாநிலத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது அவர்களுடைய கட்டளைகளை ஏற்று ஐ அகிரி என்பதை கிளிக் செய்து கொள்ளவும். பிறகு நெக்ஸ்ட் எனும் பொத்தானை கிளிக் செய்து கொள்ளவும்.
அதன் பிறகு உங்களுக்கு செலக்ட் புரோடக்ட் எனும் பக்கம் வரும். அதில் அவர்களுடைய பொருட்களை நீங்கள் விற்பனை செய்கிறார்களா. அல்லது உங்களுடைய சொந்த பொருள்களை விற்பனை செய்கிறார்களா என கேட்கும். ஒருவேளை நீங்கள் சொந்தமாக கடை வைத்து இருந்தால் அந்தப் பொருளை கூட நீங்கள் ஆன்லைனில் அல்லது இந்த அப்ளிகேஷன் மூலமாக விற்பனை செய்து கொள்ள முடியும். இப்போது நாம் அவர்களுடைய பொருட்களை எப்படி விற்பனை செய்வது என்று பார்க்கலாம். எனவே அவர்களுடைய பொருள்களை பயன்படுத்தி விற்பனை செய்கிறேன் என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.
இப்பொழுது இந்த அப்ளிகேஷன் முகப்பு பக்கம் வந்து விடும். இது சாதாரண அப்ளிகேஷன் போலவே பல வகையான பொருள்கள் இருக்கும். அதில் உங்களுக்கு எந்த பொருள் வேண்டுமோ அதை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
பொருள்களை பகிர்வது எப்படி?
இந்த அப்ளிகேஷன் மூலமாக பொருட்களை பகிர இரண்டு வழி உள்ளது. இவர்களுடைய முகப்பு பக்கத்தில் உள்ள பொருட்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது உங்களுக்கு எந்த பொருள் வேண்டுமோ அதை சேர்ச் பட்டன் மூலமாக பொருளைத் தேடி. பிறகு அந்த பொருளை பகிர்ந்து கொள்ள முடியும். அந்தப் பொருள்களை பகிரும் ஒன் உங்களுக்கு எவ்வளவு கமிஷன் வேண்டுமோ அதை நீங்கள் பொருத்திக்கொள்ள முடியும்.
இப்பொழுது ஏதாவது ஒரு பொருளை தேர்வு செய்து கொள்ளவும். அந்தப் பொருளை முழுமையாக திறந்து கொள்ளவும். இப்பொழுது ஷேர் அல்லது வாட்ஸ்அப் எனும் பொத்தானை கிளிக் செய்யவும். உங்களுக்கு ஒரு திரை தோன்றும் அதில் நீங்கள் எவ்வளவு கமிஷன் எதிர் பார்க்கிறீர்கள் என கேட்கும். அந்தப் பக்கத்தில் உங்களுக்கு எவ்வளவு கமிஷன் வேண்டுமோ அதை நீங்கள் தேர்வு செய்து கொள்ளவும்.
உதாரணமாக ஒரு பொருளின் விலை 100 ரூபாய் எனில் நீங்கள் அதிக பட்சம் கமிஷன் 100 ரூபாய் வரை வைக்க முடியும் . அல்லது அதற்கு குறைவாக கூட வைக்க முடியும். உங்களுக்கு எவ்வளவு தேவைப்படுகிறதோ அதை பொருத்திக்கொண்டு பகிர்ந்து கொள்ளவும். இப்பொழுது உங்களுடைய நண்பர் அந்த பொருளை திறந்து பார்த்தால் அதில் சாதாரண விலை 200ரூ என கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் உங்களுடைய கமிஷன் பற்றி விபரங்கள் எதுவும் இருக்காது.
வலைப்பக்கம் உருவாக்குவது எப்படி?
உங்களுடைய நண்பர் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி பொருட்களை வாங்க விரும்பவில்லை என்றால் நீங்கள் உங்களுக்கு என ஒரு வலைப்பக்கம் திறந்து கொள்ள முடியும். அதுவும் இலவசமாக இந்த அப்ளிகேஷன் மூலமாக செய்யலாம். முதலில் மெனு பட்டனை கிளிக் செய்து கொள்ளவும். இப்பொழுது ஷேர் வெப்சைட் லின்க் ( share website link ) எனும் தேர்வை ஆன் ( ON ) செய்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது நீங்கள் எந்த பொருள் பகிர்ந்தாலும் அது உங்களுக்கு என உருவாக்கப்பட்ட ஒரு தனி வலை பக்கத்தில் சென்று இருக்கும். அந்தப் பக்கத்தில் உங்களுடைய நண்பர் அல்லது உறவினர் சாதாரணமாக ஆர்டர் செய்ய முடியும். இருப்பினும் உங்களுடைய கமிஷன் சரியாக வந்து கிடைக்கும்.
ஆர்டர் டிராக் செய்வது எப்படி?
நீங்கள் அல்லது உங்களுடைய நண்பர் ஆர்டர் செய்த பொருட்களை நீங்கள் ட்ராக் செய்து கொள்ள முடியும். இதை பார்க்க நீங்கள் முதலில் இந்த அப்ளிகேஷனைத் திறந்து கொள்ளவும். அதன்பிறகு மெனுவை கிளிக் செய்து கொள்ளவும் . இப்பொழுது ஆர்டர் என்பதை தேர்வு செய்யவும். அதில் நான்காவதாக வரும் தேர்வு திஸ் பேச் என்பதை கிளிக் செய்து கொள்ளவும். அதில் ஆர்டர் செய்த பொருள்கள் இருக்கும். அந்தப் பொருளை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து வரும் பக்கத்தில் டிராக் என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது உங்களுக்கு ஒரு வலைப்பக்கம் திறந்து உங்களுடைய பொருள் அல்லது ஆர்டர் செய்த பொருள் எங்கே வந்துகொண்டு இருக்கிறது. எங்கே இருந்து வருகிறது என அனைத்து விபரங்களும் இருக்கும். மற்றும் இது எப்போது உங்களுக்கு கிடைக்கும் எனும் விபரம் கொடுக்கப்பட்டிருக்கும்.
மொத்தமாக கமிஷன் வைப்பது எப்படி?
நீங்கள் தனித்தனியாக ஒவ்வொரு பொருளுக்கும் கமிஷன் வைத்து பகிர்ந்து கொள்ள வேண்டும் எனும் கட்டாயம் கிடையாது. நீங்கள் அனைத்து விதமான பொருள்களுக்கும் அல்லது அனைத்து விதமான கேட்டகிரி பொருளுக்கும் கமிஷன் ஒரே நேரத்தில் வைக்க முடியும். இதனை வைக்க உங்களுடைய அப்ளிகேஷனில் கலெக்சன்ஸ் எனும் பொத்தானை கிளிக் செய்து கொள்ளவும். அதன் பிறகு உங்களுக்கு கேட்டகிரி அல்லது கலைச்சன் அனைத்தும் காட்சியளிக்கும். ஏதாவது ஒரு கலெக்ஷனை தேர்வு செய்து கொள்ளவும். பிறகு அடுத்து வரும் பக்கத்தில் உங்களுக்கு எவ்வளவு கமிஷன் வேண்டுமோ அதை நீங்கள் செட் செய்து கொள்ள முடியும். பிறகு அவை உங்களுடைய வலைப்பக்கத்தில் மாற்றிக்கொள்ள முடியும்.
பணத்தை எடுப்பது எப்படி?
இந்த அப்ளிகேஷன் மூலமாக நீங்கள் பணத்தை எடுப்பது மிகவும் சுலபம். முதலில் இந்த அப்ளிகேஷனைத் திறந்து கொள்ளவும். அதன்பிறகு மெனு பட்டனை கிளிக் செய்து கொள்ளவும். இப்பொழுது வங்கி கணக்கு எனும் தேர்வை கிளிக் செய்யவும். அதன் பிறகு உங்களுக்கு ஒரு பக்கம் திறக்கும். அதில் உங்களுடைய வங்கி கணக்கு எண் மற்றும் வங்கி கணக்கு பெயர் ஐஎஃப்எஸ்சி கோடு போன்ற விபரங்களை உள்ளீடாக கொடுக்கவும். இப்பொழுது உங்களுடைய வங்கிக் கணக்கை இணைத்துக் கொள்ளவும்.
நீங்கள் செய்யும் ஒவ்வொரு வெற்றிகரமான பொருளின் கமிஷனும் உங்களுடைய வங்கிக் கணக்கில் தானாகவே வந்து விடும். அனைத்து வாரங்களிலும் வெள்ளிக்கிழமை உங்களுடைய வங்கிக் கணக்கிற்கு பணம் வந்துவிடும். நீங்கள் எவ்வளவு கமிஷன் சம்பாதித்து இருந்தாலும் அவை அனைத்தும் உங்களுடைய கணக்கிற்கு வந்துவிடும்.
படிக்க : கூகிள் பே கணக்கு உருவாக்கி பணம் அனுப்புவது / பெறுவது எப்படி?
உதவி மற்றும் கேள்விகள்
இந்த அப்ளிகேஷனில் உங்களுக்கு உதவி அல்லது வேறு ஏதேனும் சந்தேகம் கேள்வி இருந்தால் அதை நீங்களே சுலபமாக கண்டுபிடிக்க முடியும். இவர்கள் அனைத்து விதமான கேள்வி மற்றும் சந்தேகத்தைத் வீடியோ தயார் செய்து உள்ளார்கள். முதலில் இந்த அப்ளிகேஷனைத் திறந்து கொண்டு மெனு பட்டனை க்ளிக் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு முதலில் வரும் இரண்டு வழிகள் மூலமாக உதவி கேட்க முடியும். இப்பொழுது சப்போர்ட் என்பதை கிளிக் செய்து கொள்ளவும். அதன் பிறகு வரும் பக்கத்தில் உங்களுக்கு பலவிதமான வீடியோ இருக்கும். உங்களுக்கு எந்த உதவி தேவைப்படுகிறதோ அந்த வீடியோவை பார்த்து உதவியை பெற முடியும்.
DISCLAIMER:
The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.