ADVERTISEMENT

How To Create Google Pay Account – Complete Setup Guide

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

Google Pay UPI Account

இந்த பதிவில் கூகுள் பே ( GPay, Google Pay, Google UPI ) அக்கவுண்ட் ஓபன் செய்வது எப்படி மற்றும் அதை எப்படி பயன்படுத்துவது என்று தெளிவாக பார்க்கலாம்.

கூகுள் பே என்றால் என்ன?

Google Pay என்பது கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு இலவசமான செயலி ஆகும். இந்த செயலி மூலமாக இலவசமாக பண பரிவர்த்தனைகளை செய்ய முடியும். இது அனைத்து விதமான பேங்க் அக்கௌன்ட் இணைக்கப்பட்டு யுபிஐ முறையில் பணத்தை செலுத்த உதவுகிறது. இதன் மூலமாக எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக பரிவர்த்தனை செய்ய முடியும்.

G-Pay வசதிகள் என்ன?

இந்த கூகுள் பே கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. எனவே இதில் மிகவும் அதிகமான வசதிகள் உள்ளது. இதில் உள்ள வசதிகள் ஒரு சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இலவசமாக பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும்.
நேரடியாக பேங்க் அக்கவுண்டிற்கு செலுத்த முடியும்.
ஆன்லைன் ஷாப்பிங் செய்ய முடியும்.
நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும்.
கிப்ட் கார்டு ஸ்கிராட்ச் கர்டு போன்ற வழிகளில் பணம் திரும்ப கிடைக்கும்.
பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக இருக்கும்.
வேகமாக பணத்தை அனுப்ப முடியும்.
டிஜிட்டல் கோல்டு வாங்க முடியும்.
கால் டாக்ஸி ட்ரெயின் பஸ் போன்றவற்றை புக் செய்ய முடியும்.
ஆன்லைன் உணவகங்கள் உணவு வாங்க முடியும்.
நேரடியாக டிரேடிங் செய்யும் வசதி.
இன்னும் பல வசதிகள் இந்த அப்ளிகேஷனில் உள்ளது.

கூகுள் பே அக்கவுண்ட் உருவாக்கும் முன்

உங்களுக்குத் தேவையான கூகுள் பே கணக்கை உருவாக்கவும் முன்பு உங்களிடம் பேங்க் அக்கவுண்ட் இருக்க வேண்டும். பேங்க் அக்கவுண்டில் இணைக்கப்பட்ட போன் நம்பர் இருக்க வேண்டும். ஆண்ட்ராய்டு தொலைபேசி இருக்க வேண்டும். இன்டர்நெட் கனெக்சன் இருக்க வேண்டும். இதற்கு எந்த ஒரு சான்றிதழும் தேவைப்படாது. ஆனால் பேடிஎம் கணக்கை உருவாக்க சான்றிதழ்கள் தேவைப்படும்.

படிக்க : பேடிஎம் ஆக்கவுண்ட் முழுமையாக உருவாக்குவது எப்படி? பயன்படுத்துவது எப்படி?

கூகுள் பே அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி?

முதலில் கூகுள் பே செயலியை உங்கள் தொலைபேசியில் நிறுவ வேண்டும். இதை டவுன்லோட் செய்ய லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்து அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்க.

ADVERTISEMENT

கூகுள் பே லிங்க் : go to google and search google pay

இதை இன்ஸ்டால் செய்த பிறகு திறக்கவும். இப்பொழுது உங்களுடைய தொலைபேசி எண்ணை கேட்கும். அதில் நீங்கள் உங்களுடைய பேங்க் அக்கவுண்டில் எந்த மொபைல் நம்பர் கொடுத்தீர்களோ அதை மொபைல் நம்பரை இங்கு கொடுக்கவும். இப்பொழுது நெக்ஸ்ட் எனும் பொத்தானை கிளிக் செய்யவும்.

அடுத்த பக்கத்தில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரி கேட்கும். அதில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து. அந்தப் பக்கத்தில் கூறியுள்ள விதிமுறைகள் மற்றும் விளக்கங்களைப் படித்து பார்த்து பிறகு நெக்ஸ்ட் எனும் பொத்தானை கிளிக் செய்யவும். உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை மாற்ற விரும்பினால் அங்கே உள்ள பென்சில் போன்ற குறியை டச் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

இப்போது உங்களுடைய தொலைபேசி எண்ணுக்கு ஒரு OTP ( ஒருமுறை கடவுச்சொல் ) வரும் அதை இந்த செயலியில் உள்ளீடு செய்ய வேண்டும். இந்த ஓட்டி பி தானாகவே உள்ளீடு செய்து கொள்ளும் ஒருவேளை ஓடிபி வந்தபிறகு உள்ளீடு வரவில்லை எனில் நீங்கள் உள்ளீடு செய்க. இந்த நம்பர் ஆறு இலக்கங்களைக் கொண்டு இருக்கும்.

அடுத்து வரும் பக்கத்தில் உங்களுடைய பாதுகாப்புக்காக செக்யூரிட்டி கேட்கும். அதில் ஸ்கிரீன் லாக் அல்லது கூகுள் பின் வைத்துக்கொள்ளலாம்.
Use your mobile screen lock : என்பதை தேர்வு செய்தால் நீங்கள் உங்கள் மொபைல் போனில் எந்த ஸ்கிரீன் லாக் பயன்படுத்தி வருகிறீர்களோ அது கூகுள் பே பாதுகாப்புக்காக செயல்படும்.
Create Google PIN : என்பதை தேர்வு செய்தால் ஒரு புதிய நான்கு இலக்க எண் உருவாக்க சொல்லும். அடுத்த பக்கத்தில் இரண்டு முறை நான்கு இலக்க பின் உள்ளீடு செய்த பிறகு நெக்ஸ்ட் கொடுக்கவும். இதை உருவாக்கி உங்கள் கூகுள் பே அக்கவுண்ட்டை பாதுகாக்கலாம்.
இந்த இரண்டில் உங்களுக்கு எது விருப்பமோ அதை தேர்வு செய்து கொள்ளவும்.

இப்பொழுது உங்கள் கூகுள் பே முகப்பு பக்கத்திற்கு வந்து விடும். இப்பொழுது நீங்கள் உங்களுடைய கூகுள் பிளே அக்கவுண்ட் பகுதியளவு உருவாக்கி விட்டீர்கள். இனி உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் இணைக்கப்பட்டால் நீங்கள் பண பரிவர்த்தனைகள் செய்ய முடியும். எனவே உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் ஐ லிங்க் செய்க.

ADVERTISEMENT

படிக்க : பேபால் அக்கௌன்ட் முழுமையாக உருவாக்குவது எப்படி?

பேங்க் அக்கௌன்ட் இணைப்பது எப்படி?

கூகுள் பிளே அக்கவுண்ட் திறந்த பிறகு முகப்பு பக்கத்திற்கு வரவும். அங்கே மேலே இடதுபுறம் உங்களுடைய பெயர் கொடுக்கப்பட்டிருக்கும். அதற்குக் கீழே பேங்க் அக்கௌன்ட் ஐ இணைக்க ( Add bank account ) எனும் பட்டன் இருக்கும். அதை தொடவும்.

அடுத்து வரும் பக்கத்தில் நீங்கள் எந்த பேங்கில் கணக்கு வைத்திருக்கிறீர்களா அந்த பேங்க் பெயரை செலக்ட் செய்யவும். குறிப்பாக உங்களுடைய மொபைல் நம்பர் எந்த வங்கி அக்கவுண்டில் இணைக்கப்பட்டு இருக்கிறதோ அந்த பேங்க் பெயரை செலக்ட் செய்யவும். இதில் அனைத்து விதமான பேங்க் அக்கவுண்ட் களும் இருக்கும்.

உங்களுடைய வங்கி அக்கவுண்டை தேர்வு செய்தபிறகு. உங்களுக்கு ஒரு திரை வரும். அதில் உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் உங்கள் போனுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் உங்களுடைய அந்த சிம் கார்டு அதே போனில் இருக்க வேண்டும் என குறிப்பிட்டு இருக்கும். இந்த இரண்டும் இருந்தால் நீங்கள் ஓகே எனும் பொத்தானை தேர்வு செய்யலாம். அல்லது வேறு போன் நம்பர் பயன்படுத்த விரும்பினால் Use different number எனும் தேர்வை செலக்ட் செய்து வேறு மொபைல் நம்பரை உள்ளீடு செய்யலாம். இந்த பேங்க் அக்கவுண்ட் மற்றும் கூகுளே இணைப்பதற்கு நீங்கள் தேர்வு செய்த அந்த சிம் கார்டில் போதுமான அளவு பணம் இருக்க வேண்டும். அதில் பணம் இருந்தால்தான் எஸ்எம்எஸ் அனுப்ப வசதியாக இருக்கும். இல்லையெனில் உங்கள் பேங்க் அக்கவுண்ட் இணைக்க முடியாது. இப்பொழுது ஓகே எனும் பொத்தானை தேர்வுசெய்யவும்.

அடுத்து வரும் பக்கத்தில் உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் மற்றும் கூகுள் பே இணைக்கும் செயல் நடைபெற்று கொண்டிருக்கும். நீங்கள் எந்த ஒரு தொந்தரவும் செய்யாமல் சிறிது நேரம் அப்படியே விடவும். அதில் எஸ்எம்எஸ் வெரிபிகேசன் நடக்கும், உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் மொபைல் எண்ணை தேடும் மற்றும் பேங்க் அக்கவுண்ட் கணக்கை தேடும். இந்த மூன்று செயல்களும் நடைபெற்று முடிந்து பச்சை நிற டிக் ( ✔️ ) வந்துவிட்டால் உங்கள் பேங்க் அக்கௌன்ட் கூகுள் பே உடன் இணைந்து விடும். அடுத்த திரையில் ஸ்டார்ட் எனும் பொத்தான் வந்துவிடும். இப்பொழுது நீங்கள் வெற்றிகரமாக பேங்க் அக்கவுண்ட் செய்துவிட்டீர்கள். இப்பொழுது அந்த ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்க.

அடுத்து வரும் திரையில் உங்களுக்கு ஏடிஎம் அல்லது டெபிட் கார்டு இணைக்க சொன்னால். அதில் உங்களுடைய கார்டை இணைத்து விடவும். அந்தத் திரையில் உங்களுடைய ஏடிஎம் கார்டு கடைசி ஆறு இலக்க நம்பர் கேட்கப்பட்டிருக்கும். அதில் உங்களுடைய கார்டில் உள்ள நம்பரை கொடுக்க வேண்டும். அடுத்து உள்ள பெட்டியில் கார்டு எக்ஸ்பைரி ஆகும் மாதம் மற்றும் வருடம் கேட்கப்பட்டிருக்கும். அதில் உங்கள் கார்டின் எக்ஸ் பிரி பதிவுகளை கொடுக்கவும். இப்பொழுது உங்களுடைய மொபைல் எண்ணுக்கு வெற்றிகரமாக கூகுள் பே இணைக்கப்பட்டது என்ற குறுஞ்செய்தி வரும். இனி நீங்கள் பண பரிவர்த்தனைகளை கூகுள் பிளே மூலம் எளிமையாக செய்ய முடியும்.

ADVERTISEMENT

படிக்க : மாதம் 50000 அமேசான் மூலம் சம்பாதிக்கலாம்

பணம் அனுப்புவது எப்படி?

கூகுள் பே மூலம் நான்கு வழிகளில் பணத்தை அனுப்ப முடியும். இந்த நான்கு வழிகளில் ஏதாவது ஒன்று பயன்படுத்தி பணத்தை யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருக்கு எளிமையாக அனுப்ப முடியும். அந்த நான்கு வழிகள் என்ன என்று கீழே தெளிவாக பார்க்கலாம்.
1. வங்கி அக்கவுண்டுக்கு அனுப்புதல் : Bank Transfer இதன் மூலமாக நீங்கள் யாருக்கு பணத்தை அனுப்ப வேண்டுமோ அவரின் வங்கி எண் மற்றும் ஐஎஃப்எஸ்சி என் தெரிந்தால் அவருக்கு அனுப்ப முடியும்.
2. போன் நம்பரில் அனுப்புதல் : Phone Number : நீங்கள் யாருக்கு பணத்தை அனுப்ப வேண்டுமோ அவர் ஏற்கனவே கூகுள் பே அக்கவுண்ட் வைத்திருந்தால் அவருடைய மொபைல் நம்பரை வைத்து பணத்தை அவருக்கு அனுப்ப முடியும்.
3. யு பி ஐ ஐ டி மூலம் அனுப்புதல் : UPI ID or QR Code இதன் மூலமாக நீங்கள் யாருக்கு பணத்தை அனுப்ப வேண்டுமோ அவரின் யு பி ஐ டி அல்லது கியூ ஆர் கோடு இருந்தால் அவருக்கு எளிமையாக பணத்தை அனுப்ப முடியும். இதில் நீங்கள் எந்த ஒரு கியூ ஆர் கோடு வேண்டுமானாலும் ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பலாம். உதாரணமாக உங்கள் நண்பர் பேடிஎம் யு பி ஐ டி வைத்திருந்தால் அதைக்கூட நீங்கள் பயன்படுத்தி அவருக்கு பணத்தை அனுப்ப முடியும்.
4. செல்ப் ட்ரான்ஸ்பர் : Self transfer இதன் மூலமாக நீங்கள் பணத்தை உங்களுக்கே அனுப்பிக் கொள்ள முடியும். அதாவது நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பேங்க் அக்கவுண்ட் வைத்திருந்தால் . அவை அனைத்தையும் கூகுள் பே மூலம் இணைத்து வைத்திருந்தால். உங்களது வேறு பேங்கில் உள்ள பணத்தை மற்றொரு வங்கிக்கு சுலபமாக அனுப்ப முடியும்.

மேலே உள்ள நான்கு வழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து உங்கள் பணத்தை அனுப்பி கொள்ள முடியும். நான்கில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்க. அடுத்து வரும் பக்கத்தில் யாருக்கு பணத்தை அனுப்ப வேண்டுமோ அவரின் விபரங்களை கொடுக்கவும் அல்லது அவர் கணக்கு விவரங்களை கொடுக்கவும். அடுத்து வரும் பக்கத்தில் எவ்வளவு பணம் அனுப்ப வேண்டுமோ அதை உள்ளீடு செய்க. அதற்கு கீழ் உள்ள பெட்டியில் ஏதேனும் டைப் செய்க. பிறகு சென்ட் எனும் பொத்தானை தேர்வு செய்க. இப்பொழுது உங்களுடைய திரையில் வரும் செய்தியை பின்தொடர்க. அடுத்து உங்களுடைய யுபிஐ பேமென்ட் பாஸ்வேர்டை உள்ளீடு செய்க. இப்போது அந்த பணம் வெற்றிகரமாக மற்றவருக்கு அனுப்பப்படும்.

பணத்தைப் பெறுவது எப்படி?

கூகுள் பே மூலம் பணத்தை பெற இரண்டு வழிகள் உள்ளது. அவை யு பி ஐ டி மூலம் பணத்தை பெறுவது மற்றும் போன் நம்பர் மூலம் பணத்தை பெறுவது. உங்களுக்கு இந்த இரண்டும் தெரியவில்லை எனில் உங்களுடைய க்யூ ஆர் கோடு மூலம் பணத்தை பெற முடியும். உங்களுடைய முகப்பு பக்கத்திற்கு சென்று அங்கேயுள்ள அக்கவுண்ட் பொத்தானை கிளிக் செய்க. அடுத்து வரும் பக்கத்தில் உங்களின் கியூ ஆர் கோட், போன் நம்பர் மற்றும் யுபிஐ ஐடி போன்றவை கொடுக்கப்பட்டிருக்கும். அதை நீங்கள் யாரிடம் பணத்தை பெற வேண்டுமோ அவருக்கு பகிர்ந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

உள் நுழைவது எப்படி?

தவறுதலாக வெளியேறிவிட்டால் அல்லது அப்ளிகேஷனை அன் இன்ஸ்டால் செய்து விட்டாலும். உங்களுடைய கணக்கிற்குள் சுலபமாக நுழைய முடியும். அதற்கு நீங்கள் உங்களுடைய போன் நம்பரை என்டர் செய்து பிறகு உங்களுடைய ஓடிபி கொடுக்க வேண்டும். இப்பொழுது உங்களுடைய கணக்கு திரும்பவும் துவங்கப்படும். இதில் உங்கள் கணக்கை எப்போதுமே அழியாது. ஒரு முறை நீங்கள் கணக்கை உருவாக்கி விட்டால் அது நீங்கள் அழிக்கும் வரை அழியாது. எனவே நீங்கள் சுலபமாக உள்நுழைந்து கொள்ளலாம்.

கூகுள் பே ஆஃபர்

கூகுள் பே அனைத்து பயனர்களுக்கும் அதிகமான ஆஃபர் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. உதாரணமாக நீங்கள் வெள்ளிக்கிழமைகளில் பணத்தை யாரையேனும் ஒருவருக்கு அனுப்பினால் உங்களுக்கு ஸ்கிராட்ச் கர்டு கிடைக்கும். இதன் மூலம் பணம் கிடைக்கும். கூகுள் பே பயன்படுத்தி அதிகமான பரிவர்த்தனை செய்தால் உங்களுக்கு கேஷ்பேக் அதிகமாக கிடைக்கும். உங்களுடைய நண்பரை கூகுள் பே அக்கவுண்ட் உருவாக்க வைத்து பணத்தை சம்பாதிக்கலாம். இதில் Refer and earn மூலமாக 100 ரூபாய் கிடைக்கும் ஒவ்வொரு நண்பர் உள்ளே வரும்போதும். இவ்வாறு இதில் பல்வேறு வசதிகள் உள்ளது.

ADVERTISEMENT

படிக்க : முழுமையான PhonePe அக்கௌன்ட் உருவாக்குவது எப்படி?

கேள்விகளுக்கு பதில்

உங்களிடம் Google Pay ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதனை கீழே உள்ள கருத்து பெட்டியில் தெரிவிக்கவும் உங்களுக்கு விளக்கம் குறுகிய காலத்தில் அளிக்கப்படும்.

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 206