ADVERTISEMENT

How To Make Money From Amazon Affiliate Marketing

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

அமேசான் நிறுவனம்

இந்த அமேசான் நிறுவனம் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இது ஒரு ஆன்லைனில் பொருட்களை வைக்கக் கூடிய ஒரு வலைத்தளம் ஆகும். இதில் பலவித பொருளை விற்பவர் களும் இருக்கிறார்கள் அந்த பொருளை வாங்குபவர்களும் இருக்கிறார்கள் மற்றும் அந்த பொருளை வாங்க சொல்லும் அப்ளியேட் மார்க்கெட்டிங் பயனர்களும் இருக்கிறார்கள்.

இந்த அப்ளியேட் மார்க்கெட்டிங் முறையில் நீங்கள் எந்த ஒரு பணமும் செலவிட தேவையில்லை. நீங்கள் சொந்தமாக வே இன்வெஸ்ட் செய்யாமல் ஒரு தொழில் தொடங்க முடியும்.

அமேசான் அப்ளியேட் மார்க்கெட்டிங் என்றால் என்ன?

அப்ளியேட் மார்க்கெட்டிங் என்பது ஒரு பொருளை நீங்கள் மற்றவருக்கு பகிர்ந்து அதை விற்று கொடுத்தால் உங்களுக்கு கமிசன் கிடைக்கும். அந்தப் பொருளை மற்றவர்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்ல வேண்டாம். அவர்களுக்கு எந்த பொருள் தேவையோ அதன் லிங்கை மட்டும் ஷேர் செய்து வாங்க சொல்லினால் உங்களுக்கு பணம் கிடைக்கும்.

அமேசன் ஆப்பிலியட் மற்கெடிங் என்பது அமேசானில் உள்ள பொருளை மற்றவர்களுக்கு பகிர்ந்து அவர்கள் வாங்கினால் உங்களுக்கு கமிசன் கிடைக்கும். இந்த அமேசான் நிறுவனமும் அதேபோலதான் செயல்பட்டு வருகிறது.

இது எப்படி வேலை செய்கிறது?

முதலில் அமேசானில் அப்ளியேட் மார்க்கெட்டிங் என்ற பகுதியில் உங்களுக்கு என ஒரு கணக்கை உருவாக்கி கொள்ள வேண்டும். அந்தக் கணக்கு உருவாக்கிய உடன் உங்களுக்கு டாஸ்போர்ட் வழங்கப்படும். அதில் அமேசானில் உள்ள அனைத்து பொருட்களும் இருக்கும். அந்தப் பொருளில் உங்கள் நண்பருக்கு எந்த பொருள் தேவைப்படுகிறதோ அதை நீங்கள் டாஸ்போர்ட் மூலம் லிங்க் பகிர்ந்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும்.

ADVERTISEMENT

உதாரணமாக உங்கள் நண்பருக்கு ஒரு தொலைபேசி தேவைப்படுகிறது. அந்த தொலைபேசியை சாதாரணமாக அமேசான் வலைத்தளத்தில் சென்று அவர் வாங்கினால் உங்களுக்கு எந்த ஒரு லாபமும் கிடைக்காது. அதுவே அந்தப் பொருளுக்கு என ஒரு லிங்க் உங்களுடைய அமேசான் அப்ளியேட் மார்க்கெட்டிங் பக்கத்தில் கிடைக்கும். அந்த லிங்க் உங்களுடைய நண்பருக்கு பகிர்ந்து விடவும். அவர் உங்களுடைய லிங்க் கிளிக் செய்து அந்த தொலைபேசியை வாங்கினால் உங்களுக்கு கமிசன் கிடைக்கும். ஆனால் அந்தப் பொருளின் விலை சாதாரண வலைத்தளத்தில் இருக்கும் போலவே இருக்கும். இருப்பினும் உங்களுக்கு கமிசன் கிடைக்கும். இப்படித்தான் இந்த அப்ளியேட் மார்க்கெட்டிங் முறை செயல்பட்டு வருகிறது.

இந்த அப்ளியேட் மார்க்கெட்டிங் முறை அமேசான் வலைத்தளத்தில் மட்டும் இல்லை. இதேபோல் பல விதமான வலைதளங்களிலும் அப்ளியேட் மார்க்கெட்டிங் முறை உள்ளது. அவை அனைத்தையும் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டு உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதில் வேலை செய்யலாம். இன்று நாம் அமேசான் நிறுவனத்தைப் பற்றி பார்க்கலாம்.

படிக்க : அப்ளியேட் மார்க்கெட்டிங் என்றால்? என்ன எவ்வளவு நிறுவனங்கள் உள்ளது? சிறந்த நிறுவனங்கள் எது?

அமேசானில் ரெஜிஸ்டர் செய்வது எப்படி?

அமேசான் அப்ளியேட் மார்க்கெட்டிங் ரெஜிஸ்டர் செய்வது மிகவும் சுலபமாக இருக்கும். முதலில் நீங்கள் அமேசன் ஆப்பிலியட் பக்கத்தை திறந்து கொள்ளவும். அந்தப் பக்கத்தின் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது. அதை கிளிக் செய்து திறந்து கொள்ளவும்.

அமேசான் அப்ளியேட் மார்க்கெட்டிங் வலைத் தளத்தின் லிங்க் : go to google and search amazon affiliate

மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து அந்த வலைத் தளத்தை திறந்து கொள்ளவும். இப்போது உங்களுக்கு அமேசான் அக்கவுண்டில் லாகின் செய்ய சொல்லும். நீங்கள் ஏற்கனவே அமேசான் மூலம் பொருள் வாங்கியிருந்தால் உங்களுடைய சாதாரண அக்கவுண்ட் கொண்டு இதிலும் லாகின் செய்யலாம். உங்களிடம் சாதாரண அமேசான் வலைத்தளத்தின் அக்கவுண்ட் இல்லை என்றால் கீழே உள்ள புதிய கணக்கை உருவாக்கு ( Create your amazon account ) எனும் பொத்தானை தேர்வுசெய்யவும்.

அடுத்த பக்கத்தில் உங்களுக்கு ஒரு சில தரவுகள் கேட்கப்படும் அவை அனைத்தையும் குறியீடாக கொடுக்க வேண்டும். அதில் உங்களுடைய பெயர் மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டு கேட்கப்படும். அதில் உங்களுடைய முழு பெயர் உங்களுடைய ஈமெயில் ஐடி மற்றும் இரண்டு முறை கடவுச்சொல்லை சரியாக உள்ளிடவும். இப்போது கணக்கை உருவாக்கு ( Create your amazon account ) எனும் பொத்தானை கிளிக் செய்யவும்.

ADVERTISEMENT

தொடர்ந்து வரும் பக்கத்தில் உங்கள் இடையே வெரிஃபிகேஷன் ஓடிபி கேட்கப்படும். இப்பொழுது உங்களுடைய ஈமெயில் ஐடியை திறந்து அதில் இன்பாக்ஸ் பக்கத்தில் சென்று உங்களுக்கு அமேசானில் இருந்து வந்திருக்கும் செய்தியை திறக்கவும். அதில் உங்களுக்கு என்ன ஏடிபி ( OTP – One Time Password ) வந்துள்ளது அதை இந்த பக்கத்தில் தட்டச்சு செய்யவும். அதன்பிறகு கிரியேட் அமேசான் அக்கவுண்ட் எனும் பொத்தானை கிளிக் செய்யவும். உங்களுக்கு அந்த ஈமெயில் வரவில்லை எனில் ரீசென்ட் ஓட்டி பி ( Resend OTP ) என்பதை கிளிக் செய்து திரும்பவும் பெற முடியும்.

லாகின் செய்வது எப்படி?

உங்களுடைய ஒருமுறை கடவுச்சொல் ( OTP ) சரிபார்த்த பிறகு நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் வைத்து லாகின் செய்ய முடியும். இதற்கு திரும்பவும் மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்களுடைய ஈமெயில் மற்றும் கடவுச்சொல் கொடுத்து லாகின் செய்யலாம்.

படிக்க : FlipKart மூலம் ஷேர் செய்து பணம் சம்பாதிப்பது எப்படி?

முழுமையாக ரெஜிஸ்டர் செய்வது எப்படி?

நீங்கள் முதல் முறையாக அமேசான் அப்ளியேட் மார்க்கெட்டிங் பக்கத்தில் லாகின் செய்யும்பொழுது உங்களிடையே பலவித கேள்விகள் கேட்கப்படும். அவை அனைத்தையும் நீங்கள் பூர்த்தி செய்தால் தான் உங்களுக்கு அக்கவுண்ட் கிடைக்கும். முழு அக்கவுண்ட் உருவாக்க இதில் நான்கு படிகள் இருக்கிறது. அவை ஆக்கவுண்ட் இன்பர்மேஷன் வெப்சிட் ப்ரோபைல் மற்றும் அமேசான் கண்ட்ரோல். இந்த நான்கு படிகளை பூர்த்தி செய்தால் தான் முழு கணக்கு உருவாகும். சரி அவற்றைப் பற்றி கீழே தெளிவாக பார்க்கலாம்.

ஆக்கவுண்ட் இன்பர்மேஷன்

இந்த நிலையில் உங்களுக்கு உங்களுடைய பெயர் முகவரி பின்கோடு மொபைல் நம்பர் மாநிலம் சிட்டி போன்றவை கேட்கப்படும். அதில் உங்கள் தகவல்களை சரியாக உள்ளிடவும். குறிப்பாக நீங்கள் பேங்க் அக்கௌன்ட் பெயர் என்ன கொடுத்து இருக்கிறோமோ அந்த பெயர் இங்கே கொடுக்கவும். பிறகு நீங்கள் யூஎஸ் (U.S) இல் வருகிறீர்களா இல்லையா என்று கொடுக்கவும். இப்பொழுது நெக்ஸ்ட் எனும் பொத்தானை கிளிக் செய்யவும்.

வெப்சைட் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் லிஸ்ட் 

இதில் உங்களிடையே வெப்சைட் இருக்கிறதா அல்லது மொபைல் அப்ளிகேஷன் மற்றும் பிளாக் போன்றவை ஏதேனும் இருக்கிறதா என்று கேட்கும். உங்களிடம் ஏதேனும் வலைத்தளம் அல்லது மொபைல் அப்ளிகேஷன் இருந்தால் அதைக் கொடுக்கவும். இல்லையெனில் நீங்கள் நெக்ஸ்ட் எனும் பொத்தானை கிளிக் செய்து கொள்ளலாம். உங்களிடம் வலைத்தளம் இருந்தால் வெப்சைட் எனும் பெட்டியில் உங்கள் வலைத் தளத்தின் முகவரியை கொடுத்து சேர்க்க என்பதை கிளிக் செய்து கொள்ளவும். உங்களிடம் மொபைல் அப்ளிகேஷன் இருந்தால் அப்பிளிகேஷன் லின்க் என்பதில் உங்கள் அப்ளிகேஷன் லிங்க் கொடுத்து சேர்த்துக் கொள்ளவும். இப்போது நெக்ஸ்ட் எனும் பொத்தானை கிளிக் செய்யவும்.

ADVERTISEMENT

ப்ரொபைல் 

இந்தப் பகுதியில் உங்களிடையே சிறிய கேள்விகள் கேட்கப்படும். அதில் உங்களுடைய ஸ்டோர் ஐடி கேட்கும். உங்களுக்கு விருப்பமான முகவரியை கொடுத்து கொள்ளவும். அடுத்த பகுதியில் உங்களுடைய வலைத்தளம் அல்லது மொபைல் அப்ளிகேஷன் எந்த வகையை சேர்ந்தது என்று கொடுக்க வேண்டும். தொடர்ந்து வரும் திரையில் உங்களுடைய வெப்சைட் அல்லது மொபைல் அப்ளிகேஷன் எந்த நோக்கத்துக்கு உருவாக்கப்பட்டது என்பதை சரியாக தேர்வு செய்து கொள்ளவும். அடுத்த படியில் அமேசான் பொருள்களை நீங்கள் எப்படி மற்றவர்களுக்கு பகிர போகிறீர்கள் என்று கேட்கும். அதில் நீங்கள் சோசியல் மீடியா வலைத்தளம் பிளாக் அல்லது நீங்கள் எப்படி பகிர போகிறீர்களோ அதை கொடுத்துக் கொள்ளவும். உங்களுக்கு தெரியவில்லை எனில் அனைத்தையும் தேர்வு செய்து கொள்ளவும்.

அடுத்துள்ள வெரிஃபிகேஷன் எனும் பகுதியில் மேலே உள்ள படத்தில் என்ன எழுத்துக்கள் கொடுக்கப்பட்டதோ அதை கீழே உள்ள பெட்டியில் சரியாக தட்டச்சு செய்து கொள்ளவும்.அடுத்து அமேசானின் டைம்ஸ் மற்றும் கண்டிஷன் முறையை படித்துப் பார்த்து ஏற்றுக் கொள்ளவும். இப்போது ஃபினிஷ் எனும் பொத்தானை கிளிக் செய்யவும்.

படிக்க : கூகிள் பே முழுமையாக உருவாக்குவது எப்படி?

அமேசான் கண்ட்ரோல்

அடுத்த படியில் உங்களுடைய பேமென்ட் முறையை கொடுக்க வேண்டும். இதைப் பூர்த்தி செய்தால் தான் உங்களுக்கு அமேசான் நிறுவனத்தில் இருந்து பணம் கிடைக்கும். இதை பூர்த்தி செய்ய Enter your payment and tax information எனும் பகுதியில் இப்போதே கிளிக் செய்யவும். அல்லது சிறிது நாள் கழித்து கூட நீங்கள் இதை சேர்த்துக் கொள்ளலாம். பிறகு உங்களுடைய வங்கி மற்றும் டாக்ஸ் முறையை தேர்வு செய்து கொள்ளவும். இப்போது நெக்ஸ்ட் பொத்தானை கிளிக் செய்யவும். உங்களுக்கு ஒரு அமேசன் ஆப்பிலியட் கணக்கு உருவாக்கப்பட்டிருக்கும்.

டேஷ்போர்டில் என்ன இருக்கும்?

இந்த அமேசான் டாஸ்போர்ட் உள்ளே உங்களுக்கு பலவித பதிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக நீங்கள் எவ்வளவு பொருள்கள் விற்று உள்ளீர்கள். எத்தனை பேர் உங்களுடைய லிங்க் கிளிக் செய்து உள்ளார்கள். சென்ற மாதம் மற்றும் இந்த மாதம் பற்றி அறிக்கைகள் இருக்கும். நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்து உள்ளீர்கள் என கொடுக்கப்பட்டிருக்கும். எந்த பொருள் அதிகமாக விற்பனையில் உள்ளது என்பது கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு எவ்வளவு கமிஷன் கிடைத்துள்ளது என்பதும் கொடுக்கப்பட்டிருக்கும். இது போன்று பல வித தரவுகள் இருக்கும். நீங்கள் அதைப் பார்த்து உங்களுடைய வருமானத்தை தெரிந்து கொள்ள முடியும்.

பொருள்களை பகிர்வது எப்படி?

அமேசான் அப்ளியேட் மார்க்கெட்டிங் மூலம் இரண்டு முறையில் பொருள்களை பகிர முடியும். முதலில் அமேசான் டேஷ்போர்டு கொன்டு பகிரலாம் அல்லது சாதாரண அமேசான் அக்கவுண்ட் மூலம் பகிரலாம். இவற்றைப் பற்றி கீழே தெளிவாக பார்க்கலாம்

ADVERTISEMENT

டாஸ்போர்ட் மூலம் பகிர்வது எப்படி?

உங்களுடைய அமேசான் டேஷ்போர்டு உள்ளே வந்த பிறகு. உங்களுக்கு தேடும் ஒரு பெட்டி கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு எந்த பொருள் தேவையோ அதை நீங்கள் தேடிக் கொள்ளலாம். உதாரணமாக உங்களுடைய நண்பருக்கு ஒரு தொலைபேசி தேவைப்படுகிறது. அந்த தொலைபேசியை நீங்கள் இந்த தேடுபொறியில் தேடி கொள்ளலாம். அதன் பிறகு அந்தப் பொருள் வரும். இப்போது அதில் கெட் லிங்க் எனும் பொத்தான் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து பார்த்தால் உங்களுக்கு ஒரு லிங்க் கிடைக்கும். அந்த லிங்க் உங்களுடைய நண்பருக்கு பகிர்ந்து கொள்ளவும். அந்த லிங்க் பயன்படுத்தி உங்களுடைய நண்பர் பொருள் வாங்கினால் உங்களுக்கு கமிசன் கிடைக்கும்.

படிக்க : மாதம் 25000 ரூபாய் சுலபமாக சம்பாதிக்கலாம்

அமேசான் மூலம் பகிர்வது எப்படி?

உங்களுடைய சாதாரண அமேசன் ஆக்கவுண்ட் இல் லாகின் செய்து கொள்ளவும். நீங்கள் லாக் இன் செய்து ஆக்கவுண்ட் முதலில் அப்ளியேட் அக்கவுண்ட் மூலம் ரெஜிஸ்டர் செய்து உள்ளதா என்பதை சோதித்துக் கொள்ளவும். இப்போது உங்களுக்கு எந்த பொருள் தேவைப்படுகிறதோ அதை திறந்து கொள்ளவும். அந்தப் பொருளை திறந்த பிறகு அந்த வலைத்தளத்தில் மேலே பார்த்தால் உங்களுக்கு தனியாக ஒரு பகுதி அதில் கெட் லின்க் என கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து உங்களுடைய லிங்க் வாங்கிக் கொள்ளலாம். அந்த லிங்க் மூலம் யார் பொருள் வாங்கினாலும் உங்களுக்கு பணம் கிடைக்கும்.

பணத்தை எடுப்பது எப்படி?

இந்த அமேசான் அப்ளியேட் பக்கத்தில் இருந்து உங்களுக்கு பணத்தை எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் அமேசான் மூலம் குறைந்தது ஆயிரம் ரூபாய் சம்பாதித்து இருக்க வேண்டும். அப்படி உங்களுடைய அக்கௌண்டில் ஆயிரம் ரூபாய் இருந்தால் அல்லது ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் நீங்கள் பணத்தை எடுக்க முடியும். உங்களுடைய அக்கவுண்ட் பக்கத்தில் சென்று பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.

DISCLAIMER:

The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 210