ADVERTISEMENT

How To Earn Money From Flipkart Affiliate Marketing

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

பிலிப்கார்ட் அப்ளியேட் என்றால் என்ன?

பிளிப்கர்ட் ஆப்பிலியட் மார்க்கெட்டிங் என்பது ஒரு பயனருக்கு தேவையான பொருளை பிலிப்கார்ட் வலைத்தளத்திலிருந்து ஷர் செய்வதன் மூலம் பணத்தை சம்பாதிக்கும் வழி ஆகும். நீங்கள் ஷேர் செய்த அந்த பொருளை மற்றவர் வாங்கினால் உங்களுக்கு கமிசன் கிடைக்கும். இந்த கமிஷன் ஒவ்வொரு பொருளுக்கும் வேறுபட்டு இருக்கும். இவை அனைத்தின் பிளிப்கர்ட் ஆப்பிலியட் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. சரி இந்த பிளிப்கர்ட் ஆப்பிலியட் எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கலாம்.

 

அப்ளியேட் எப்படி வேலை செய்கிறது?

ஆப்பிலியட் என்பது கிட்டத்தட்ட ஒரு மார்க்கெட்டிங் வேலை போலத்தான் இருக்கும். ஆனால் இது சாதாரண மார்க்கெட்டிங் வேலையை விட மிகவும் சுலபமாக இருக்கும். இதில் உங்களுக்கு எந்த ஒரு டார்கெட் டும் கொடுக்கப்படாது. நீங்கள் எவ்வளவு வேணாலும் சம்பாதித்துக் கொள்ளலாம் அது உங்களுடைய விருப்பம். இந்த ஃப்லிப்கர்ட் மூலம் அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்ய முடியும்.

முதலில் உங்களது என ஃப்லிப்கர்ட் வலைத்தளத்தில் அப்ளியேட் பக்கத்தில் ஒரு கணக்கை உருவாக்கி கொள்ள வேண்டும். பின்பு அந்தக் கணக்கில் உங்களுக்கு எந்த பொருள் வேண்டுமோ அதைத் தேடிக் கொள்ள வேண்டும். தேவையான பொருள் உடைய லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த லிங்க் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும். இப்போது அந்த லிங்க் பயன்படுத்தி வேறு யாராவது அந்த பொருளை வாங்கினால் உங்களுக்கு கமிசன் கிடைக்கும். அந்த கமிஷன் உங்களுடைய பேங்க் அக்கவுண்டிற்கு நீங்கள் மாற்றிக்கொள்ள முடியும்.

படிக்க : Affiliate மார்க்கெட்டிங் என்றால் என்ன? எப்படி செய்வது?

எவ்வளவு சம்பாதிக்கலாம்?

இந்த பிளிப்கர்ட் ஆப்பிலியட் மார்க்கெட்டிங் மூலம் நீங்கள் எவ்வளவு வேணாலும் சம்பாதிக்க முடியும். நீங்கள் எவ்வளவு பயனுள்ள பொருட்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவர்கள் வாங்கிக் கொண்டே இருப்பார்கள். அதன் பிறகு உங்களுக்கு கமிஷன் கிடைத்துக் கொண்டே இருக்கும். இந்த ஃப்லிப்கர்ட் அப்ளியேட் மார்க்கெட்டிங் மூலமாக 3 நாட்களில் 3 லட்சம் ரூபாய் சம்பாதிக்க பயனாளர் களும் இருக்கிறார்கள். எனவே நீங்களும் இதைப் பயன்படுத்திப் பார்க்கலாம். சரி முதலில் இதை எப்படி ரெஜிஸ்டர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ADVERTISEMENT

 

இதில் ரெஜிஸ்டர் செய்வது எப்படி?

முதலில் பிலிப்கார்ட் அப்ளியேட் மார்க்கெட்டிங் வலை பக்கத்தை திறந்து கொள்ளவும். இந்த பக்கத்தின் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது அதை பயன்படுத்திக் கொள்ளவும்.

புளிப்கர்ட் அப்ளியேட் மார்க்கெட்டிங் பக்கத்தின் லிங்க் : go to google and search flipkart affiliate marketing

இந்த லிங்க் கிளிக் செய்த பிறகு உங்களுக்கு ஒரு பக்கம் திறக்கும். அதில் உங்களை ஃப்லிப்கர்ட் வலைத்தளத்தில் லாகின் செய்ய சொல்லும். நீங்கள் ஏற்கனவே இந்த அக்கவுண்ட் வைத்திருந்தால் நீங்கள் லாக் இன் செய்து கொள்ளலாம். புதிதாக உருவாக்க வேண்டும் என்றால் கீழே உள்ள சேர்க்க ( Join now for free ) எனும் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்த பிறகு உங்களுக்கு அடுத்த பக்கம் திறக்கும் அதில் ரிஜிஸ்டர் செய்ய சொல்லும். இதில் ரெஜிஸ்டர் செய்ய உங்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் இருமுறை கடவுச்சொல் உள்ளீடாக கொடுக்க வேண்டும். அதன் பிறகு அவர்களுடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படித்துப் பார்த்து ஏற்றுக் கொள்ளவும். இப்பொழுது ரெஜிஸ்டர் எனும் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

இப்பொழுது நீங்கள் கொடுத்த அந்த மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும். அதை திறந்து கொள்ள வேண்டும். அந்த மின்னஞ்சலில் உங்களுடைய பிளிப்கர்ட் ஆப்பிலியட் ஆக்கவுண்ட் ஆக்டிவேட் செய்ய லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த லிங்கை கிளிக் செய்து உங்களுடைய அக்கவுண்ட் அக்டிவேட் செய்து கொள்ள வேண்டும்.

நீங்கள் ஆக்டிவேட் செய்த பிறகு உங்களுக்கு மீண்டும் ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும். அதில் உங்களுடைய அப்ளியேட் மார்க்கெட்டிங் லிங்க் அல்லது அக்கவுண்ட் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த அக்கவுண்ட் பெயர் மூலமாக உங்களுடைய கணக்கு பரிவர்த்தனைகளை நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும். இந்தப் பெயர் உங்களுக்கு என உருவாக்கப்பட்ட ஒரு அப்ளியேட் பெயராகும்.

ADVERTISEMENT

படிக்க : அமேசான் மார்க்கெட்டிங் மூலம் பணம் சம்பாதிக்கலாம்

லாகின் செய்வது எப்படி?

உங்களுடைய கணக்கு ஆக்டிவேட் செய்த பிறகு நீங்கள் லாக் இன் செய்து கொள்ளலாம். திரும்பவும் மேலே உள்ள லிங்கை பயன்படுத்தி பிளிப்கர்ட் ஆப்பிலியட் மற்கெடிங் வலைப் பக்கத்திற்கு வந்து கொள்ளவும். இப்பொழுது நீங்கள் ரெஜிஸ்டர் செய்ய எந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் கொடுத்தீர்களோ அதை உள்ளீடாக திரும்பவும் கொடுத்து லாகின் செய்து கொள்ளவும். இப்பொழுது உங்களுடைய புளிப்கர்ட் ஆப்பிலியட் மற்கெடிங் டேஷ்போர்டு வலைப்பக்கம் திறந்திருக்கும்.

 

முழுமையாக ரெஜிஸ்டர் செய்வது எப்படி?

முதல் முறையாக நீங்கள் லாகின் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு உங்களுடைய தரவுகளை வாங்கும் பக்கம் திறக்கும். அதில் உங்களுடைய உண்மையான தரவுகளை கொடுக்க வேண்டும். அதில் நான்கு படிகளில் தரவுகள் கேட்கப்பட்டிருக்கும். அவை அக்கவுண்ட் டீடைல் வெப்சைட் தரவுகள் பண பரிவர்த்தனை தரவுகள் மற்றும் ஆக்கவுண்ட் செட்டிங்ஸ். இவற்றைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.

அக்கவுண்ட் டீடைல்

இந்தப் பகுதியில் உங்களுடைய பெயர் மொபைல் நம்பர் இமெயில் ஐடி முகவரி பின்கோடு மாநிலம் போன்ற பல தரவுகள் கேட்கப்பட்டிருக்கும் அவை அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் பூர்த்தி செய்த பிறகு சேவை எனும் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

வெப்சைட் தரவுகள்

அடுத்த பகுதியில் உங்களுடைய வலைப்பக்கத்தை பற்றிய தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு வலைப்பக்கம் இருந்தால் அந்த பக்கத்தின் முகவரியை உள்ளீடு கொடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது உங்களிடம் மொபைல் அப்ளிகேஷன் இருந்தால் அதனுடைய தரவுகளையும் கொடுத்துக் கொள்ள வேண்டும். மற்றும் உங்களுடைய வலைப்பக்கம் அல்லது அப்ளிகேஷன் எந்த ஒரு பகுதியை சேர்ந்தது என்று கேட்கும். அதில் கேட்கும் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து சரியாக கொடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் பூர்த்தி செய்த பிறகு சேமிக்க எனும் பொத்தானை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

பணப்பரிவர்த்தனை தரவுகள்

இந்த பக்கத்தில் உங்களுடைய வங்கி கணக்கு பேன் நம்பர் ஆதார் அடையாள அட்டை மற்றும் சில தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். அவை அனைத்தையும் நீங்கள் சரியாக கொடுத்தால் மட்டுமே உங்களுக்கு உங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் கிடைக்கும். இல்லை எனில் உங்களுடைய வங்கிக்கு பணம் வந்து சேராது. எனவே சரியான வங்கிக் கணக்கு முகவரிகளை உறுதி செய்து கொள்ளவும். இப்பொழுது நெக்ஸ்ட் எனும் பொத்தானை க்ளிக் செய்ய வேண்டும். உங்களுடைய வங்கிக் கணக்கை இணைத்த பிறகு உங்களுடைய அக்கௌண்ட் வெரிப்பை ஆகிவிட்டது என ஒரு பச்சை நிற தகவல் உங்களுக்கு காட்டும். அப்படி காட்டவில்லை என்றால் நீங்கள் சிறிது நாட்கள் கழித்த உங்களுக்கு காட்டும். அதுவரை நீங்கள் உங்களுடைய பொருட்களை விற்றுக் கொண்டு இருக்கலாம்.

அக்கவுண்ட் செட்டிங்ஸ்

இந்த அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்தில் உங்களுக்கு தேவையான கணக்கு மற்றும் பிற தகவல்களை மாற்றிக்கொள்ள முடியும். இதைப் பொருத்த வரை உங்களுக்கு உங்களுடைய ப்ரொபைல் மற்றும் உங்களுடைய அப்ளியேட் மார்க்கெட்டிங் அக்கவுண்ட்டை கண்ட்ரோல் செய்ய சில செட்டிங்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கும். இதைப் பயன்படுத்தி நீங்கள் ஒரு சில மாற்றங்களை கொண்டு வர முடியும்.

இவை அனைத்தையும் சேமித்து பிறகு நீங்கள் உங்களுடைய அப்ளியேட் மார்க்கெட்டிங் பக்கத்தில் மற்றவர்களுக்கு உங்களுடைய லிங்க் பகிர முடியும்.

படிக்க : மாதம் 25000 ரூபாய் சுலபமாக சம்பாதிக்கலாம்

டாஸ் போர்டில் என்ன இருக்கும்?

மேலே உள்ள அனைத்து பதிவுகளையும் கொடுத்த பிறகு உங்களுடைய டாஸ்போர்ட் பக்கத்திற்கு வந்து கொள்ளவும். அங்கே உங்களுக்கு பலவிதமான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் எவ்வளவு சம்பாதித்து இருக்கிறீர்கள் இன்றைய கமிஷன் எவ்வளவு கிடைத்திருக்கிறது? இந்த மாதத்தில் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் ?. எவ்வளவு அக்கவுண்ட் பேலன்ஸ் இருக்கிறது ? மற்றும் எத்தனை ரூபாய் இடைநிலை அக்கவுண்டில் இருக்கிறது என்று உங்களுக்கு பல தகவல்கள் கிடைக்கும்.

டேஷ்போர்டு இடது புறத்தில் உங்களுக்கு ஒரு மெனு கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுடைய கணக்கு விபரம் கமிஷன் கருவிகள் ரிப்போர்ட்ஸ் டவுன்லோட்ஸ் உதவி ஏபி ஐ தொடர்பு கொள்க இது போன்ற பலவிதமான லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் அதைப் பயன்படுத்தி சுலபமாக உங்கள் வேலையை முடித்துக் கொள்ள முடியும். சரி இந்த அக்கவுண்ட் பயன்படுத்தி பொருள்களின் லிங்க் பகிர்வது எப்படி என்று பார்க்கலாம்.

ADVERTISEMENT

 

பொருள்களை பகிர்வது எப்படி?

முதலில் உங்களுடைய டேஷ்போர்டு திறந்து கொள்ளவும். அங்கே உள்ள மெனு மூலம் கருவி என்பதை கிளிக் செய்து கொள்ளவும். பிறகு பொருட்கள் லிங்க் மற்றும் பேனர் ( Product links and banner ) என்பதை கிளிக் செய்து கொள்ளவும். இப்போது உங்களுக்கு ஒரு புதிய பக்கம் திறக்கும். அதில் நீங்கள் எந்த பொருளின் லிங்க் ஷேர் செய்ய போகிறீர்களோ அந்தப் பொருளை கொடுக்கப்பட்டுள்ள சர்ச் பட்டனில் தேடிக் கொள்ளவும். அந்தப் பொருள் உங்களுக்கு வந்த பிறகு அதனை கிளிக் செய்து கொள்ளவும். இப்போது உங்களுக்கு என உருவாக்கப்பட்ட ஒரு லிங்க் இருக்கும். அந்த லிங்க் பயன்படுத்தி நீங்கள் யாருக்கு பகிர விரும்புகிறார்களோ அவர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும். இப்போது அந்த லிங்க் மற்றும் அதைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் உங்களுக்கு டாஸ்போர்ட் மூலம் கிடைக்கும்.

நீங்கள் பகிர்ந்த அந்த லிங்க் வேறு யாராவது பயன்படுத்தி பொருளை வாங்கினால் உங்களுக்கு கமிசன் கிடைக்கும். இது ஒரு முறை மட்டுமல்ல எவ்வளவு முறை எவ்வளவு பொருள் வாங்கினாலும் உங்களுக்கு அதற்கு ஏற்றவாறு கமிஷன் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

 

பணத்தை எடுப்பது எப்படி?

இதில் பணத்தை எடுப்பது மிகவும் சுலபமான விஷயம். ஏனெனில் இது ஒரு நம்பகத் தன்மையான வலைத்தளம் எனவே இதில் பணம் உங்களுக்கு சரியாக கிடைக்கும். நீங்கள் பேங்க் அக்கவுண்ட் முறையில் எந்த அக்கௌன்ட் கொடுத்து உள்ளீர்களோ அந்த கணக்கிற்கு உங்களுக்கு அடுத்த மாதம் இறுதிக்குள் பணம் கிடைத்துக் கொண்டே இருக்கும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் அதிகமான பொருள்கள் விற்றுக் கொண்டே இருந்தால் உங்களுக்கு அடுத்த அடுத்த மாதங்களுக்கு பணம் கிடைத்துக் கொண்டே இருக்கும். இதில் குறைந்த அளவு பணம் எடுக்கும் விகிதம் 2500 ரூபாய். உங்கள் கணக்கில் rs.2500 வந்துவிட்டால் அடுத்த மாதம் இறுதிக்குள் உங்களுக்கு பணம் கிடைத்துவிடும். உங்களுக்கு rs.2500 கிடைக்கவில்லை என்றாலும் உங்களுக்கு எப்பொழுது rs.2500 வருகிறதோ அப்போது பணம் உங்களுடைய பேங்க் அக்கவுண்டிற்கு வந்துவிடும்.

ADVERTISEMENT

உங்களுக்கு பணம் தேவைப்பட வில்லை அல்லது ஃப்லிப்கர்ட் வலைத்தளத்தில் ஏதேனும் வாங்க வேண்டும் என்றால். உங்களுக்கு கிடைத்த அந்த கமிஷனை பயன்படுத்தி கிப்ட் கார்டுகள் மூலம் தேவையான பொருட்களை வாங்க முடியும். இதற்கு எந்த ஒரு வரைமுறையும் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் கிப்ட் காடாக மாற்றி கொள்ள முடியும்.

படிக்க : ஆன்லைனில் கேம் விளையாடி பணம் சம்பாதிக்கலாம்

கேள்விகளுக்கு பதில்

உங்களுக்கு இந்த பிளிப்கர்ட் அப்ளியேட் மார்க்கெட்டிங் பற்றி ஏதேனும் சந்தேகம் அல்லது கேள்விகள் இருந்தால் கீழே உள்ள கருத்து பெட்டியில் தெரிவிக்கவும் உங்களுக்கு பதில் அளிக்கப்படும்.

எவ்வளவு சம்பாதிக்கலாம் : நீங்கள் எவ்வளவு மக்களுக்கு அதிகமாக தேவையான பொருட்களை பகிர்ந்து கொண்டே இருக்கிறார்களோ அவர்கள் வாங்கினால் அதற்கு ஏற்ற கமிஷன் உங்களுக்கு கிடைக்கும்.

ஒரு பொருளின் கமிஷன் எவ்வளவு இருக்கும் : உங்களுடைய ஆப்பிலியட் வலைத்தளத்தில் டாஸ்போர்ட் மூலம் நீங்கள் பகிரும் பொருள்களுக்கு எவ்வளவு கமிஷன் உங்களுக்குக் கிடைக்கும் எனும் தகவல் இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு பொருளுக்கும் குறிப்பிட்ட வேறுபாடுகள் இருக்கும்.

ஒரு லிங்க் மூலம் எத்தனை முறை பொருள்கள் வாங்கலாம் : நீங்கள் பகிர்ந்த உங்களுடைய அப்ளியேட் லிங்க் மூலம் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பொருட்களை வாங்க முடியும் அதற்கு ஏற்ற கமிஷன் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

ADVERTISEMENT
Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 206