மறுவிற்பனை என்றால் என்ன?
மறு விற்பனை என்பது ஒரு பொருளை குறைந்த விலைக்கு வாங்கி அதனை அதிக விலைக்கு விற்பது. அல்லது ஒரு பொருளை நீங்கள் மற்றவர்களுக்கு விற்று கொடுத்தால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். இப்படித்தான் இந்த மறுவிற்பனை இயங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த மறு விற்பனை செய்து மட்டுமே பலவிதமான தொழில்கள் அதிக லாபத்தில் இயங்கி வருகிறது. இதற்கு முக்கியமாக நீங்கள் எந்த ஒரு பெரிய இன்வெஸ்ட்மெண்ட் செய்ய தேவையில்லை. சரி இந்த மறுவிற்பனை யாரால் செய்ய முடியும் என பார்க்கலாம்.
மறு விற்பனை தொழில் யார் செய்யலாம்
குறிப்பாக தொழில் யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த மறு விற்பனை செய்யக்கூடிய தொழில் அனைவராலும் செய்ய முடியும். இதற்கு அதிகமாக படித்திருக்க வேண்டும் என கட்டாயம் கிடையாது. இது போன்ற தொழில்களில் முக்கியமாக மற்றவர்களிடம் நன்றாக பேசத் தெரிந்தால் மட்டுமே போதும். மறு விற்பனை செய்ய பல வகையான தொழில்கள் உள்ளது. அவற்றைப் பற்றி பார்க்கலாம்.
மறு விற்பனை செய்யக்கூடிய தொழில்கள்
அனைத்து தொழில்களிலும் மறுவிற்பனை செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நீங்கள் அதிக லாபம் கிடைக்கக்கூடிய தொழில்களை மட்டும் செய்தால் உங்களுக்கு வருமானம் அதிகமாக கிடைக்கும். இந்த தொழிலை பலவிதமான முன்னணி நிறுவனங்கள் மற்றும் பல நிறுவனங்கள் கொடுத்து வருகிறது. இதனை செய்ய நமக்கு எந்த ஒரு முதலீடும் தேவைப்படாது. நீங்கள் குறிப்பிட்ட பொருளை விற்றுக் கொடுத்தால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். சரி மறு விற்பனை செய்யக்கூடிய ஒரு சில முன்னணி நிறுவனங்களின் பட்டியலை பார்க்கலாம்.
அமேசன் ஆப்பிலியட்
அமேசான் நிறுவனத்தின் பொருட்களை நீங்கள் மற்றவர்களுக்கு விற்றுக் கொடுத்தால் உங்களுக்கு அந்த நிறுவனம் ஒரு சிலர் கமிஷன் தொகையை கொடுக்கும். இது ஒரு நம்பகத் தன்மையான நிறுவனமாகும். நீங்கள் எவ்வளவு பணம் எடுக்கிறீர்களா அது அப்படியே உங்களுக்கு கொடுக்கப்படும். இதில் வேலை செய்வது மற்றும் இது எப்படி வேலை செய்கிறது என்று ஒரு சில தகவல்கள் நமது வலைப்பக்கத்தில் ஏற்கனவே உள்ளது. அந்த பகுதியைப் படிக்க கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி படிக்கவும்.
படிக்க : அமேசான் அப்ளியேட் மார்க்கெட்டிங் மூலம் சம்பாதிப்பது எப்படி?
புளிப்கர்ட் அப்ளியேட் மார்க்கெட்டிங்
அமேசான் நிறுவனத்தைப் போலவே பிளிப்கார்ட் நிறுவனமும் இந்த அப்ளியேட் மார்க்கெட்டிங் முறையை கொடுக்கிறது. இந்த நிறுவனத்திடம் நீங்கள் வேலை செய்து பணத்தை சம்பாதிக்க முடியும். இவற்றில் வேலை செய்வதற்கு எந்த ஒரு முதலீடும் தேவைப்படாது. இதில் வருமானம் ஈட்ட எந்த ஒரு வரைமுறையும் கிடையாது. எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் திறமைக்கு ஏற்ற சம்பாதித்துக் கொண்டே இருக்க. இந்த புளிப்கர்ட் ஆப்பிலியட் மார்க்கெட்டிங் பற்றி பதிவு நமது வலைப்பக்கத்தில் உள்ளது. அதைப் படிக்க கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி திறக்கவும்.
படிக்க : புளிப்கர்ட் அப்ளியேட் மார்க்கெட்டிங் என்றால் என்ன? அதன் மூலம் சம்பாதிப்பது எப்படி?
மி ஷோ மறுவிற்பனை
மேலே உள்ள இரண்டு நிறுவனங்களைப் போலவே இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனம் மீசோ ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ளது இவர்களுக்கு ஒரு அப்ளிகேஷனும் இருக்கிறது. இதில் பலவகையான பொருள்கள் நேரடி விற்பனையாளர்களிடம் இருந்து கிடைக்கும். முக்கியமாக அவை அனைத்துமே இந்தியாவில் உருவாக்கப்பட்டதாக இருக்கும். எனவே இந்திய பொருட்களை வாங்க வேண்டும் எனில் இது போன்ற செயலிகளைப் பயன்படுத்தலாம். இந்த அப்ளிகேஷன் மூலம் எப்படி மறு விற்பனை செய்து பணத்தை அதிகமாக சம்பாதிப்பது என்று பதிவு ஏற்கனவே நமது பக்கத்தில் உள்ளது. அதை படிக்க கீழே உள்ள லிங்க் பயன்படுத்தி படிக்கவும்.
கிலோரோடு மறுவிற்பனை
இதுவும் ஒரு செயலி ஆகும். இதன் மூலம் நீங்கள் பல வகையான பொருட்களை மறு விற்பனை செய்து பல்லாயிரம் ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். இந்த இரண்டு அப்பிளிகேஷன் களிலும் ஒரு லிங்க் ஷேர் செய்தால் மட்டுமே போதும் உங்களுக்கு பணம் வந்து கொண்டே இருக்கும். அல்லது ஒரு பொருளை மற்றவர்களுக்கு ஆர்டர் செய்தால் மட்டுமே போதும் உங்களுடைய வேலை முடிந்துவிடும். உங்களுடைய கமிஷன் அனைத்தும் வாரம் ஒரு முறை நீங்கள் கொடுத்திருக்கும் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும். இவற்றில் மிகவும் அதிகமான பயன்கள் உள்ளது. இந்த அப்ளிகேஷன் எப்படி நிறுவுவது மற்றும் இதில் எப்படி லாபம் எடுப்பது போன்ற தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க் பக்கத்தில் உள்ளது. அந்தப் பக்கத்திற்குச் சென்று படித்து நீங்களும் பயன் பெறுங்கள்.
வெப்சைட் மறுவிற்பனை
மறு விற்பனை செய்ய பல பொருள்கள் இருக்கிறது. வெப்சைடு போன்ற சாப்ட்வேர்களை நீங்கள் மறு விற்பனை செய்ய முடியும். இதன் மூலமாக உங்களுக்கு கமிஷன் மிக அதிகமாகவும் கிடைக்கும். இந்த வெப்சைட் மறுவிற்பனை செய்து கொடுத்தால் உங்களுக்கு குறைந்தபட்சம் 1000 முதல் பத்தாயிரம் ரூபாய் வரை கிடைக்கலாம். உங்களுக்கு வெப்சைட் பற்றி அறிவு இருந்தால் நீங்கள் இதை முயற்சி செய்து பார்க்கலாம்.
ஓஸ்டிங் மறுவிற்பனை
இந்த ஓஸ்டிங் என்பது ஒரு வகையான ஆன்லைன் நினைவகம் ஆகும். இது வெப்சைட் மற்றும் அது சார்ந்த அப்ளிகேஷன் இயங்க உதவுகிறது. இதனை நீங்கள் மறுவிற்பனை செய்து கொடுத்தால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். இதன் மூலமாக ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு கமிஷன் கிடைத்துக் கொண்டே இருக்கும். பல வெப்சைடு இதேபோல் நீங்கள் செய்து இருந்தால் பல வழிகளில் கமிஷன் கிடைக்கும். இந்த ஓஸ்டிங் பற்றி உங்களுக்கு அறிவு இருந்தால் நீங்கள் இதை முயற்சி செய்து வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியும்.
மேலே உள்ள நான்கு மறுவிற்பனை மட்டும் அல்லாமல் பல வகையான மறு விற்பனை செய்து சம்பாதிக்கும் தொழில்கள் உள்ளது. இவை அனைத்தை பற்றியும் நமது வலைப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் படித்து நீங்கள் பயன் பெறுங்கள். அல்லது உங்களுக்கு அப்படியே மார்க்கெட்டிங் போன்று வலைப்பக்கங்கள் பற்றி தெரிந்துகொள்ள மற்றும் அப்ளியேட் மார்க்கெட்டிங் என்றால் என்ன அதில் எப்படி சம்பாதிப்பது பெரிய நிறுவனங்கள் எவை அதிக கமிஷன் யார் கொடுப்பார்கள் என்ற தகவல்கள் கீழே உள்ள லிங்கில் உள்ளது அதை பயன்படுத்தி படித்து பயன்பெறவும்.
படிக்க : அப்ளியேட் மார்க்கெட்டிங் என்றால் என்ன? முன்னணி நிறுவனங்கள் எது?
சுலபமான வெப்சைட் & ஹோஸ்டிங் மறுவிற்பனை
வெப்சைட் மற்றும் ஹோஸ்டிங் மறு விட்பனை செய்ய சுலபமான ஒரே வழி உங்களுக்கு டொமைன், ஹோஸ்டிங் மறு விட்பனைக்கு கொடுக்கும் கம்பெனி இடம் உள்ள ஒரு சின்ன Plan தான் . அதாவது நீங்கள் வருடதிக்கு ஒரு சிறிய பணம் செலுத்தினால் மட்டும் போதும் பிறகு அணைத்து விதமான வேலைகளையும் அவர்களே பார்த்துகொள்ளவர்கள்.
உதாரணமாக நீங்கள் ரிசெல்லிங் செய்ய எந்த ஒரு பணமும் கொடுக்க தேவை இல்லை. ஆனால் நீங்கள் ரிசெல்லிங் செய்ய ஒரு தரமான வெப்சைட், ஹோஸ்டிங், மற்றும் தொழில் நுட்ப உதவி செய்ய வேண்டும். அதுவே கம்பெனி இடம் ஒரு சிறு சந்தா செலுத்தி இந்த அணைத்து உதவிகளும் பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் உங்களுக்கு அணைத்து வித அல்லது ஒரு நல்ல கம்பெனிக்கு தேவையான அனைத்தும் கிடைத்துவிடும்.
நீங்கள் இது செய்ய விரும்பினால் கோ டாடி நிறுவனத்தை அணுகலாம். அதன் லிங்க் : https://in.godaddy.com/reseller-program
இன்வெஸ்ட்மெண்ட் தேவையா?
இதுபோன்று அப்ளியேட் மார்க்கெட்டிங் மற்றும் மறுவிற்பனை செய்யும் தொழில்களுக்கு எந்த ஒரு முதலீடும் தேவைப்படாது. இதில் முதலீடு என்பது ஆன்லைனில் நீங்கள் வேலை செய்வது மட்டுமே. இவை அனைத்தையும் நீங்கள் ஆன்லைன் மூலமாகவும் செய்து பணம் சம்பாதிக்க முடியும். எனவே இதற்கு இன்வெஸ்ட்மென்ட் தேவைப்படாது.
அப்படியே நீங்கள் இன்வெஸ்ட்மென்ட் செய்து இந்த தொழில் செய்ய வேண்டுமெனில் பல நபர்களை வேலைக்கு எடுத்து அவர்களுக்கு இந்த தொழிலை எப்படி செய்வது என்று கற்றுக் கொடுத்து வேலை வாங்கலாம். அப்படி செய்தால் உங்களுக்கு லாபம் அதிகமாகக் கிடைக்கும். நீங்கள் இப்போது தான் தொடங்கப் போகிறீர்கள் என்றால் முதலில் முழுவதுமாக நீங்கள் கற்றுக் கொண்டு பிறகு இன்வெஸ்ட்மெண்ட் செய்யலாம்.
இதில் உங்களுக்கு குறைந்த அளவுதான் லாபம் கிடைத்து கொண்டிருக்கிறது என்றால் நீங்கள் இதனுடன் தொடர்புடைய ஒரு சில தொழில்களை செய்து லாபத்தை அதிகரிக்கலாம். இதனுடன் செய்யக்கூடிய தொழில்துறை பற்றி தொகுப்பு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
இதில் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
மறு விற்பனை மற்றும் அப்டேட் மார்க்கெட்டிங் செய்ய பலவகையான நிறுவனங்கள் ஆன்லைனில் இருக்கிறது மற்றும் பல வகையான பொருட்களும் ஆன்லைனில் இருக்கிறது. அந்தப் பொருள்கள் ஒரு விலையைக் கொண்டிருக்கும். அந்த விலையில் ஒரு சில கமிஷன் தொகை அடங்கியிருக்கும். நீங்கள் அந்த பொருளை விற்றுக் கொடுத்தாள் கமிஷன் கிடைக்கும். உங்களுக்கு அதிகமான கமிஷன் வேண்டுமெனில் மிகப்பெரிய பொருள்களை அல்லது கமிஷன் அதிகமாக கிடைக்கக்கூடிய பொருட்களை விற்பனை செய்து கொடுக்கலாம். மறு விற்பனை செய்வது மூலம் உங்களுடைய கமிஷன் நீங்களே முடிவு செய்ய முடியும். உங்கள் தொகையை நீங்களே செட் செய்து கொள்ளலாம். எனவே நீங்கள் விற்பனை செய்யும் பொருளுக்கு ஏற்ற கமிஷன் மட்டுமே கிடைக்கும்.
உதாரணமாக 1000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை நீங்கள் விற்று கொடுத்தால் உங்களது கமிஷன் 10% எனில் உங்களுடைய லாபம் 100 ரூபாய். அல்லது கமிஷன் 20% இருந்தால் லாபம் 200 ரூபாய் கிடைக்கும். பொருளின் விலை 10,000 ரூபாயாக இருந்தால் கமிஷன் 20% இருந்தால் உங்களுக்கு லாபம் 2000 ரூபாய் கிடைக்கும். எனவே உங்களுடைய லாபம் மற்றும் கமிஷன் நீங்கள் விற்பனை செய்து கொடுக்கும் பொருளின் விலையைப் பொறுத்து அமையும். உங்களின் லாபத்தை அதிகரிக்க ஒரு சில யோசனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
லாபத்தை அதிகரிக்க என்ன செய்வது?
இதில் லாபம் அதிகரிக்க நீங்கள் கடினமாக வேலை செய்ய வேண்டும். உங்களுடைய தொழில் பற்றி மற்ற நபர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். முடிந்தால் உங்களுடைய வலைப்பக்கத்தை பயனாளர்களுக்கு தெரியும்படி விளம்பரப்படுத்த வேண்டும். பிறகு உங்களுடைய லாபம் சிறிது சிறிதாக உயர்ந்து கொண்டே இருக்கும்.
புதிய நபர்களை உங்களுடைய தொழிலில் இணைக்க வேண்டும் எனில் ஆன்லைனில் இருக்கும் ஒரு சில வெப்சைட் மூலமாக உங்களுடைய தொழிலை பதிவு செய்து அதன் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்தலாம். உங்களின் சேவையைப் பயன்படுத்த வேண்டும் எனில் ஒரு சில மக்கள் ஆன்லைன் மூலமாக உங்களை தொடர்பு கொள்வார்கள். அதன் மூலமாகவும் உங்களுடைய தொழிலை மேம்படுத்த முடியும்.
கேள்விகளுக்கு பதில்
இந்த மறு விற்பனை மற்றும் அப்ளியேட் மார்க்கெட்டிங் முறையைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் அல்லது கருத்துக்கள் இருந்தால் கீழே உள்ள பெட்டியில் தெரிவிக்கவும்.
DISCLAIMER:
The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.