ADVERTISEMENT

How To Make Money – GlowRoad App Review

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

மறு விற்பனை ( Reselling ) செய்து சம்பாதிக்கலாம்

மறுவிற்பனை என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஒரு பொருளை குறைந்த விலையில் வாங்கி அதை அதிக விலை வைத்து விற்பது. மற்றும் அதிலுள்ள லாபம் எந்த ஒரு பெரிய வேலையும் செய்யாமல் கிடைக்கும். இதற்கு நீங்கள் உங்களுடைய பொருள்களை ஷேர் செய்தால் மட்டுமே போதும். மக்களுக்கு பிடித்திருந்தால் அதை வாங்கிக் கொள்வார்கள்.

இந்த மறு விற்பனை செய்யும் முறையை ஏற்கனவே நமது வலைத்தளத்தில் பார்த்திருக்கிறோம். அதே போலதான் இந்த அப்ளிகேஷனும் இருக்கும். இதிலும் நீங்கள் மறு விற்பனை செய்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம். நீங்கள் ஏற்கனவே  இதுபோன்ற அப்ளிகேஷனை பயன்படுத்தியுள்ளீர்கள் என்றால் உங்களுக்கு இது மிகவும் சுலபமாக இருக்கும். இல்லை என்றாலும் இந்த பதிவை தெளிவாகப் படித்தால் உங்களுக்கு நன்றாக புரியும். நீங்கள் இதில் அதிக லாபம் நிச்சயமாக எடுக்க முடியும்.

நாம் இந்த பதிவில் பார்க்கப் போவதும் கிலோரோடு எனப்படும் ஒரு அப்ளிகேசன் ஆகும். இதுவும் மீசோ போன்று மறு விற்பனை செய்யும் ஒரு அப்ளிகேஷன் ஆகும். மீசை போற்றி படிக்கவில்லை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி படிக்கவும்.

படிக்க : மீசோ மூலம் மாதம் குறைந்தது 25 ஆயிரம் சம்பாதிப்பது எப்படி?

கிலோரோடு (GlowRoad) என்றால் என்ன?

கிலோரோடு என்பது ஒரு மறு விற்பனை செய்யக்கூடிய இடமாகும் ‌. இதில் பலவிதமான பொருள்கள் அனைத்தும் கிடைக்கும். இதில் உள்ள பொருள்களை நீங்கள் விட்டுக் கொடுத்தால் உங்களுக்கு கமிசன் கிடைக்கும். அல்லது நீங்களும் வாங்கிக் கொள்ளலாம். இது இந்தியாவில் செயற்படக் கூடிய ஒரு நிறுவனமாகும். இதன் பலவிதமான பயனாளர்கள் பலவிதமான விற்பனை செய்பவர்களும் இருப்பார்கள். நீங்கள் அந்த பொருட்களில் ஏதேனும் ஒன்றை உங்களுடைய நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ ஒரு மார்ஜின் அல்லது கமிஷன் வைத்து நீங்கள் விட்டுக்கொடுத்தால் உங்களுக்கு அந்த கமிஷன் கிடைக்கும். இந்த அப்ளிகேஷன் இப்படித்தான் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இதில் நீங்கள் எந்த ஒரு இன்வெஸ்ட்மெண்ட் டும் செய்ய தேவையில்லை. உங்களுடைய வேலை மற்றவர்களுக்கு பொருளை ஷேர் செய்வது மட்டுமே.

இதில் எப்படி நமக்கு பணம் கிடைக்கும்?

ஏற்கனவே நீங்கள் மி ஷோ ( Meesho Application ) அப்பிளிகேஷன் பயன்படுத்தி இருந்தால் உங்களுக்கு இது எளிமையாக இருக்கும். மிசோ அப்ளிகேஷன் எப்படி வேலை செய்கிறதோ அதே போல் தான் இதுவும் வேலை செய்கிறது. இதில் உள்ள பொருள்களை நீங்கள் வாங்கினாலோ அல்லது மற்றவர்களுக்காக ஆர்டர் செய்தாலோ உங்களுக்கு கமிசன் கிடைக்கும். நீங்கள் இதில் பொருளை விற்கவில்லை என்றால் உங்களுக்கு எந்த ஒரு கமிஷனும் கிடைக்காது. எனவே இதில் பொருள் விற்பது மட்டுமே உங்களுடைய நோக்கமாக இருக்க வேண்டும். நீங்கள் விற்கும் பொருளுக்கு கமிஷன் உங்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். இந்த கமிஷன் அனைத்தும் உங்களுடைய பேங்க் அக்கவுண்டிற்கு மாற்றப்படும்.

ADVERTISEMENT

எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்?

இதில் எவ்வளவு பணம் குறைந்த அளவு சம்பாதிக்கலாம் என சிலருக்கு சந்தேகம் இருக்கும். நீங்கள் ஒரு பொருள் விற்றாலும் உங்களுக்கு பணம் கிடைக்கும். 100 பொருள் விற்றாலும் உங்களுக்கு பணம் கிடைக்கும். எவ்வளவு பொருள்கள் மார்ஜின் வைத்து நீங்கள் விற்பனை செய்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களுக்கு பணம் கிடைத்துக் கொண்டே இருக்கும். உதாரணமாக ஒரு பொருளின் விலை 1000 எனில் நீங்கள் 1200 என விற்றுக் கொடுத்தாள் உங்களுக்கு 200 ரூபாய் கமிஷன் கிடைக்கும். இது முக்கியமாக கமிஷன் அடிப்படையில் இயங்கி வருகிறது. எனவே எவ்வளவு பொருள் வைக்கிறீர்களோ அதற்கு ஏற்ற கமிஷன் மட்டுமே கிடைக்கும்.

படிக்க : FB / Insta லைக், ஷேர் செய்து பணம் சம்பாதிக்கலாம்

இதில் கணக்கை உருவாக்குவது எப்படி?

சரி இந்த அப்ளிகேஷனில் எப்படி கணக்கை உருவாக்குவது என்று பார்க்கலாம். முதலில் இந்தப் பதிவின் கடைசியில் உள்ள லிங்கை பயன்படுத்தி அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்து கொள்ள வேண்டும். இதை டவுன்லோட் செய்த பிறகு இன்ஸ்டால் செய்து திறந்து கொள்ள வேண்டும்.

முகப்பு பக்கத்தில் உங்களுக்கு தொடர்க ( get started ) எனும் பொத்தான் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ள வேண்டும். அடுத்து வரும் பக்கத்தில் உங்களுடைய தொலைபேசி எண்ணை தேர்வு செய்து கொள்ள வேண்டும். உங்களுடைய தொலைபேசி எண் வரவில்லை எனில் அங்கே உள்ள பெட்டியில் உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளீடாக கொடுக்க வேண்டும்.

இப்போது யூஸ் வாட்ஸ் அப் மற்றும் யூஸ் எஸ்எம்எஸ் எனும் பொதான் இருக்கும். அதில் யூஸ் வாட்ஸ்அப் என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு முறை கடவுச்சொல் வாட்ஸ்அப் மூலமாக அனுப்பப்படும். அல்லது யூஸ் எஸ்எம்எஸ் என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு முறை கடவுச்சொல் எஸ்எம்எஸ் வழியாக அனுப்பப்படும். நீங்கள் ஏதேனும் ஒரு தேர்வை தேர்வு செய்து கொள்ளலாம்.

பிறகு உங்களுடைய தொலைபேசிக்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை இந்த அப்ளிகேஷனில் உள்ளீடாக கொடுக்க வேண்டும். அதன் பிறகு உங்களுடைய அக்கௌண்ட் உருவாகி விடும். உங்களுடைய கணக்கு உருவாக்கப்பட்ட பிறகு கண்டினியூ எனும் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு அடுத்த பக்கம் திறக்கும்.

ADVERTISEMENT

அடுத்து பக்கத்தில் இந்த அப்ளிகேஷன் உங்களிடம் ஒருசில அனுமதி கேட்கும். அதில் ஸ்டோரேஜ் கான்டாக்ட் மற்றும் ஆக்சஸ் போன்ற அனுமதிகள் கேட்கும். நீங்கள் அதை தேர்வு செய்தபிறகு கண்டினியூ எனும் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு கிலோரோடு முகப்பு பக்கம் திறக்கும். அதில் பலவிதமான பொருள்களும் பலவிதமான தீர்வுகளும் இருக்கும். அதிலுள்ள பொருட்களை விற்பனை செய்து தான் நாம் கமிஷன் எடுக்கப் போகிறோம்.

Read : How To Start Reselling Business Online 2020

லாகின் செய்வது எப்படி?

நீங்கள் தவறுதலாக வெளியேறி விட்டால் அல்லது இந்த அப்ளிகேஷனை டெலிட் செய்துவிட்டாள் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் லாகின் செய்து கொள்ள முடியும். முதலில் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். அதனைத் திறந்து உங்களுடைய மொபைல் நம்பரை கொடுத்து ஒருமுறை கடவுச்சொல் மூலம் அக்கவுண்ட் வெரிஃபி செய்து லாகின் செய்து கொள்ள முடியும். இதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இதன் மூலமாக உங்களுக்கு எந்த ஒரு தொந்தரவும் வராது.

பொருட்களை விற்பது எப்படி?

சரி முதலில் இதில் பொருளை விற்பது எப்படி என்று பார்க்கலாம். ஏற்கனவே தெரிவித்தது போல் கிலோரோடு அப்பிளிகேஷன் மீசோ அப்ளிகேஷன் போல்தான் இருக்கும். அதைப் பயன்படுத்தி இருந்தால் இதை பயன்படுத்துவது எப்படி என்று உங்களுக்கே நன்றாக தெரிந்திருக்கும். நீங்கள் அதை பயன்படுத்தவில்லை என்றாலும் இந்த பதிவின் மூலம் இதை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள முடியும்.

இதில் விற்பனை செய்வதற்கு ஏதேனும் ஒரு பொருளை நீங்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும். அந்த பொருளை தேர்வு செய்த பிறகு அதனுடைய பக்கத்தை திறந்து கொள்ள வேண்டும். அந்தப் பக்கத்தில் அந்த பொருளின் படம் விலை மற்றும் அது பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவை அனைத்தையும் நீங்கள் வாட்ஸ் அப் மூலமாக நண்பர்களுக்கு பகிர முடியும்.

இந்த அப்ளிகேஷனில் நீங்கள் பொருளை பகிர்வதற்கு முன் உங்கள் நண்பர் அல்லது உறவினர் களுக்கு அந்த பொருள் தேவையா என்று கேட்டுக் கொள்ள வேண்டும். அல்லது அவர்களுக்கு என்ன பொருள் தேவை படுகிறதோ அந்த பொருளை கிலோரோடு மூலம் தேடி பொருளை பகிர வேண்டும். அப்போது தான் உங்களுடைய நண்பர்கள் அந்த பொருளை வாங்குவார்கள். இல்லையெனில் அவர்கள் அதை மதிக்க மாட்டார்கள் உங்களுக்கு கமிஷன் கிடைக்காது. எனவே உங்கள் நண்பர் அல்லது உறவினர் எந்த பொருளை வாங்கி வருவதை நீங்கள் இதில் தேர்வு செய்து பகிர்ந்தால் கட்டாயம் உங்களுக்கு கமிசன் கிடைக்கும்.

ADVERTISEMENT

இப்போது ஒரு நல்ல பொருளை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதனை திறந்து அதனுடைய தகவல்கள் படங்கள் மற்றும் விலை போன்றவற்றை பார்த்துக் கொள்ளவும். அந்த பொருளின் கீழ் என்னுடைய கடையில் சேர் ( add to my shop ) எனும் போது தான் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ள வேண்டும். இப்போது உங்களுக்கு அந்த பொருளின் மார்ஜின் கேட்கும். உங்களுக்கு எவ்வளவு சதவீதம் மார்ஜின் தேவை வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ள வேண்டும். உதாரணமாக உங்களுக்கு 10% மார்ஜின் வேண்டுமெனில் அதை தேர்வு செய்யலாம் அல்லது 100% மார்ஜின் வேண்டும் எனில் அதையும் நீங்கள் தேர்வுசெய்யலாம்.

படிக்க : செய்தி படித்தால் பணம் கிடைக்கும் அப்ப்ளிகேஷன்

மார்ஜின் எப்படி வேலை செய்யும்?

நீங்கள் தேர்வு செய்யும் பொருளின் விலை மற்றும் நீங்கள் தேர்வு செய்த மார்ஜின் அந்த பொருளின் விலையை அதிகப்படுத்தி காட்டும். அந்தப் பொருளை உங்கள் நண்பர் வாங்கி விட்டால் உங்களுக்கு அந்த மார்ஜின் கிடைக்கும். உதாரணமாக ஒரு பொருளின் விலை 400 ரூபாய் எனில் நீங்கள் மார்ஜின் தேர்வு செய்யும்போது 10% என கொடுத்து இருந்தால், அந்தப் பொருளின் விலை 440 என இருக்கும். ஆனால் உங்களுடைய மார்ஜின் 40 ரூபாய் கிடைக்கும். மார்ஜின் அதிகமாக வேண்டுமெனில் தேர்வு செய்யும் போது பத்து முதல் நூறு சதவீதம் வரை மார்ஜின் வைக்க முடியும்.

உங்களுடைய மார்ஜின் தேர்வு செய்தபிறகு நெக்ஸ்ட் எனும் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு உங்களுடைய புரோடக்ட் லிஸ்ட் கிடைக்கும். அதில் உங்களுடைய புரோடக்ட் இருக்கும். அதன் விலை பற்றிய விபரங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும். அந்த பொருளின் விலை 400 ரூபாய் உங்களுடைய மார்சின் 40 ரூபாய் மற்றும் விற்பனை செய்யும் விலை 440 ரூபாய் என இருக்கும். இந்த பொருளை நீங்கள் விற்பனை செய்தால் உங்களுடைய நண்பருக்கு மாசின் பற்றிய விபரங்கள் எதுவும் கிடைக்காது. எனவே நீங்கள் கவலையில்லாமல் மார்ஜின் வைக்கலாம்.

மார்ஜின் வைத்த பின்அந்தப் பொருளை ஷேர் எனும் பொத்தானை கிளிக் செய்து வாட்ஸ்-அப் மூலமாக ஷேர் செய்யலாம். உங்கள் நண்பருக்கும் பிடித்திருந்தால் பை ( buy now ) எனும் பொத்தானை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளலாம். உங்களுடைய நண்பருக்கு பொருளை பகிரும் போது உங்களுக்கு ஒரு லிங்க் பகிரப்படும். அந்த லிங்க் பயன்படுத்தி உங்களுடைய நண்பர் அந்த பொருளை திறந்தால். நீங்கள் எவ்வளவு கமிஷன் வைத்துள்ளார்களா அந்த அளவுக்கு பொருளின் விலை காட்டப்படும். ஆனால் உங்களுடைய மார்ஜின் கமிஷன் பற்றி விவரம் எதுவும் கிடைக்காது.

பணத்தை எடுப்பது எப்படி?

பணத்தை எடுப்பதற்கு முதலில் உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் மற்றும் அது சம்பந்தப்பட்ட தகவல்களை உள்ளீடாக கொடுக்க வேண்டும். கிலோரோடு திறந்த பிறகு கீழே கடைசி தேர்வு ப்ரோபைல் எனும் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுடைய பெயர் அட்ரஸ் புகைப்படம் இது போன்ற பல விதமான தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். அவை அனைத்தையும் நீங்கள் சரியாக பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

அடுத்த தேர்வில் உங்களுக்கு உங்களுடைய பேங்க் பற்றிய தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். அதிலும் உங்களுடைய வங்கியின் பெயர் ஐஎஃப்எஸ்சி கோடு மற்றும் வங்கி அக்கவுண்ட் நம்பர் போன்றவற்றை உள்ளீடாக கொடுக்க வேண்டும். அதை பூர்த்தி செய்த பிறகு சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது அதில் உங்களுடைய வங்கி விவரங்கள் சேமிக்கப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை உங்களுடைய பணம் அனுப்பப்படும். நீங்கள் எவ்வளவு பணம் ஒரு வாரத்தில் சம்பாதித்து இருக்கிறீர்களோ அந்த பணம் வெள்ளிக்கிழமை தோறும் நீங்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும். எனவே வங்கி விவரங்களை நீங்கள் சரியாக கொடுத்து கொள்ள வேண்டும்.

இதே போன்ற வேறு தொழில்கள்

இதேபோன்று மறு விற்பனை செய்து செய்யக்கூடிய அதிகமான நிறுவனங்கள் இருக்கிறது. அவை அனைத்தையும் நீங்கள் சுலபமாக செய்ய முடியும். பகுதி நேர வேலை செய்தாலும் இதில் நீங்கள் நல்ல கமிஷன் எடுக்க முடியும். இதில் முழு நேரம் நீங்கள் வேலை செய்தாலும் உங்களுக்கு மிக அதிகமான கமிஷன் கிடைக்கும். இதேபோல் உள்ள வேறு சில அப்ளிகேஷன்களை பற்றிய தகவல்களும் நமது வலைத்தளத்தில் உள்ளது. அவை நீங்கள் படிக்க வில்லை எனில் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி படிக்கவும்.

படிக்க : அப்ளியேட் மார்க்கெட்டிங் என்றால் என்ன? அதை எப்படி செய்வது? எந்த நிறுவனத்தில் செய்வது?

கேள்விகளுக்கு பதில்

உங்களுக்கு இந்த பதிவில் கிலோரோடு பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை கீழே உள்ள கருத்து பெட்டியில் தெரிவிக்கவும் உங்களுக்கு தேவையான பதில் கூடிய விரைவில் அளிக்கப்படும்.

டவுண்லோட் லிங்க்

இங்கே கிளிக் செய்யவும்

ADVERTISEMENT
Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 206