ADVERTISEMENT

How To Make Money From Udemy – Freelancer Business Ideas

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

Passive Income – பேசிவ் இன்கம்

நாம் பல வழிகளில் பணத்தை சம்பாதித்து இருப்போம். ஆனால் அவை அனைத்துமே ஆக்டிவ் இன்கம் ( Active income ) ஆகும். ஆனால் இந்தப் பதிவில் பார்க்கப் போவது பேசிவ் இன்கம் ( Passive Income ) ஆகும். இந்த பேசிவ் இன்கம் மூலமாக நாம் ஒருமுறை ஒரு வேலையை செய்துவிட்டால் அல்லது உருவாக்கிவிட்டால் அதில் பணம் வந்துகொண்டே இருக்கும். நாம் எந்த ஒரு வேலையும் செய்யாமல் பணம் சம்பாதிக்க முடியும்.

 

வீடியோவில் பணம் சம்பாதிப்பது எப்படி?

நாம் இந்த வேலையில் தமிழில் பயிற்சி வீடியோ அப்லோட் செய்தால் மட்டும் போதும். நமக்கு பணம் வந்து கொண்டே இருக்கும். நாம் இதில் பார்க்கப் போகிற வேலை அப்படித்தான் இருக்கும். இந்த வேலையை செய்ய உங்களுக்கு ஏதேனும் ஒரு பயிற்சி தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் செய்யும் வேலையை கூட இதில் வீடியோவாக செய்து பணத்தை சம்பாதிக்க முடியும். நீங்கள் ஒரு ஆசிரியர் எனில் இதில் நீங்கள் அதிக பணத்தை சம்பாதிக்க முடியும். சரி Udemy முதலில் என்றால் என்ன அதில் எப்படி பணம் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

 

Udemy என்றால் என்ன?

இந்த உடிமி என்பது ஒரு படிக்கும் வலைத்தளம் ஆகும். இதன் மூலமாக பல்வேறு வகையான இலவசமாக மற்றும் பணம் செலுத்தி பயிற்சிகளை வாங்கிக் கொள்ள முடியும். இந்த வலைத்தளத்தில் பல்லாயிரக்கணக்கான வகுப்புகள் மற்றும் வீடியோக்கள் உள்ளது. இதன் மூலமாகத்தான் நாம் பணம் சம்பாதிக்க போகிறோம்.

ADVERTISEMENT

படிக்க : மாதம் 25000 ரூபாய் சுலபமாக சம்பாதிக்கலாம்

பணம் சம்பாதிப்பது எப்படி?

உங்களுக்கு தெரிந்த பயிற்சிகளை ஒரு வீடியோவாக செய்து. அதை இந்த வலைத்தளத்தில் அப்லோடு செய்து வைத்திருந்தால். வேறு யாராவது ஒருவருக்கு உங்களுடைய பயிற்சி தேவைப்பட்டால் அதை காசு கொடுத்து வாங்கி அவர்கள் படித்துக் கொள்வார்கள். அதன் மூலம் உங்களது பணம் கிடைக்கும்.

இந்த உடிமி வலைத்தளத்தில் நீங்கள் பதிவு செய்ய உங்களுக்கு ஏதேனும் ஒரு தொழில் அல்லது பயிற்சி மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்த தெரிந்திருக்க வேண்டும். அப்படி தெரிந்திருந்தால் நீங்கள் அந்த பயிற்சியை ஒரு முறை வீடியோவாக செய்து அப்லோடு செய்து வைத்திருந்தால். உங்களுக்கு பணம் கிடைக்கும். இது ஒரு முறை மட்டுமல்ல எத்தனை முறை உங்கள் பயிற்சியை வாங்குகிறார்களோ எத்தனை முறை உங்களுக்கு பணம் கிடைத்துக் கொண்டே இருக்கும். உங்களுக்கு என்ன பயிற்சி அப்லோட் செய்ய வேண்டும் என்று குழப்பம் இருந்தால் கீழே உள்ள பயிற்சிகளை பார்க்கவும்.

 

என்னென்ன பயிற்சி அப்லோடு செய்யலாம்?

இந்த வலைத்தளத்தில் அனைத்து விதமான பயிற்சிகளையும் நீங்கள் அப்லோடு செய்யலாம். அல்லது உங்களுக்கு என்ன வேலை தெரிகிறதோ அதை கூட அப்லோட் செய்யலாம். சரி இந்த வலைத்தளத்தில் உள்ள சில பொதுவான பயிற்சிகளைப் பற்றி லிஸ்ட் கீழே உள்ளது அதை பார்த்து பயன்பெறவும்.

பிசினஸ் டெவலப்மெண்ட் டிசைனிங் போட்டோகிராபி டெவலப்மென்ட் மார்க்கெட்டிங் ஐஐடி அண்ட் சாஃப்ட்வேர் பேர்சனல் தேவலப்மன்ட் லாங்குவேஜ் டெவலப்மெண்ட் இது போன்று அனைத்து விதமான பயிற்சிகளையும் நீங்கள் அப்லோடு செய்யலாம். இங்கே சிறிது பயிற்சிகள் மட்டுமே உதாரணத்திற்கு குறிப்பிட்டுள்ளது. ஆனால் நீங்கள் இது தவிர அதிகமான பயிற்சிகளை அப்லோடு செய்யலாம்.

ADVERTISEMENT

படிக்க : செய்தி படித்தால் பணம் கிடைக்கும் அப்ப்ளிகேஷன்

எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்?

இந்த உடிமி வலைத்தளத்தில் நீங்கள் அன்லிமிடெட் பணம் சம்பாதிக்க முடியும். உங்களுடைய பயிற்சிகளை மக்கள் எத்தனை பேர் வாங்கிக் கொண்டே இருக்கிறார்களோ அதுவரை உங்களுக்கு பணம் வந்து கொண்டே இருக்கும். இதில் நீங்கள் அதிகமான பயிற்சிகள் அல்லது வகுப்புகள் நடத்தினார் உங்களுக்கு அதிகமான பணமும் கிடைக்கும். ஏனெனில் அதிக மக்கள் வேறு வேறு பயிற்சிகளை விரும்புவார்கள் எனவே நீங்களும் வெவ்வேறு பயிற்சிகளை அப்லோடு செய்தால் பணம் அதிகமாக கிடைக்கும். சரி இந்த வலைத்தளத்தில் எப்படி ரெஜிஸ்டர் செய்வது என்று பார்க்கலாம்.

 

ரெஜிஸ்டர் செய்வது எப்படி?

முதலில் இந்த வலைத்தளத்தை திறந்து கொள்ளவும். இந்த வலைத் தளத்தின் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது அதை கிளிக் செய்து திறந்து கொள்ளவும்.

உடிமி லின்க் : go to google and search udemy

இந்த உரிமை வளைத்தளத்திற்கு மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து நுழைந்து கொள்ளவும். பின்பு அதில் பல வகையான பயிற்சிகள் கொடுக்கப்பட்டிருக்கும். அந்தப் பயிற்சிகள் அனைத்தும் உங்களைப்போலவே வேறு ஒரு நபர் ஆன்லைனில் அப்லோடு செய்து உங்களுக்கு விருப்பமிருந்தால் அந்த பயிற்சிகளை வாங்கிக் கொள்ளலாம். இல்லையெனில் நீங்கள் அவர்களைப் போலவே ஒரு பயிற்சியை உங்கள் மொழியில் கற்பிக்கலாம்.

இப்பொழுது மேலே இடது புறம் உள்ள Teach on Udemy எனும் பொத்தானை கிளிக் செய்யவும் ‌. அடுத்து வரும் பக்கத்தில் உங்களுக்கு ஒரு சில தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை படித்துக் கொள்ளவும். இப்போது அந்தப் பக்கத்தில் Become an instructor எனும் பொத்தானை கிளிக் செய்யவும்.

ADVERTISEMENT

அதை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு ஒரு சிறிய விண்டோ திறந்து அதில் உங்களுக்கு ஒரு சில கேள்விகள் கேட்கும். அதில் உங்கள் தரவுகளை உள்ளிடவும்.
Ful name : உங்களுடைய முழு பெயரை இங்கே கொடுக்கவும்.
Email : உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை இங்கே உள்ளிடவும்.
Password : உங்களுக்கு தேவையான ஒரு கடவுச்சொல்லை பயன்படுத்திக் கொள்ளவும்.

படிக்க : FlipKart மூலம் ஷேர் செய்து பணம் சம்பாதிப்பது எப்படி?

இப்போது Signup எனும் பொத்தானை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்த பக்கம் திறக்கும். அந்தப் பக்கத்தில் உங்களுடைய ஒரு தடவை கொடுக்க வேண்டும். அதில் உங்களிடம் நீங்கள் இதற்கு முன் வேறு எங்கேயாவது பயிற்சி கொடுத்து விடுகிறீர்களா என்று இருக்கும். அதில் உங்களுக்கு 4 தேர்வுகள் இருக்கும். அதில் ஏதேனும் ஒன்றை செலக்ட் செய்து கொள்ளவும். அதிலுள்ள தேர்வுகள் ஆன்லைனில் பயிற்சி அளித்து உள்ளேன், நான் ஒரு ஆசிரியர், எனக்கு அதிக தகவல்கள் தெரியும், மற்றும் மற்றவை. இதில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அடுத்து கண்டினியூ எனும் பொத்தானை கிளிக் செய்யவும்.

அடுத்து வரும் பக்கத்தில் உங்களிடம் வீடியோ பற்றிய தகவல் கேட்கும். அதில் உங்களுக்கு வீடியோ எடிட் செய்ய தெரியுமா எவ்வளவு எடிட் செய்ய தெரியும் அல்லது ஏற்கனவே வீடியோ உள்ளதா என்று கேட்கும். நீங்கள் என்ன பதில் கூற விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்து கொள்ளவும். உதாரணமாக நீங்கள் வீடியோ செய்யத் தெரியவில்லை என்றால் நான் புதிது எனும் தேர்வை செலக்ட் செய்து கண்டினியூ எனும் பொத்தானை கிளிக் செய்யவும். இப்பொழுது உங்களுக்கு அடுத்த பக்கம் ஓபன் ஆகும்.

தொடர்ந்து வரும் பக்கத்தில் உங்களுடைய சமூக மக்கள் பற்றி கருத்து கேட்கும். அதாவது நீங்கள் இந்த பயிற்சிகளை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள உங்களிடம் போதுமான அளவு சோசியல் மீடியா மக்கள் உள்ளார்களா என கேட்கும். நீங்கள் இந்த பயிற்சிகளை மற்றவர்களுக்கு பகிர்ந்தால் கட்டாயம் மற்றவர் வாங்குவார்களா என்ன மறைமுகமாக கேட்கும். நீங்கள் உங்களுக்கு எது விருப்பமோ அதை தேர்வு செய்து கொள்ளவும். இப்போது கண்டினியூ எனும் பொத்தானை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்த பக்கம் திறக்கும்.

அதில் உங்களுக்கு யூடுமி டேஷ்போர்டு இருக்கும். அதில் உங்களை ஒரு பயிற்சி க்ரியேட் செய்ய சொல்லும். நீங்கள் பயிற்சியை இப்போதே தொடங்க விரும்பினால் கிரியேட் இவர் கோர்ஸ் ( Create your course ) எனும் பொத்தானை கிளிக் செய்யவும்.

ADVERTISEMENT

அந்தப் பக்கத்தில் உங்களுக்கு ஒரு பயிற்சியை தொடங்க வேண்டுமா அல்லது ஒரு டெஸ்ட் வைக்க வேண்டுமா என கேட்கும். அதில் நீங்கள் எதை செய்ய போகிறீர்களோ தேர்வு செய்து கொள்ளவும். இப்போது கண்டினியூ எனும் பொத்தானை கிளிக் செய்யவும்.

தொடர்ந்து வரும் பக்கத்தில் உங்களுடைய பயிற்சியின் தலைப்பை கேட்கும். அதில் உங்களுடைய பயிற்சி தலைப்பை கொடுக்க வேண்டும். அந்த தலைப்பு 60 அளவு நீளம் மட்டுமே இருக்க வேண்டும். இப்போது கண்டினியூ எனும் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

படிக்க : FB / Insta லைக், ஷேர் செய்து பணம் சம்பாதிக்கலாம்

அடுத்து வரும் பக்கத்தில் நீங்கள் எந்த வகையில் பயிற்சி அளிக்க போகிறீர்களோ அதை தேர்வு செய்து கொள்ளவும். இப்போது கண்டனி எனும் பொத்தானை கிளிக் செய்யவும்.

நீங்கள் எவ்வளவு மணி நேரம் இந்தப் பயிற்சி அளிக்க செலவு செய்தீர்கள் என கேட்கும். அந்தப் பக்கத்தில் இருக்கும் தேர்வுகள் ஏதேனும் ஒன்றை செலக்ட் செய்து கொள்ளவும். இப்போது கிரியேட் கோர்ஸ் எனும் பொத்தானை கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு அடுத்த பக்கம் திறக்கும்.

அதில் உங்களுடைய மாணவர்கள் விரும்பும் டேக் மற்றும் மாணவர்கள் எளிதாக உங்கள் கோர்ஸ் பயன்படுத்த வார்த்தைகளை கொடுக்க வேண்டும். இதை கொடுத்த பிறகு உங்களுக்கு அடுத்த கேள்வி கேட்கும் அதில் உங்களுக்கு என்ன பதில் தெரிகிறதோ அதை கொடுக்கவும். இவை அனைத்தையும் பூர்த்தி செய்துவிட்டு Submit for review எனும் பொத்தானை கிளிக் செய்யவும்.

ADVERTISEMENT

உங்களுடைய பயிற்சி இப்போது உடுமி ஊழியரால் பார்க்கப்பட்டு உங்களுடைய நம்பகத்தன்மையை சோதிப்பார்கள். உங்களுடைய ரிவ்யூ முடிந்த பிறகு உங்களுக்கு மெயில் வரும். அதன் பிறகு நீங்கள் உங்களுடைய பயிற்சி வீடியோக்கள் மற்றும் அதன் டைட்டில் டிஸ்கிரிக்ஷன் போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளலாம். அதன் பிறகு நீங்கள் உங்களுடைய பயிற்சிக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அதை செய்து கொள்ளலாம்.

 

லாகின் செய்வது எப்படி?

நீங்கள் இந்த வலைத் தளத்தில் லாகின் செய்ய முதலில் கொடுத்த உங்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உள்ளே கொடுத்து நுழைந்து கொள்ளலாம். உங்களுடைய பாஸ்வேர்ட் மறந்து விட்டால் அதில் பார்கெட் எனும் லிங்கை கிளிக் செய்து உங்களுடைய பாஸ்வேர்ட் ரீசெட் செய்து கொள்ளலாம். அதன் பிறகு உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு வரும் லிங்க் பயன்படுத்தி உள்ளே நுழைந்து கொள்ளலாம்.

 

பணத்தை எடுப்பது எப்படி?

இந்த உடிமி வலைத்தளத்தில் இருந்து பணத்தை நீங்கள் எளிமையாக எடுத்துக் கொள்ளலாம். உங்களுடைய பயிற்சி விற்பனை ஆன பிறகு உங்களுக்கு பணம் கிடைக்கும். விற்பனையை அதிகரிக்க நீங்கள் தான் முயற்சி செய்ய வேண்டும். ஒரு விற்பனை முடிந்துவிட்டது என்றால் நீங்கள் கொடுத்த பேபால் அல்லது பேங்க் அக்கவுண்ட் மூலம் பணம் அனுப்பப்படும். உங்களுடைய பயிற்சி வகுப்புகள் எவ்வளவு இருக்கிறதோ அதற்கு ஏற்ப உங்களுக்கு பணம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

ADVERTISEMENT

படிக்க : PayPal அக்கௌண்ட் முழுமையாக திறப்பது எப்படி? How to register PayPal Account?

 

கேள்விகளுக்கு பதில்

உங்களுக்கு உடுமி பற்றிஎன்ன சந்தேகம் இருந்தாலும் இந்த பதிவில் கீழ் உள்ள கருத்து பெட்டியில் தெரிவிக்கவும் உங்களுக்கு பதில் விரைவில் கொடுக்கப்படும்.

தமிழில் வீடியோ அப்லோடு செய்யலாமா?

ஆம். நீங்கள் தமிழில் அல்லது உங்களுக்கு என்ன மொழி தெரிகிறதோ அத்தனை மொழிகளிலும் வீடியோ அப்லோட் செய்யலாம். உங்கள் மொழி தெரிந்த மக்கள் இந்த பயிற்சிகளை வாங்குவார்கள்.

எவ்வளவு வீடியோ அப்லோட் செய்யலாம்?

உங்களுக்கு கொடுக்கப்பட்ட அக்கவுண்ட் மூலமாக நீங்கள் எவ்வளவு பயிற்சி வேண்டுமானாலும் அப்லோட் செய்து கொள்ளலாம். அந்தப் பயிற்சிகளில் எவ்வளவு வீடியோ இருந்தாலும் அப்லோடு செய்து கொள்ளலாம். குறிப்பாக பயிற்சிகளில் குறைந்த மணி நேரம் வீடியோ இருந்தால் அதிகமான மாணவர்கள் வாங்குவார்கள்.

எவ்வளவு நாள் வீடியோ இருக்கும்?

இந்த வலைத்தளத்தில் உங்களுடைய அக்கௌண்ட் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் பொழுது உங்களுடைய வீடியோக்களும் அப்படியே இருக்கும். யாராவது வாங்கினால் உங்களுக்கு பணம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

ADVERTISEMENT

படிக்க : ஆன்லைனில் கேம் விளையாடி பணம் சம்பாதிக்கலாம்

எந்த வழியில் பணம் எடுக்கலாம்?

இந்த வலைத்தளத்தில் இருந்து உங்களுடைய பேங்க் அக்கவுண்டில் அல்லது பேடிஎம் மூலமாக பணத்தை எடுக்கலாம்.

எத்தனை மாணவர்கள் வாங்குவார்கள்?

உங்களுடைய பயிற்சி எவ்வளவு மாணவர்களுக்கு தேவைப்படுகிறதோ அனைவரும் வாங்குவார்கள். குறிப்பாக நீங்கள் சரியாக பயிற்சி வகுப்பு நடத்தினால் அதிகமான மக்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது ‌.

மாணவர்களை அதிகரிக்க வழி என்ன?

மாணவர்களே அதிகரிக்க உங்களுடைய பயிற்சிகளில் ஒரு சில வகுப்புகளை இலவசமாகக் கொடுக்கலாம் அல்லது குறைந்த விலையில் கொடுக்கலாம். இதன் மூலமாக அதிகமான மாணவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும்.

DISCLAIMER:

The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 210