ADVERTISEMENT

How To Create PayTM Account – Complete Setup Guide

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

PayTM Account

இந்த பதிவில் ஒரு முழுமையான பேட்டியும் அக்கவுண்டை எப்படி உருவாக்குவது என்று தெளிவாக பார்க்கலாம்.

பேடிஎம் இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பண பரிவர்த்தனை எளிமையாக ஆன்லைனில் செய்ய உதவும் அப்ளிகேஷன் ஆகும். இதன் மூலமாக பண பரிவர்த்தனைகளை மிகவும் சுலபமாக செய்ய முடியும்.

பேடிஎம் என்றால் என்ன?

முதலில் பேடிஎம் என்றால் என்ன இது எதற்கு பயன்படுகிறது என்று பார்க்கலாம். பேடிஎம் என்பது ஒரு வாலட் ஆகும். இதன் மூலம் நமது பணத்தை எந்தவொரு பிடிமானமும் இல்லாமல் பயன்படுத்தலாம். அதாவது உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் இருந்து பணத்தை பயன்படுத்த ஒரு அளவு இருக்கும். அந்த அளவுக்கு மேல் பணத்தை பரிமாற்றம் செய்தால் அதற்கு பிடிமானம் எடுப்பார்கள்.
ஆனால் இதுபோன்ற wallet களில் நாம் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பணத்தை செலவு செய்யலாம். எந்தவொரு பிடிமானமும் இருக்காது.

படிக்க : மாதம் 50000 அமேசான் மூலம் சம்பாதிக்கலாம்

பேடிஎம் வசதிகள்

பேடிஎம் இல் பல வசதிகள் உள்ளது. நாம் ஆன்லைனில் அனைத்து விதமான பேமெண்ட் களையும் அல்லது பண பரிவர்த்தனைகளை செய்ய முடியும். பேடிஎம் இல் உள்ள வசதிகள் ஒரு சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணத்தை அனுப்ப மற்றும் பெற : உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும்.
மொபைல் ரீசார்ஜ் செய்ய : ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு என அனைத்துவித சிம் கார்டு செய்யலாம்.
மின்சார பில் செலுத்த : இந்தியா முழுவதும் மின்சார பில் செலுத்த முடியும்.
டிவி ரீசார்ஜ் செய்ய : உங்களுடைய டிடிஎச் தொலைக்காட்சிக்கு சந்தா செலுத்த முடியும்.
மெட்ரோ புக் செய்ய : மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்த முடியும்.
லேண்ட்லைன் ப்ரோட்பாண்ட் கட்டணம் செலுத்த : உங்களுடைய வீட்டிலுள்ள லேண்ட்லைன் மற்றும் இன்டர்நெட் ப்ரோட்பாண்ட் கட்டணம் செலுத்த பயன்படும்.
இதேபோல பாஸ்ட் டேக் , ஆன்லைன் ஷாப்பிங், பஸ் டிக்கெட் புக்கிங், கால் டாக்ஸி, சினிமா டிக்கெட் எடுக்க மற்றும் பலவித இடங்களில் இந்த பேடியம் பயன்படும். இந்த பேடிஎம் பயன்படுத்தி உங்களுடைய ஆன்லைன் ஷாப்பிங் கடைகளை இன்னும் எளிமையாக மாற்ற முடியும்.

ADVERTISEMENT

பேடிஎம் உருவாக்க இது தேவை

உங்களுக்கு தேவையான பேட்டியும் அக்கவுண்ட் உருவாக்க முன் உங்களுடைய தொலைபேசி என் உள்ள ஆண்ட்ராய்டு போனில் இன்டர்நெட் கனெக்ட் செய்யவும். தேவையான சான்றிதழ்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். இன்டர்நெட் கனெக்சன் சரி பார்க்கவும்.

பேடிஎம் உருவாக்குவது எப்படி?

முதலில் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பேடிஎம் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளவும். உங்களுக்கு அப்ளிகேஷன் தேவை இல்லை என்றால் பேடிஎம் வலைத்தளத்தில் ரெஜிஸ்டர் செய்யலாம்.

பேடிஎம் அப்ளிகேஷன் லிங்க் :

PayTM வலைத்தள லிங்க் : click here

பேடிஎம் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்த பிறகு இன்ஸ்டால் செய்யவும். இதை இன்ஸ்டால் செய்த பிறகு ஓபன் செய்யவும்.

இப்பொழுது பேடிஎம் உங்களிடம் ஒரு சில அனுமதி கேட்கும் அதற்கு அனுமதி கொடுக்கவும்.

இப்பொழுது உங்களது மொழியை தேர்வு செய்ய சொல்லும். உங்களுக்கு என்ன மொழி தெரிகிறதோ அல்லது நீங்கள் எந்த மொழியில் பேடிஎம் பயன்படுத்த போகிறீர்களோ அந்த மொழியை தேர்வு செய்யவும். பிறகு கண்டினு ( Continue ) என்பதை கிளிக் செய்யவும்.

ADVERTISEMENT

அடுத்து வரும் பக்கத்தில் உள் நுழை ( Login to Paytm ) மற்றும் புதிய கணக்கை உருவாக்கு ( Create a new account ) எனும் இரண்டு தேர்வுகள் இருக்கும். நீங்கள் ஏற்கனவே பேடிஎம் உருவாக்கிவிட்டால் உள்நுழை என்பதை தேர்வு செய்யவும். புதிதாக உருவாக்க விரும்பினால் உருவாக்கு என்பதை தேர்வு செய்யவும்.

படிக்க : கூகிள் பே கணக்கு உருவாக்கி பணம் அனுப்புவது / பெறுவது எப்படி?

தொடர்ந்து வரும் பக்கத்தில் உங்களுடைய தொலைபேசி எண் கேட்கும். உங்களுடைய பேங்க் அக்கவுண்டில் எந்த தொலைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளது அந்த எண்ணெய் உள்ளிடுவது நல்லது. ஏனெனில் யுபிஐ பேமெண்ட் வசதிகளுக்கு சுலபமாக இருக்கும். நீங்கள் யுபிஐ பேமெண்ட் செய்யப்போவது இல்லை என்றால் எந்த மொபைல் நம்பர் வேண்டுமானாலும் கொடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது Proceed எனும் பொத்தானை கிளிக் செய்யவும்.

அடுத்து வரும் பக்கத்தில் நீங்கள் கொடுத்த மொபைல் நம்பருக்கு ஒரு OTP ( ஒருமுறை கடவுச்சொல் ) வந்திருக்கும். அதை இந்த பக்கத்தில் பூர்த்தி செய்யவும். ஒருவேளை உங்களுக்கு இந்த ஒருமுறை கடவுச்சொல் வரவில்லை எனில் திரும்ப அனுப்பு ( Resend OTP ) என்பதை கிளிக் செய்யவும்.

ஒருமுறை கடவுச்சொல் பூர்த்தி செய்த பிறகு தொடர்க ( Proceed ) என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது உங்களுக்கான பேடிஎம் வாலட் உருவாக்கப்பட்டிருக்கும். அடுத்து வரும் பக்கத்தில் உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் இ-மெயில் ஐடி சரியாக கொடுத்து சேமித்து வைத்துக் கொள்ளவும். ஏனெனில் உங்கள் பாஸ்வேர்ட் தொலைந்து விட்டால் இதைக்கொண்டு திரும்பப் பெற முடியும்.

ஆனால் இந்த பேடிஎம் வாலட் நீங்கள் பயன்படுத்த வேண்டுமெனில் நீங்கள் இந்த வாலட் ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதனை இரண்டு வழிகளிலும் ஆக்டிவேட் செய்ய வேண்டும். பாதி ஆக்டிவேட் செய்வது மற்றும் முழுமையாக ஆக்டிவேட் செய்வது. பாதி ஆக்டிவேட் செய்வது என்றால் உங்களால் பணத்தை பெற முடியும் ஆனால் அனுப்ப முடியாது மற்றும் யுபிஐ பேமென்ட் வசதி அனுமதி கிடைக்காது. முழுமையாக ஆக்டிவேட் செய்தால் மட்டுமே இது போன்ற வசதிகள் கிடைக்கும். இதை எப்படி ஆக்டிவேட் செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பேடிஎம் பாதி ஆக்டிவேட் செய்வது எப்படி?

பேடிஎம் டாஸ் போர்டுக்கு உள்ளே வரவும். மேலே இடது புறம் உள்ள மெனு பட்டனை கிளிக் செய்யவும். இப்பொழுது உங்களுடைய மொபைல் நம்பர் இருக்கும். அதன் அருகில் மஞ்சள் நிற ஆச்சரிய குறி ( ! ) இருக்கும். இதற்கு அர்த்தம் உங்களுடைய கணக்கு இன்னும் ஆக்டிவேட் செய்ய வில்லை என்பதாகும்.

இப்பொழுது உங்களுடைய மொபைல் நம்பரை கிளிக் செய்க. அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் கணக்கு இன்னும் ஆக்டிவேட் செய்ய வில்லை ( Your wallet is not active ) என்று கொடுக்கப்பட்டிருக்கும். அதற்கு கீழே ஆக்டிவேட் செய்ய ( Activate Now ) என்பதை கிளிக் செய்க.

அடுத்து வரும் பக்கத்தில் உங்களுடைய சான்றிதழ்களை இணைக்க சொல்லும். இதில் உங்களிடம் எந்த சான்றிதழ் உள்ளதோ அதை இணைத்து பேடிஎம் வாலட் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். இந்த ஆக்டிவேட் செய்வது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை இணைத்து ஆக்டிவேட் செய்யலாம். உங்களிடம் எது உள்ளதோ அதை தேர்வு செய்து ஆக்டிவேட் செய்க.

படிக்க : முழுமையான PhonePe அக்கௌன்ட் உருவாக்குவது எப்படி?

Passport : உங்களிடம் பாஸ்போர்ட் உள்ளது எனில் இதை தேர்வு செய்து உங்கள் பாஸ்போர்ட்டில் உள்ள பெயர் மற்றும் நம்பரை உள்ளீடு செய்து கொள்ளவும்.
Voter ID : உங்களிடம் ஓட்டர் ஐடி உள்ளது எனில் உங்களுடைய பெயர் மற்றும் ஓட்டர் ஐடி நம்பர் உள்ளீடு செய்து கொள்ளவும்.
Driving Licence : டிரைவிங் லைசென்ஸ் மூலமாக ஆக்டிவேட் செய்ய விரும்பினால் உங்கள் பெயர் மற்றும் டிரைவிங் லைசன்ஸ் நம்பர் கொடுத்து ஆக்டிவேட் செய்யலாம்.
NREGA Job Card : இந்த கார்டு மூலம் ஆக்டிவேட் செய்ய உங்கள் பெயர் மற்றும் கார்டு நம்பரை உள்ளீடு செய்க.

அடுத்து ” I confirm … ” எனும் செக் பாக்ஸ் ஐ கிளிக் செய்து சப்மிட் ( Submit ) எனும் பொத்தானை தேர்வு செய்யவும். இப்பொழுது உங்களுடைய வாலட் ஆக்டிவேட் செய்யப்பட்டது என்று குறிப்பிட்டு இருக்கும். உங்கள் வாலட் ஆக்டிவேட் செய்யவில்லை எனில் உங்கள் தரவுகளை பரிசோதனை செய்யவும். அல்லது வேறு சான்றிதழ்களை பயன்படுத்தி பார்க்கவும்.

ADVERTISEMENT

குறிப்பு : ஒரு சான்றிதழ் ஒரு கணக்கிற்கு மட்டும் செல்லுபடியாகும். உங்களுக்கு இரண்டு அல்லது நான்கு அக்கவுண்ட் வேண்டுமெனில் நான்கு விதமான மொபைல் நம்பர் மற்றும் 4 சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும்.

இந்த பகுதி ஆக்டிவேட் செய்வதன் மூலமாக உங்களால் பணத்தை பேங்க் அக்கவுண்டிற்கு அனுப்ப முடியாது. மற்றும் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர முடியாது. உங்களுக்கு இந்த சேவைகள் தேவைப்பட்டால் முழுமையாக ஆக்டிவேட் செய்யவும்.

முழுமையாக ஆக்டிவேட் செய்வது எப்படி?

உங்களது பேடிஎம் அக்கவுண்ட்டை முழுமையாக ஆக்டிவேட் செய்து விட்டால் வாழ்நாள் முழுவதும் செயல்படும். இதனால் உங்கள் நண்பர்களுக்கு பணத்தை அனுப்ப முடியும் மற்றும் உங்களது வாலட்ல் இருந்து பணத்தை பேங்க் அக்கவுண்டிற்கு அனுப்ப முடியும். இந்த சேவைகள் வேண்டுமெனில் முழுமையாக ஆக்டிவேட் செய்யவும்.

இரண்டு முறைகளில் முழுமையாக பேடிஎம் அக்கவுண்ட் ஆக்டிவேட் செய்ய முடியும். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் ஓடிபி வெரிஃபிகேஷன் : ( Aadhaar verification with OTP ) உங்களுடைய ஆதார் எண் மற்றும் ஆதார் கார்டில் உள்ள பெயர் இவற்றை அடுத்த பக்கத்தில் உள்ளீடாக கொடுத்து. உங்கள் மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி என்னை உள்ளீடு செய்தால் உங்களுடைய ஆதார் ஓட்டிவி வெரிஃபிகேஷன் நிறைந்துவிடும். இந்த ஆதார் ஓட்டிவி வெரிஃபிகேஷன் உங்களுக்கு ஒரு வருடம் மட்டுமே தற்காலிகமாக செயல்படும் . முழுமையாக ஆக்டிவேட் செய்ய இரண்டாம் முறையைப் பயன்படுத்தவும்.

ADVERTISEMENT

பேடிஎம் சென்டர் வெரிஃபிகேசன் : ( Aadhaar verification at a nearby KYC point ) உங்களுடைய ஆதார் கார்டு மற்றும் ஓட்டர் ஐடி போன்றவற்றை எடுத்து உங்கள் அருகிலுள்ள கேஒய்சி பேடிஎம் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் அவர்கள் உங்களுக்கு இலவசமாக இந்த வெரிபிகேசன் செய்து கொடுப்பார்கள்.

அருகிலுள்ள பேடிஎம் ஆதார் வெரிஃபிகேஷன் நிலையங்களை பற்றி அறிய இங்கே கிளிக் செய்க.

படிக்க : பேபால் அக்கௌன்ட் முழுமையாக உருவாக்குவது எப்படி?

பேங்க் அக்கவுண்ட் இணைப்பது எப்படி?

உங்களது ஆதார் வெரிஃபிகேஷன் முழுமையாக செய்து விட்டால் உங்களால் பேங்க் அக்கௌன்ட் ஐ இணைக்க முடியும். முழுமையாக செய்யவில்லை எனில் உங்களால் இணைக்க இயலாது. பேங்க் அக்கவுண்ட் இணைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பயன்படுத்தவும்.

முதலில் பேடிஎம் மொபைல் அப்ளிகேஷனை திறந்து கொள்ளவும். உங்களது முகப்பு பக்கத்திற்கு வந்து கொள்ளவும்.

அங்கே உள்ள யு பி ஐ ( UPI ) எனும் தேர்வை செலக்ட் செய்யவும். அடுத்து பக்கத்தில் உங்களுடைய அக்கௌன்ட் எந்த பேங்க்ல் உள்ளது என்பதை செலக்ட் செய்யவும்.

ADVERTISEMENT

இப்பொழுது உங்களுடைய கணக்கு அந்த பேங்க் அக்கவுண்டில் இருந்தால் தானாக வெரிஃபை செய்து ஆக்டிவேட் ஆகிவிடும்.

உங்களுடைய பேங்க் அக்கௌன்ட் ஆக்டிவேட் ஆகி விட்டால் செட் UPI பின் ( Set UPI PIN ) என்பதை தொடவும். அடுத்து வரும் பக்கத்தில் உங்களுடைய பேங்க் படத்தை தொடவும். அடுத்து வரும் பக்கத்தில் கார்டு டீடெய்ல் என்று இருக்கும். இதில் ஒரு சில உள்ளீடுகளை கொடுக்கவேண்டும்.
Card number : உங்களது ஏடிஎம் கார்டுல் உள்ள கடைசி ஆறு இலக்கங்களை கொடுக்கவும்.
Month : உங்கள் கார்டில் உள்ள எக்ஸ்பிரி மாதத்தை கொடுக்கவும்.
Year : உங்களது கார்டில் உள்ள எக்ஸ்பைரி வருடத்தை கொடுக்கவும். இப்பொழுது நெக்ஸ்ட் எனும் பொத்தானை கிளிக் செய்க.

அடுத்து வரும் பக்கத்தில் உங்களுடைய மொபைல் நம்பருக்கு ஒரு ஓட்டி பி வரும் அதை இங்கு உள்ளீடு செய்க . அடுத்து உள்ள பெட்டியில் உங்களது ஏடிஎம் கார்டு பின் நம்பரை உள்ளீடு செய்க. அடுத்து வரும் பக்கத்தில் செட் யுபிஐ பின் என்பதில் உங்களுக்கு தேவையான நான்கு இலக்க யுபிஐ பின் நம்பரை இரண்டுமுறை உள்ளீடு செய்க . இந்தப் பின் நம்பர் செட் செய்த பிறகு உங்களுக்கு முழுமையாக யுபிஐ ஆக்டிவேட் ஆகிவிடும். இந்த பின் நம்பர் மூலமாகத்தான் பேடிஎம் இல் இருந்து யுபிஐ மூலமாக பணத்தை அனுப்ப முடியும்.

இப்போது நீங்கள் யுபிஐ மூலம் பணத்தை அனுப்ப முடியும். மற்றும் பணத்தை பெறவும் முடியும்.

பணத்தை அனுப்புவது எப்படி?

பணத்தை அனுப்ப உங்களுடைய முகப்பு பக்கத்திற்கு செல்க. அங்கே உள்ள UPI money Transfer எனும் தேர்வை செலக்ட் செய்க. இப்பொழுது நீங்கள் எந்த யுபிஐ முகவரிக்கு பணத்தை அனுப்ப வேண்டுமோ அதை உள்ளீடு செய்து கொள்ளவும். பணத்தை உள்ளீடு செய்து கொள்ளவும். பிறகு யுபிஐ பின் நம்பரை உள்ளீடு செய்து பணத்தை அனுப்ப முடியும். அல்லது QR கோடு மூலம் ஸ்கேன் செய்து பணத்தை அனுப்ப முடியும்.

ADVERTISEMENT

பணத்தைப் பெறுவது எப்படி?

பணத்தை பெறுவதற்கு உங்களுடைய யுபிஐ முகவரியை பிறருக்கு பகிர்ந்தால் போதும். உங்கள் முகவரி போன் நம்பர் கொண்டு இருக்கும். உதாரணமாக உங்களுடைய போன் நம்பர் 9876543210 எனில் உங்களுடைய பேடிஎம் யு பி ஐ ஐ டி 9876543210@paytm என இருக்கும். அல்லது உங்களுடைய கியூ ஆர் கோட் நண்பர்களுக்கு பகிர்ந்தால் போதும்.

படிக்க : FB / Insta லைக், ஷேர் செய்து பணம் சம்பாதிக்கலாம்

கேள்விகளுக்கு பதில்

உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதைக் கீழே உள்ள கருத்து பெட்டியில் தெரிவிக்கவும். உங்களுக்கு ஓரிரு நாட்களில் பதில் கிடைக்கும்.

Paytm டவுன்லோட்

பேடிஎம் டவுன்லோட் செய்ய 

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 206

2 Comments

Comments are closed.