வெப்சைட் பிசினஸ் ( Website Business )
இந்த காலத்தில் தொழில் செய்பவர்களுக்கு ஒரு வெப்சைட் இல்லை எனில் அந்த தொழிலை மக்கள் மதிக்க மாட்டார்கள். ஏனெனில் ஒரு தொழிலுக்கு வெப்சைட் இருந்தால் மட்டுமே அது நம்பகத்தன்மையான தொழிலாக இருக்கும் என மக்கள் நினைக்கிறார்கள். எனவே நீங்கள் எந்த ஒரு தொழில் செய்தாலும் உங்களுக்கு வெப்சைட் தேவைப்படும். அந்த வெப்சைட்டை பல வழிகளில் பல விதமாக உருவாக்கி கொடுப்பவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் அதேபோல் வெப்சைட் தொழிலை செய்தால் உங்களுக்கும் ஒரு நல்ல வருமானம் கிடைக்கும். சரி இந்த தொழிலை நீங்கள் செய்ய வேண்டும் எனில் உங்களுக்கு என்னென்ன தெரிந்திருக்க வேண்டும் மற்றும் என்னென்ன தேவைப்படும் என்று தெளிவாக பார்க்கலாம்.
உங்களுக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும்
இந்த தொழிலை நீங்கள் செய்ய வேண்டும் எனில் உங்களுக்கு ஒருசில ப்ரோக்ராம் அறிவு இருக்க வேண்டும். உங்களுக்கு ப்ரோக்ராம் செய்யத் தெரிந்தால் மட்டுமே இந்த தொழிலை மிக அதிக லாபத்தில் கொண்டு செல்ல முடியும். இல்லை எனில் நீங்கள் ப்ரோக்ராம் முழுமையாக கற்றுக்கொண்டு பின்னர் இந்த தொழிலை தொடங்கலாம். இதை தொடங்குவதற்கு ஒரு சில புரோகிராமிங் குறைந்த அளவாவது தெரிந்திருக்க வேண்டும்.
ஒரு வெப்சைட் டிசைன் செய்ய வேண்டுமெனில் உங்களுக்கு எச்டிஎம்எல் ஜாவா சி எஸ் எஸ் மற்றும் பிஎச்பி போன்ற புரோகிராமிங் குறைந்த அளவு தெரிந்திருக்க வேண்டும். இவை அனைத்திலும் உங்களுக்கு பகுதியளவு தெரிந்தால் கூட போதும் ஒரு வெப்சைட் நீங்கள் அருமையாக செய்து பிசினஸ் தொடங்கலாம். பயனாளர்களுக்கு பலவிதமான வெப்சைட்கள் தேவைப்படும். அந்த வெப்சைட்டுகளுக்கு நீங்கள் தனித்தனியாக வேலை செய்ய வேண்டியிருக்கும். எனவே அவர்களுக்கு பிடித்த மாதிரியான வெப்சைட் உருவாக்க முதலில் இந்த மாதிரி வெப்சைட் உள்ளது என நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் வெப்சைட் வகைகளை பற்றி பார்க்கலாம்.
வெப்சைட் வகைகள் ( Types )
வெப்சைட்கள் பல ப்ரோக்ராம் கொண்டு இயங்குகிறது. எனவே அனைத்து ப்ரோக்ராம் வகைகளை நீங்கள் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். அதன்பிறகு தற்செயல் வகைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வெப்சைட் வகைகள் மற்றும் அதன் பயன்களைப் பற்றி கீழே தெளிவாக கொடுத்துள்ளது.
பிசினஸ் வெப்சைட் ( Business Website )
பயனாளர்கள் ஒரு தொழிலைத் தொடங்க போகிறார்கள் எனில் அந்த தொழிலுக்கு ஒரு வெப்சைட் தேவைப்படும். அந்த வெப்சைட்டை நீங்கள் உருவாக்கிக் கொடுத்தால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். இந்த பிசினஸ் வெப்சைடு என்பது ஒரு தொழிலை பற்றிய முழு விபரமும் அடங்கிய ஒரு வெப்சைட் ஆகும். இந்த பிசினஸ் வெப்சைட்டில் தொழிலின் பெயர் கான்டக்ட் நம்பர் இமெயில் ஐடி மேப் போன்றவை கொடுக்கப்பட்டிருக்கும். இது ஒரே பக்கத்தில் இருக்குமாறு செய்யலாம் அல்லது பல பக்கத்தில் இருக்குமாறு செய்யலாம். பயனாளர்கள் எப்படி கேட்கிறார்களோ அது போல் நீங்கள் செய்து கொடுக்கலாம்.
இ காமர்ஸ் வெப்சைட் ( E Commerce Website )
இ காமர்ஸ் வெப்சைட் என்பது மேலே உள்ள பிசினஸ் வெப்சைட் போன்று தான் இருக்கும் ஆனால் அதில் நீங்கள் ஆன்லைனில் பொருள்கள் விற்பனை செய்ய முடியும். உதாரணமாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் ஆன்லைனில் பொருட்களை விற்பது போல் நாமும் ஒரு பொருள்களை விற்கும் வலைத்தளத்தை உருவாக்குமாறு பயனாளர்கள் கேட்பார்கள்.
இதுபோன்று ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் வலைத்தளங்களை மாதம் ஒரு முறையாவது நாம் பரிசோதித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பொருள்களும் வாடிக்கையாளர்களும் சரியாக பொருட்களை வாங்க சிறப்பாக இருக்கும். இந்த ஆன்லைனில் விற்பனை செய்யும் வலைத்தளத்தில் பேமென்ட் கேட்வே சமூகவலைத்தள தொடர்பு மற்றும் காண்டாக்ட் செய்யும் முறைகள் போன்றவற்றை நாம் செய்ய வேண்டும். எனவே இதன் விலையும் சற்று அதிகமாகவே இருக்கும்.
பிளாக்கிங் வெப்சைட் ( Blogging )
பிளாக்கிங் வெப்சைட் என்பது பயனாளர்கள் அவர்களுக்கு தேவையான கதை கட்டுரை கவிதை மற்றும் சுவாரசியமான செய்திகள் இவற்றை ஒரு உங்களை பக்கமாக உருவாக்க விரும்பினால் அதன் பெயர் பிளாக் வெப்சைட் எனப்படும். இதில் பலவகையான கதை கட்டுரை கவிதை அல்லது வேறு தொடர்புடைய பதிவுகள் இருந்தால் பிளாக் எனப்படும். இதனை உருவாக்குவது சற்று எளிமையான காரியம் தான். ஆனால் இதில் விளம்பரம் காட்டவேண்டும் என்பது சற்று கடினமான காரியம். எனவே பயனர்களுக்கு எது தேவை என்பதைப் பார்த்து சரியாக வழங்க வேண்டும்.
ஆன்லைன் பயிற்சி வலைத்தளம் ( Online Course )
ஆன்லைனில் மாணவர்கள் படிப்பதற்காக பள்ளிக்கூடங்கள் அல்லது கல்லூரிகளில் இதுபோன்ற வெப்சைடு உருவாக்குவார்கள் . நல்லது தனியாக இருக்கக்கூடிய நிறுவனங்கள் வகுப்புகளை எடுக்க இதுபோன்ற வெப்சைட்டுகளை உருவாக்க விரும்புவார்கள். எனவே இதுபோன்ற வெப்சைட்டுகளை நாம் உருவாக்கிக் கொடுத்தால் ஒரு நல்ல வருமானம் கிடைக்கும்.
இதுபோன்ற வெப்சைட்டுகளுக்கு நாம் கடினமாக உழைக்க வேண்டும் இருப்பினும் ஒருமுறை நன்றாக செய்து விட்டால் இயங்கிக் கொண்டே இருக்கும். இதை வெப்சைட்டுகளை வேறு யாராலும் கேட்டாலும் நீங்கள் அதை காபி செய்து கொடுக்கலாம்.
இது போன்று இன்னும் பல வகையான வெப்சைட்டுகள் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும். அவை அனைத்தையும் நீங்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உருவாக்கிக் கொடுத்து லாபம் பெற முடியும். ஒரு வெப்சைட் போலவே பல வெப்சைட்டுகள் உங்களால் செய்ய முடியும்.
இன்வெஸ்ட்மெண்ட் ( Investment ) எவ்வளவு தேவைப்படும்
இதில் இன்வெஸ்ட்மெண்ட் செய்வதற்கு எதுவும் கிடையாது. நீங்கள் ஒரு தனி ஆளாக ஆரம்பித்தால் கூட இந்த தொழிலை செய்ய முடியும். அல்லது உங்களுக்கு ஒரு கம்பெனி வேண்டுமெனில் நீங்கள் ஒரு இன்வெஸ்ட்மெண்ட் செய்து ஆரம்பிக்கலாம். இன்வெஸ்ட்மென்ட் செய்த ஆரம்பித்தால் உங்களுக்கு அதிகமான ஆர்டர்கள் குவியும். வருமானமும் இரண்டு அல்லது ஐந்து மடங்கு அதிகமாக கிடைக்கும்.
இதில் இன்வெஸ்ட்மெண்ட் செய்ய முதலில் உங்களுக்கு என ஒரு வெப்சைட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உங்கள் வெப்சைட் பலருக்கு தெரிவது போல் நீங்கள் ப்ரமோட் செய்ய வேண்டும். பத்து நபர்கள் உங்களை தொடர்பு கொண்டால் அதில் ஐந்து நபர்கள் ஆர்டர் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு நீங்கள் அவர்களை சம்மதிக்க வைத்து விலையையும் சரியாக கொடுத்து வெப்சைட் குறைந்தவிலையில் செய்தால் உங்களுக்கு லாபம் கிடைக்கும்.
படிக்க : எந்த பயிற்சி பற்றி பகிர்தலும் பணம் கிடைத்துக்கொண்டே இருக்கும்
லாபம் ( Profit ) எவ்வளவு கிடைக்கும்?
இந்த தொழிலில் உங்களுக்கு லாபம் பல்லாயிரக்கணக்கில் கிடைக்கும். உங்களுக்கு வெப்சைட் செய்யத் தெரிந்தால் மட்டும் போதும் பல நபர்கள் உங்களை தேடி அணுகுவார்கள். உங்கள் திறமையை முழுவதுமாக காட்டினால் மற்றவர்களுக்கு அது தெரியும். ஒரு வெப்சைட் நீங்கள் டிசைன் செய்து கொடுத்தால் குறைந்தபட்சம் 5 ஆயிரம் முதல் 50,000 அல்லது லட்சம் வரை கூட கிடைக்கும். நீங்கள் எடுக்கும் அந்த வெப்சைட்டின் தரத்தை பொருத்து உங்களுடைய லாபம் அமையும்.
வருமானம் அதிகரிக்க என்ன செய்வது?
வருமானத்தை அதிகரிக்க முதலில் உங்களுக்கு என ஒரு வெப்சைட் உருவாக்கிக்கொள்ள வேண்டும். உங்களுக்கு என ஒரு சொந்த கடையை எடுக்க வேண்டும். பிசினஸ் செய்ய ஆர்டர் பிடிக்க வெப்சைட் டிசைன் செய்ய என அனைத்துவித தொழிலாளர்களையும் எடுக்க வேண்டும். அனைத்தையும் நீங்கள் ஒன்று கூர்ந்து நடத்தினால் உங்களுக்கு அதிகமான வருமானம் கிடைக்கும். ஒரு ஆடர் நீங்கள் பயனாளர்களுக்கு நன்றாக செய்து கொடுத்தால் அவர்கள் மூலம் வரும் நண்பர்களும் உங்களுக்கு அதிகமான லாபத்தை கொடுப்பார்கள். எனவே அனைவருக்கும் நல்ல வெப்சைட்டை செய்து கொடுப்பது உங்களுடைய பொறுப்பாகும்.
நீங்கள் வெப்சைட் தொழில் மட்டும் செய்யாமல் அதனுடன் தொடர்புடைய பல தொழில்களை எடுத்து நடத்தினால் கூட உங்களுக்கு லாபம் கிடைக்கும். அதன் மூலம் உங்களுடைய வருமானம் அதிகரிக்கும். வெப்சைட் உடன் தொடர்புடைய தொழில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய தொழில்
வெப்சைட் உடன் தொடர்புடைய தொழில்களை செய்தால் உங்களுக்கு இன்னும் அதிகமான லாபம் கிடைக்கும். இதனுடன் தொடர்புடைய தொழில்கள் வெப்சைட் போஸ்ட் செய்வது சர்ச் இன்ஜின் செய்வது டொமைன் வாங்குவது எஸ்எம்எஸ் இன் டெக்கரேசன் செய்வது ஏர்டுவேர் செய்வது ராக்கிங் செய்வது மற்றும் ஆன்லைனில் வெப்சைட் பயிற்சி அளிப்பது. இதுபோன்ற தொழில்களை செய்தால் உங்களுடைய லாபம் மற்றும் வருமானம் அதிகரிக்கும்.
வெப் ஹோஸ்டிங் ( Website Hosting )
ஒவ்வொரு வலைத்தளத்தையும் ஆன்லைனில் கொண்டுவர வெப் ஹோஸ்டிங் தேவைப்படும். இது இல்லை எனில் உங்களுடைய வெப்சைட் ஆன்லைனில் வராது. இந்த வெப் ஹோஸ்டிங் பலவிதமான விலைகளில் கிடைக்கிறது. உங்களுக்கு எது மலிவாக கிடைக்கிறதோ அதை வாங்கி நீங்கள் நல்ல விலைக்கு விற்று லாபம் பெறலாம். இந்த வெப் ஹோஸ்டிங் வாங்கும் முன் அதன் வேகம் மற்றும் தரத்தை நீங்கள் ஒருமுறை சோதித்து பார்க்க வேண்டும். அப்போதுதான் பயனாளர்களுக்கு எந்த ஒரு தொந்தரவும் வராது. இல்லையெனில் அவர்கள் உங்களை குற்றம் கூறுவார்கள்.
டொமைன் நேம் ( Domain Name )
இந்த டொமைன் பெயர் என்பது உங்களுடைய வலைத்தளத்தின் ஒரு பெயராகும். உதாரணமாக google.com என்பது ஒரு டொமைன் நேம் ஆகும். இதேபோல் நீங்கள் உங்களுடைய வெப்சைட்டை பார்ப்பதற்கு டொமைன் நேம் வாங்க வேண்டும். இந்த டொமைன் நேம் பலவிதமான விலைகளில் கிடைக்கிறது. மற்றும் பல விதமான கடைசி பெயர்களில் கிடைக்கிறது. உங்களுக்கு அதில் எது தேவைப்படுமோ வாங்கிப் பயன்படுத்தலாம். உங்களுடைய பயனாளர்களுக்கு வாங்கிக் கொடுத்து நீங்கள் அதிகமான லாபத்தைப் பெற முடியும்.
இதை நீங்கள் ஒரு முறை வாங்கி விட்டால் அது உங்களுக்கு சொந்தமானது ஆகும். நீங்கள் அதை மாற்ற முடியாது. இதில் உங்களுக்கு பிடித்த பெயரை வாங்கி பயன்படுத்த முடியும்.
எஸ்எம்எஸ் தொழில் ( SMS API )
ஒரு வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்வதற்கு அவர்களுடைய மொபைல் நம்பர் கேட்கும். அதன்பிறகு வெரிஃபை செய்ய ஒரு முறை கடவுச்சொல் கேட்கும். அந்த கடவுச்சொல்லை அனுப்புவதற்கு எஸ்எம்எஸ் தேவைப்படும். இந்த எஸ்எம்எஸ் சாதாரணமான மனிதர்களால் அனுப்பப்படுவது கிடையாது. இது ஆன்லைன் மூலம் அனுப்பப்படுவது. எனவே இதற்கு ஆன்லைன் எஸ்எம்எஸ் தேவைப்படும். அதை நீங்கள் வாங்கி மறு விற்பனை செய்தால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் மற்றும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
சர்ச் இஞ்சின் செய்வது ( SEO )
சர்ச் இஞ்சின் என்பது உங்களுடைய வலைப்பக்கம் கூகுள் அல்லது வேறு தளங்களில் தேடும்பொழுது முதலாவதாக வர செய்யும் ஒரு வேலையாகும். இதனை வெப்சைடு செய்யும் அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். இதை நீங்கள் ஒரு வெப்சைட் இருக்கு செய்து கொடுத்தால் அதன் மூலமாக தனியாக வருமானம் ஈட்ட முடியும். இது ஒவ்வொரு வலைப்பக்கத்தின் பகுதிகளையும் தனித்தனியாக செய்யும் வேலை ஆகும். நீங்கள் எவ்வளவு வேலை செய்கிறீர்களோ அவ்வளவு வருமானம் கிடைக்கும்.
இதுபோன்று இன்னும் அதிகமான தொழில்களையும் நீங்கள் செய்ய முடியும். அதன் மூலம் ஒரு பெரிய வருமானம் எடுத்து பயன் பெற முடியும்.
கேள்விகளுக்கு பதில்
உங்களுக்கு இந்த பதிவு பற்றி ஏதேனும் சந்தேகம் அல்லது கேள்விகள் இருந்தால் கீழே உள்ள கருத்து பெட்டியில் தெரிவிக்கவும்.
DISCLAIMER:
The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.
[…] Read : How To Start Website Development Business? […]