ADVERTISEMENT

How To Start Mobile Shop Business

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

மொபைல் கடை ( Mobile Shop ) தொழில்

நீங்கள் ஒரு மொபைல் கடை தொடங்கப் போகிறீர்கள் என்றால் இந்த பதிவை முழுவதுமாக படித்து பயன் பெறவும். இந்தப் பதிவில் மொபைல் கடை மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?. மொபைல் கடையுடன் தொடர்புடைய கடைகள் வைத்து அதன் மூலம் வருமானம் ஈட்டுவது எப்படி ? இதிலுள்ள வருமானம் செய்யும் வழிகள் மற்றும் என்னென்ன தேவை என்று இந்த பதிவில் பார்க்கலாம். இந்த தொழிலை நீங்கள் செய்யப் போகிறீர்கள் என்று முடிவு செய்து விட்டால் முதலில் உங்களுக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும் என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் எந்த ஒரு தொழிலையும் அதை பற்றிய தகவல்கள் தெரியாமல் நீங்கள் தொடங்கக் கூடாது. முதலில் இந்த தொழில் செய்ய உங்களுடைய திறமைகள் என்னென்ன தேவைப்படும் என்று பார்க்கலாம்.

Read : How To Start Computer Service Center or Computer Shop Business ?

உங்களுக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும்?

தொலைபேசி ( Phones )

மொபைல் கடையை நீங்கள் தொடங்க வேண்டும் எனில் உங்களுக்கு முதலில் மொபைல் பற்றிய தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக புதிதாக வந்த மொபைல்கள் பழைய மொபைல்கள் அதில் உள்ள பயன்கள் வசதிகள் மற்றும் மொபைல் பற்றிய முழு தகவல்களையும் நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் சிலர் மொபைலில் நேரம் வைப்பது முதல் அப்பிளிகேஷன் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது வரை பலவகையான சந்தேகங்களை உங்களிடம் கேட்பார்கள். எனவே உங்களுக்கு அதைப் பற்றிய அனைத்து விதமான தகவல்களும் சிறிதளவு தெரிந்திருக்க வேண்டும்.

உங்களுக்கு அது பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை எனில் எப்படியாவது அதை தெரிந்து கொண்டு அந்த வாடிக்கையாளரின் குறையை தீர்க்க வேண்டும். இந்த தொலைபேசிகளை பற்றி தெரிந்து வைப்பதை உங்களுடைய முக்கிய வேலையாகும்.

சிம் கார்டு ( SIM Card )

தொலைபேசியை வாங்கும் ஒவ்வொரு நபரும் ஏதாவது ஒரு சிம் கார்டை பயன்படுத்த வேண்டும். எனவே உங்களுக்கு சிம் கார்டு பற்றிய தகவல்களும் தெரிந்திருக்க வேண்டும். ஒரு நல்ல சிம் கார்டு எது டவர் நல்லாக கிடைக்குமா என்றும் ஆஃபர் எதில் அதிகமாக இருக்கிறது இது போன்ற ஒரு சில விடயங்களில் உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும். தெரியவில்லை என்றாலும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் ஒரு புதிய தொலை பேசியை வாங்கும் நபர் புதிய சிம் கார்டு வாங்கும் நோக்கத்தில் இருப்பார்கள். எனவே புதிய சிம்கார்டு அதன் விலை மற்றும் ரீசார்ஜ் ஆஃபர் போன்ற அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். இவற்றை பற்றி தெரிந்து கொள்ள சிம்கார்டு கம்பெனி வலை பக்கத்தை நீங்கள் அணுகினால் போதும்.

ரீசார்ஜ் ( Recharge Plans )

உங்களுக்கு ஒரு சிம் நம்பருக்கு ரீசார்ஜ் செய்வது எப்படி என்று தெரிந்து இருக்க வேண்டும். இந்த ரீசார்ஜ் செய்ய டீலர்கள் மற்றும் அவர்கள் பற்றி கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும். புதிய டீலர்கள் புதிய ஆஃபர்களை கொடுப்பார்கள் . அவற்றை பயன்படுத்தி நீங்கள் வருமானம் செய்ய வேண்டும். ரீசார்ஜ் செய்வது தெரியவில்லை எனில் சிம்கார்டு டீலர்களுக்கு இது போன்ற தகவல்கள் தெரிந்து இருக்கும். நீங்கள் அவர்களை அணுகினால் உங்களுக்கு அனைத்து விதமான சந்தேகங்களையும் தீர்த்து கொடுப்பார்கள்.

ரீசார்ஜ் செய்ய உங்களுக்கு அனைத்து விதமான சிம்கார்டு டீலர்கள் மற்றும் ஒருசில தொலைபேசிகள் இருக்க வேண்டும். சாதாரணமாக நீங்கள் ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு ஒரு வருமானமும் கிடைக்காது. ஆனால் டீலர்களிடம் இருந்து ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு ஒவ்வொரு ரீசார்ஜ் இருக்கும் கமிஷன் கிடைக்கும். எனவே உங்கள் வட்டாரத்திலுள்ள டீலர்களை பற்றி நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு சிம் கார்டு ரீசார்ஜ் பற்றிய விவரம் மட்டும் தெரிந்தால் போதாது. ஏனெனில் நமது நாட்டில் பல வகையான சிம்கள் இருக்கிறது அவற்றில் பல வகையான ஆஃபர் இருக்கிறது. எனவே அவற்றைப் பற்றிய முழு தகவல்களையும் நீங்கள் ஒரு அட்டையில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பயனாளர் கேட்கும் பொழுது அவர்களுக்கு தெளிவாக விளக்க முடியும்.

ஒவ்வொரு சிம்கார்டை பேலன்ஸ் பார்ப்பது இன்டர்நெட் செய்வது மற்றும் ஆஃபர் பார்ப்பது போன்ற நம்பர்களை நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இவை அனைத்தும் தெரிந்தால் மட்டுமே பயனர்கள் கேட்கும் விபரத்தை நம்மால் தெளிவாக கொடுக்க முடியும்.

Read : How To Start Website Hosting Business Online?

மெமரி கார்டு ( Memory Cards )

பயனாளர்கள் வாங்கும் தொலைபேசியில் மெமரி கார்டு போடும் வசதி இருந்தால் அவர்களுக்கு அதை புரியவைத்து மெமரி கார்டு வாங்க சொல்ல வேண்டும். மெமரி கார்டின் மூலம் என்ன பயன் உள்ளது என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மெமரி கார்டு மூலம் பாடல்கள் படங்கள் மற்றும் தரவுகள் என பல வகையான தகவல்களை சேமித்து வைக்க முடியும்.

ஒரு கேமரா மொபைலில் படத்தை சேமிக்க வேண்டுமெனில் அவர்களுக்கு மெமரி கார்டு தேவைப்படும். வீடியோ எடுக்கவும் மற்றும் பாடல்கள் கேட்கவும் மெமரி கார்டு தேவைப்படும். எனவே அந்த மெமரி கார்டு பற்றிய தகவல்களும் பயன்களும் தெரிந்திருக்க வேண்டும். உங்களுடைய கடையில் மெமரி கார்டு கட்டாயம் தேவைப்படும்.

ADVERTISEMENT

சார்ஜர் ( Wall Charger )

ஒரு மொபைலை சார்ஜ் செய்ய வேண்டும் எனில் உங்களிடம் சார்ஜர் இருக்க வேண்டும். அதுவும் ஒரே மொபைலை சார்ஜ் செய்யும் சார்ஜர் மட்டுமில்லாமல் பல விதமான மொபைல்களுக்கு பயன்படும் மல்டி பின் சார்ஜர் வைத்திருக்க வேண்டும். இதன் விலையும் மிகவும் குறைவுதான் எனவே இதை வாங்கி வைப்பது நல்லது. ஏனெனில் பல மக்கள் பலவிதமான மொபைல்களை பயன்படுத்தி வருவார்கள் எனவே உங்களிடம் இது இருந்தால் யார் வந்து கேட்டாலும் நீங்கள் சார்ஜ் போட்டு கொடுக்க முடியும். அது மட்டும் இல்லாமல் தனித்தனியாக சார்ஜ் செய்யும் தவறுகளை நீங்கள் வாங்கி வைத்திருந்தாலும் மக்களுக்கும் பயன்படும்.

மிகவும் அதிகமாக உள்ள தொலைபேசியின் சார்ஜர் களை வாங்கி வைப்பது நல்லது. இப்போது அதிகமாக பயன்பாட்டில் உள்ள சார்ஜர்கள் மைக்ரோ-யூஎஸ்பி 10 வாட்ச் சார்ஜர்கள் ஆகும். இனி வரப்போகும் காலத்தில் டைப் சி எனப்படும் புதுவகையான சார்ஜர்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. எனவே நீங்கள் அதுபோன்ற சார்ஜர் களை வாங்கி வைப்பதும் சிறந்தது. இவை அனைத்தையும் ஒரு நல்ல டீலரிடம் குறைந்த விலையில் வாங்க முடியும். பிறகு அதை சாதாரண விலைக்கு நீங்களும் விற்பனை செய்து அதிக லாபம் எடுக்க முடியும்.

கணினி ( Computer )

உங்களுக்கு ஒரு கணினி தேவைப்படும். அதை நீங்கள் மடிக்கணினி யாகவோ அல்லது டெஸ்க்டாப் கணினி வாங்கி வைத்துக்கொள்ளலாம். இது எதற்கு எனில் உங்களுடைய வாடிக்கையாளர்கள் கேட்கும் பாடல்களை நீங்கள் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். உதாரணமாக மெமரி கார்டு அல்லது பென்ட்ரைவ் வாங்கும் பயனாளர்கள் அவர்கள் பயன்பாட்டுக்கு பாடல்கள் அல்லது படங்களை பதிவு செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். எனவே உங்களிடம் ஒரு கணினி அல்லது மடிக்கணினி இருந்தால் மட்டுமே அது போன்ற வேலைகளை எளிமையாக செய்து முடிக்க முடியும். இதுபோன்ற சாதனங்களும் இருந்தாலும் உங்களுக்கு ஒரு நல்ல லாபம் கிடைக்கும்.

Read : How To Start Website Development Business?

என்ன பொருள்கள் இருக்க வேண்டும்?

நீங்கள் புதிதாக மற்றும் குறைந்த விலையில் ஒரு தொலைபேசி கடை உருவாக்கப் போகிறார்கள் என்றால் உங்களிடம் ஒரு சில பொருள்கள் இருக்க வேண்டும். அவற்றை நீங்கள் தவணை முறையில் அல்லது முழு விலை கொடுத்து வாங்கி வைத்திருக்க வேண்டும். உதாரணமாக தொலைபேசி கடையில் முக்கியமாக தொலைபேசி தேவைப்படும். புதிய தொலைபேசிகள் கிடைக்கவில்லை எனில் பழைய தொலைபேசிகளை வாங்கி விற்கவும் முடியும்.

எனவே தொலைபேசி மிகவும் முக்கியமாகும். புதிய தொலைபேசிகளை வாங்க அதிக பணம் தேவைப்படும். இருப்பினும் நீங்கள் அதை தவணைமுறையில் டீலர்களிடம் இருந்து வாங்க முடியும். உங்களுடைய கடை இயங்கி வந்தால் அவர்கள் உங்களுக்கு தாராளமாக தவணை முறையில் தொலைபேசிகளை கொடுப்பார்கள். மற்றும் அந்த தொலைபேசி விற்பனை ஆகவில்லை எனில் அவர்களை மறு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் கொடுக்கும் தொலைபேசியை நீங்கள் விட்டுக் கொடுத்தால் உங்களுக்கு லாபம் கிடைக்கும் இல்லையெனில் உங்களுக்கு லாபமும் இல்லை நட்டமும் இல்லை.

இந்த தொலைபேசி மட்டுமில்லாமல் உங்களுக்கு பலவிதமான பொருட்கள் சாதாரண கடைக்கே தேவைப்படும். அந்த பொருட்களில் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய தொலைபேசிகள்
பழைய தொலைபேசிகள்
சார்ஜர்கள்
மெமரி கார்டு மற்றும் பென் டிரைவ்
ரீசார்ஜ் கார்டுகள்
கணினி அல்லது மடிக்கணினி
சிம் கார்டுகள்
இயர் போன்கள் ( ear phones )
ப்ளூடூத் சாதனங்கள்
இதுபோன்று தொலைபேசி சம்பந்தப்பட்ட அனைத்து விதமான குறைந்த விலையில் உள்ள பொருள்களும் வைத்திருப்பது நல்லது. உங்களிடம் இன்வெஸ்ட்மெண்ட் அதிகமாக இருந்தால் வேறும் சில பொருள்கள் வாங்கலாம்.

Read : How To Create PayPal Account & Full Setup Guide

முதலீடு எவ்வளவு தேவைப்படும்?

நீங்கள் மூன்று வகை முதலீடுகளை செய்து தொழிலை தொடங்க முடியும். இந்த முதலீடுகள் குறைந்த விலையில் இருந்து அதிக விலை வரை இருக்கும். குறைந்த விலையில் முதலீடு செய்தால் குறைந்த லாபம் கிடைக்கும் அதிக விலையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். ஒரு சில பொருட்களை நீங்கள் அதிகமாக வாங்க வேண்டுமெனில் அதிக முதலீடு செய்து இருக்க வேண்டும். எனவே உங்களுடைய பொருள் மற்றும் முதலீடு எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.

குறைந்த விலையில் முதலீடு ( Low )

இந்த குறைந்த விலை முதலீட்டில் உங்களுக்கு கடை இருக்க வேண்டும். ரீசார்ஜ் செய்யக்கூடிய வசதிகள் அனைத்தும் இருக்க வேண்டும். பழைய மொபைல்களை நல்ல மொபைல் களாக தேடி வாங்கி வைத்திருக்க வேண்டும். மொபைலுக்கு தேவையான சார்ஜ் செய்யும் வசதிகளை வைத்திருக்க வேண்டும். அனைத்து மொபைலில் சார்ஜ் செய்யக்கூடிய சாதனம் இருக்க வேண்டும். மெமரி கார்டு மற்றும் பென்டிரைவ் போன்ற சேமிப்பகங்களில் இருக்க வேண்டும். மொபைல் கவர்கள் சுத்தம் செய்யும் கருவிகள் போன்றவை வேண்டும்.

இந்த கருவிகள் மற்றும் பொருள்களை வாங்கினால் உங்களுக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை ஆகும்.

ADVERTISEMENT

நடுத்தர விலையில் முதலீடு ( Mid )

மேலே உள்ள அனைத்து பொருட்களையும் நீங்கள் வாங்கி வைத்திருக்க வேண்டும். இந்த நடுத்தர விலையில் இன்னும் ஒரு சில பொருட்களை நீங்கள் அதிகமாக வாங்கி வைக்கலாம். அந்தப் பொருட்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மொபைல்போன் ஸ்டாண்டுகள்
அனைத்து மொபைல்களுக்கும் ஸ்கிரீன் கார்டு
மொபைல் கவர்கள்
கணினி வசதி
டூல்ஸ் கருவிகள்
யுஎஸ்பி கேபிள்
ப்ளூடூத் சாதனங்கள்
ஓடிஜி கேபிள்கள்
குரோம்காஸ்ட் சாதனம்
பாடல் கேட்கும் கருவிகள்
இது போன்று உங்களுக்கு தேவையான அனைத்து விதமான கருவிகளையும் நடுத்தர கடையில் வாங்கி வைக்கலாம். இதன் மூலம் ஒரு சில பொருட்கள் விற்பனை ஆகி உங்கள் கடை விளம்பரம் மற்றும் நல்ல லாபம் கிடைக்கும்.

இந்த நடுத்தர விலையில் முதலீடு செய்ய இந்த பொருள்களை வாங்கினால் உங்களுக்கு சுமார் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை செலவு செய்யலாம். விற்பனையாகாத பொருள்களை வாங்காமல் இருப்பது நல்லது.

Read : Read News and Earn Money – BuzzBreak App Review

பெரிய விலையில் முதலீடு ( High )

பெரிய முதலீடு என்பது மேலே உள்ள அனைத்து விதமான பொருள்களும் மற்றும் வசதிகளும் அடங்கும். அதனுடன் ஒரு சில அதிகமான பொருள்களும் வசதிகளும் இருக்கலாம். உதாரணமாக மொபைலுக்கு தேவைப்படும் ஸ்கிரீன் மற்றும் பேட்டரி மதர்போர்டு போன்றவற்றை வாங்கி வைக்கலாம். மொபைலை சரி செய்யும் சாதனங்கள் மற்றும் கருவிகளை வாங்கி வைக்கலாம். மொபைல் டச் மற்றும் டிஸ்ப்ளே மாற்ற கூடிய கருவிகள் உபகரணங்களை வாங்கலாம். கிரீன் கார்டு பேக் கவர் பிரிண்டிங் மிஷின் போன்றவற்றை வாங்கி வைத்தாள் லாபம் அதிகமாக கிடைக்கும்.

அதிக முதலீட்டில் மொபைல் கடையுடன் வேறு தொடர்புடைய தொழில்களையும் செய்ய முடியும். உதாரணமாக கணினி தொலைக்காட்சி மற்றும் பிரிண்டிங் மிஷின் போன்றவை வாங்கி வைத்து வைக்கலாம். அனைத்து விதமான உபகரணங்களும் வாங்க இந்த அதிக விலை முதலீட்டை செய்யலாம்.

இந்த அதிக விலை முதலீடு என்பது 5 லட்சத்துக்கு மேல் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். இவ்வளவு இன்வெஸ்ட் செய்தால் உங்களுக்கு இன்னும் அதிகமான லாபம் கிடைக்கும். ஒரு தொழில் செய்வதைவிட பல தொழில்கள் நீங்கள் ஒரே நேரத்தில் செய்து சம்பாதிக்க முடியும்.

மொபைல் கடையுடன் தொடர்புடைய தொழில்?

மொபைல் கடையுடன் ஒரு சிறு தொழில்களையும் நீங்கள் சேர்த்து செய்ய முடியும். அதன் மூலமாக அதிகமான வருவாயும் எடுக்கமுடியும். மொபைல் கடையுடன் சம்பந்தப்பட்ட தொடர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது . அதைப் படித்து நீங்கள் இது சம்பந்தப்பட்ட தொழில்களை தெரிந்து கொள்ளலாம்.

பிரிண்டிங் மற்றும் ஜெராக்ஸ் எடுப்பது
இன்டர்நெட் பயன்படுத்துவது
கேமிங் சென்டர்
ஹாட்ஸ்பாட் விற்பனை
டாக்குமெண்ட் செய்வது
போட்டோ ஸ்டூடியோ
கலர் ஜெராக்ஸ் மற்றும் பிரிண்டிங்
மொபைல் கேஸ் பிரிண்டிங்
எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை
மொபைலை பழுதுபார்க்கும் கருவிகள்
சப்ஸ்கிரிப்டீன் போன்றவை
ஆன்லைன் அப்ளிகேஷன்
இன்னும் பல தொழில்கள் இதனுடன் சேர்த்து செய்ய முடியும். மேலே உள்ள அதில் எது உங்களுக்கு சுலபமாக இருக்குமோ அதை நீங்கள் முதலில் செய்யலாம்.

Read : What Is Affiliate Marketing & Best Payout Websites

வருமானம் எவ்வளவு கிடைக்கும்?

வருமானம் உங்களுடைய தொழில் எங்கு அமைந்துள்ளது அதை பொறுத்து அமையும். ஒரு நல்ல முன்னேற்றமடைந்த சாலையில் கடை வைத்து இருந்தால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். கிராமப்புறங்களில் இருந்தால் சற்று குறைவாகவே கிடைக்கும். நல்ல பழக்கவழக்கங்கள் இருந்தால் உங்களை தேடி மக்கள் அணுகுவார்கள். உங்களிடம் அதிகமான பொருள்கள் மற்றும் அனைத்துவிதமான சந்தேகங்களையும் தீர்த்து கொடுத்தால் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். ஒரே இடத்தில் பல தொழில்கள் செய்து வந்தாலும் உங்களுக்கு அதிகமான போக்குவரத்து இருக்கும். எனவே முன்னேற்றமடைய இதுபோன்ற செயல்களை செய்ய வேண்டும்.

தொழிலை விரிவுபடுத்த என்ன செய்ய வேண்டும்?

ஏற்கனவே நீங்கள் இந்த தொழிலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதை நீங்கள் விரிவுபடுத்தலாம். விரிவுபடுத்த உங்களிடம் பணவசதி இல்லையென்றால் லோன் போட்டு செய்யலாம். முதலில் நீங்கள் குறைந்த முதலீடு மூலம் தொழிலை விரிவுபடுத்தலாம். எது உங்களுக்கு சுலபமாக இருக்கிறதோ மற்றும் எது தெரிகிறதோ அதை வைத்து தொடங்கலாம். அது வெற்றி அடைந்துவிட்டால் நீங்கள் அடுத்த தொழிலை செய்து பார்க்கலாம். முக்கியமாக தொழிலை விரிவுபடுத்த அதிக மக்கள் உள்ள இடங்களில் செய்யலாம். மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் செய்தால் அது சற்றே குறைவான வருமானத்தை கொடுக்கும்.

ADVERTISEMENT

DISCLAIMER:

The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 215