ADVERTISEMENT

TN Govt Direct joining Job Collector Office Job Salary 30000

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

கலெக்டர் அலுவலகத்தில் வேலை

தமிழக அரசு கலெக்டர் அலுவலகத்தில் ஒரு வேலை வாய்ப்பு உள்ளது. அந்த வேலை வாய்ப்புக்கு எப்படி பதிவு செய்வது, சம்பளம், வேலை பற்றிய தகவல் மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி போன்றவற்றை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

யார் பதிவு செய்யலாம்?

இந்த வேலைக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பதிவு செய்யலாம். இந்த வேலைக்கு ஜாதி ஒரு தடையில்லை. அனைத்துவித ஜாதி மக்களும் அப்ளை செய்யலாம் ‌. இந்த வேலைக்கு வயது வரம்பு கிடையாது. 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் இதற்கு அப்ளை செய்ய முடியும்.

சம்பளம் விபரம்?

இந்த வேலைக்கு ரூபாய் 30,000 வரை சம்பளம் கொடுக்கப்படும். இது மாத சம்பளமாக கொடுக்கப்படும். உங்களுடைய வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வந்து விடும்.

வேலையின் விவரம்?

நீங்கள் பதிவு செய்யக்கூடிய வேலையின் பெயர் மைய நிர்வாக அலுவலர். இந்த வேலையில் உங்களுக்கு குழந்தைகள் தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களை தொடர்புகொண்டு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது மற்றும் அவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வழி நடத்துதல் மற்றும் தகவல்களை வழங்குதல் போன்ற செயல்கள் இதில் அடங்கும்.

இந்த வேலைக்கு நீங்கள் அஞ்சல் மூலமாக மட்டுமே பதிவு செய்ய முடியும்.

எப்படி பதிவு செய்வது?

இந்த வேலைக்கு நீங்கள் பதிவு செய்ய வேண்டுமெனில் முதலில் இந்த பதிவின் கீழே உள்ள ஒரு விண்ணப்பத்தை டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும். பின்னர் அதை நீங்கள் பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் உங்களில் ஒரு சில விபரங்கள் கேட்கப்பட்டிருக்கும் அதை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

அதில் உங்களுடைய பெயர் உங்களுடைய புகைப்படம் இனம் பிறந்த தேதி உங்களுடைய வயது திருமணதகவல் உங்களுடைய தந்தை அல்லது காப்பாளர் அல்லது கணவரின் பெயர் உங்களுடைய இனம் நீங்கள் படித்த விபரங்கள் உங்களின் பணியின் அனுபவம் உங்களுடைய முகவரி உங்களுடைய தொலைபேசி உங்களுடைய ஈமெயில் முகவரி சர்டிபிகேட் அல்லது ட்ரெய்னிங் எடுத்த விபரங்கள் கேட்கப்பட்டிருக்கும். இவை அனைத்தையும் நீங்கள் முதலில் அந்த படிவத்தில் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் ‌.

அடுத்த பக்கத்தில் உங்களுடைய கையொப்பம் மற்றும் இடம் தேதி போன்றவை கேட்கப்பட்டிருக்கும். இவை அனைத்தையும் நீங்கள் பூர்த்தி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

படிவத்தை அனுப்பும் முகவரி

இந்த படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்த பிறகு நீங்கள் ஒரு சில நகல்களை இணைக்க வேண்டும்.‌ அந்த நகல்கள்

  • பிறப்புச் சான்று ( Birth date proof )
  • நீங்கள் படித்த சான்று ( Qualification certificate )
  • பணி அனுபவ சான்று ( Government or private sector )

இந்த நகல்களை இணைத்து பிறகு அந்த படிவத்தில் கீழே உள்ள முகவரியை அஞ்சல் அட்டையில் எழுதி போஸ்ட் செய்ய வேண்டும்.‌ இதை அனுப்ப நீங்கள் இந்த வருடம் டிசம்பர் மாதம் 21-ம் தேதி மாலை 5 மணி முன்பு அனுப்ப வேண்டும்.

வேலை படிவம் டவுன்லோட் செய்ய

இந்த அரசு வேலைக்கு அப்ளை செய்ய இந்த படிவத்தை டவுன்லோட் செய்யவும். பிறகு அதை பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.

ADVERTISEMENT

Application Form Download link : here

Notification link : here

DISCLAIMER:

The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 210

3 Comments

Comments are closed.