ADVERTISEMENT

கேம் விளையாட மாதம் ₹30000 வரை சம்பளமா? எப்படி அப்ளை செய்வது?

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

நம்மில் பல நபர்கள் மொபைல் அல்லது கணினி ( mobile games and computer games ) விளையாட்டுக்களை அதிகமாக விரும்புவார்கள். அந்த விளையாட்டுகளை தினமும் விளையாடிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் அதிலிருந்து எந்த ஒரு பணமும் நமக்கு கிடைக்காது. ஆனால் நீங்கள் கேம் விளையாடி பணத்தை சம்பாதிக்க வேண்டுமென்றால் இந்த பதிவில் உள்ள முறையை பின்பற்றலாம்.

கேம் விளையாடினால் சம்பளமா?

ஆம். உண்மையில் கேம் விளையாடினால் நமக்கு சம்பளம் தருவார்கள். எப்படி என்றால் ஒரு விளையாட்டை மக்களின் பயன்பாட்டுக்கு வெளியிடுவதற்கு முன்னாள். அந்த விளையாட்டை உருவாக்கிய நிறுவனம் அதனை டெஸ்ட் செய்ய ஒரு சில நபர்களிடம் கொடுப்பார்கள். அந்த கேம் டெஸ்ட் செய்யும் நபர்கள் கேம் டெஸ்ட்டர்கள் ( game testers / Game testing jobs ) ஆவார்கள். இவர்கள் உண்மையில் என்ன செய்வார்கள் என்றால் அவர்கள் கொடுக்கும் அல்லது வடிவமைத்த விளையாட்டுகளை தமது தொலைபேசி அல்லது கணினி ( mobiles, tablets, computers or game consoles ) மூலம் பதிவு செய்து விளையாடுவார்கள். இவர்கள் விளையாடும் விளையாட்டில் ஏதேனும் பிழை ( bugs or errors ) இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் தவறாக நடந்தால் அதனை சரி செய்ய சொல்வார்கள்.

உதாரணமாக ஒரு விளையாட்டை விளையாடும் பொழுது அதில் தவறாக வேலை செய்தாள் அல்லது சரியாக வேலை செய்யாவிட்டால் அதனை டெவலப்மெண்ட் செய்யும் நபர்களும் சுட்டிக்காட்டுவார்கள். இப்படி குறைகளை கண்டறிய பலவித செயல்களை செய்வார்கள். அவை அனைத்தையும் கண்டறிய இவர்களை பணியில் வைத்து இருக்கிறார்கள்.

நமக்கு என்ன பயன்?

நம்மில் சிலர் நன்றாக விளையாட்டுக்களை விளையாடுவார்கள் மற்றும் முக்கியமாக வேலை இல்லாமல் இருப்பார்கள். இப்படி வேலை இல்லாமல் இருக்கும் நன்றாக விளையாட்டுகளை விளையாட தெரிந்த நபர்கள் இது போன்ற நிறுவனங்களிடம் வேலைக்கு அப்ளை செய்யலாம். இந்த வேலைக்கு எந்த ஒரு பெரிய திறமை அல்லது படிப்பறிவு தேவைப்படாது. உங்களுக்கு ஏதேனும் தவறாக விளையாட்டில் நடந்தால் அதனை சுட்டிக்காட்ட மட்டும் தெரிந்தால் போதும்.

எந்த நிறுவனங்கள் இருக்கின்றன?

விளையாட்டுகளை உருவாக்க பல வகையான நிறுவனங்கள் இருக்கின்றன. இந்தியாவிலும் பல வகையான பெரிய நகரங்களிலும் செயல்பட்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல் சிறிய நகரங்களிலும் ஒருசில சிறிய கம்பெனி இருக்கின்றன. அவை அனைத்துக்கும் நீங்கள் அப்ளை செய்ய முடியும். உங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் எதுவும் தேவைப்படாது. விளையாட்டுகளை கற்றுக் கொண்டு விளையாட தெரிந்தால் மட்டும் போதும்.

ADVERTISEMENT

நிறுவனங்களின் பெயர்?

இந்தியாவில் பல வகையான விளையாட்டுகளை உருவாக்கும் விளையாட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமான ஒரு சில விளையாட்டை உருவாக்கும் நிறுவனத்தின் பெயர் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜிடிஏ 5 – ராக்ஸ்டார் கேம்ஸ்

பப்ஜி மற்றும் பப்ஜி மொபைல் – இ ஸ்போர்ட்ஸ்

ஃப்ரீ பையர் – கரீனா

இந்த நிறுவனங்கள் மட்டுமல்லாமல் இந்தியாவில் மேலும் பல பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் இருக்கின்றன. அவை அனைத்தையும் நீங்கள் அப்ளை செய்ய முடியும்.

ADVERTISEMENT

அப்ளை செய்ய

இந்த வேலைக்கு நீங்கள் அப்ளை செய்ய உங்களுக்கு எந்த ஒரு எக்ஸ்பீரியன்ஸ் தேவைப்படாது. இருப்பினும் உங்களுக்கு ஓரளவு விளையாட்டுக்களை விளையாட தெரிந்தால் மட்டுமே போதும். இது போன்ற வேலைகள் இந்தியாவில் அதிகமாக இருக்கின்றன. அவை அனைத்தையும் நீங்கள் கீழே உள்ள லிங்க் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

https://www.instahyre.com/jobs-at-garena/

https://in.linkedin.com/company/globalesports

https://www.naukri.com/game-tester-jobs

https://in.linkedin.com/jobs/view/game-tester-at-rockstar-games-2000060318?utm_campaign=google_jobs_apply&utm_source=google_jobs_apply&utm_medium=organic

ADVERTISEMENT

 

 இந்த லிங்க் மூலமாக பல வகையான வேலைகள் மற்றும் பலவகையான நிறுவனங்களில் இருந்து கிடைக்கும். எனவே உங்களுக்கு தேவையான வேலையை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 206

4 Comments

Comments are closed.