ADVERTISEMENT

Paid For Articles Website Reviews in Tamil

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

வீட்டிலிருந்தே அனைவரும் வேலை செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது இன்றைய தலைமுறையின் ஒரு தேவையாகும். இதனை பலவிதமான வழிகளில் செய்ய முடியும். இருப்பினும் ஒரு சில வலைத்தளங்களை நாடியே நாம் செய்ய வேண்டியுள்ளது.

Paid for Articles review

இந்த பதிவில் Paid for Articles எனும் வலைத் தளத்தை பற்றி பார்க்கலாம். இந்த வலைத்தளம் ஒரு பணம் சம்பாதிக்க கூடிய ஒரு வலைத்தளம் ஆகும். இதில் நீங்கள் முதலில் ரிஜிஸ்டர் செய்து அவர்கள் கொடுக்கும் வேலையை செய்தாலோ அல்லது நீங்களே ஒரு சில பதிவுகளை பதிவேற்றினால் உங்களுக்கு பணம் கிடைக்கும். இந்த வலைத்தளத்தில் பலவிதமான பயனாளர்கள் பயன் பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். நீங்களும் இதில் இணைந்து பயன் பெற வேண்டுமெனில் இந்த பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

முதலில் இந்த வலைத்தளத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த வலைத் தளத்தின் லிங்க் இந்த பதிவின் கீழே கடைசியில் கொடுக்கபட்டுள்ளது. இதனை திறந்த பிறகு உங்களுக்கு ஒரு சில பதிவுகள் முன்னே கொடுக்கப்பட்டிருக்கும். இவை அனைத்தும் மற்றும் மக்களால் எழுதப்பட்டது தான்.

How to Register

இந்த வலைத்தளத்தில் நீங்கள் ரெஜிஸ்டர் செய்ய மேலே இடது புறம் ரெஜிஸ்டர் எனும் பொத்தான் தான் இருக்கும். அதனை கிளிக் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு ரெஜிஸ்டர் செய்யக்கூடிய ஒரு பக்கம் திறக்கும். அதில் உங்களுடைய பெயர் பயனர் பெயர் இமெயில் முகவரி மின்னஞ்சல் பாஸ்வேர்ட் மற்றும் நிச்சயமான பாஸ்வேர்ட் ஆகியவற்றை கொடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு ரெஜிஸ்டர் எனும் பொத்தானை க்ளிக் செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

குறிப்பு : இதில் உங்களுடைய பயனர் பெயர் இல்லை என வந்தால் நீங்கள் உங்கள் பெயருக்கு பிறகு 123 அல்லது @#₹ இது போன்ற ஏதேனும் குறியீடுகள் அல்லது எண்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். பாஸ்வேர்ட் மிகவும் சிறியதாக உள்ளது என கூறினாள் எண்கள் அல்லது குறியீடுகளை பாஸ்வேர்டு உடன் சேர்த்து கொள்ள வேண்டும். அப்போது தான் உங்களுக்கு ஒரு சரியான வலிமையான பாஸ்வேர்டை உருவாக்க முடியும். அதன் பிறகுதான் நீங்கள் உள்ளே நுழைய முடியும்.

Dashboard

உள்ளே நுழைந்த பிறகு உங்களுக்கு உங்களுடைய டேஷ்போர்டு அதாவது முகப்புப் பக்கம் திறந்திருக்கும். அதில் feed, my article, add article, withdraw, referral செட்டிங்ஸ் மற்றும் ப்ளாக் போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இப்போது உங்களுக்கு ஒரு நோட்டிபிகேஷன் வந்து இருந்தால் அதை நீங்கள் கட்டாயமாக திறந்து முழுமையாக படிக்க வேண்டும். அதில் பலவிதமான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் அதில் இருக்கும். எனவே அதை கட்டாயமாக படிக்கவேண்டும்.

How to work

இந்த Paid for Article வலைத்தளத்தில் வேலை செய்ய வேண்டுமெனில். முதலில் add article எனம் தேர்வை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு ஒரு பக்கம் திறக்கும். அதில் ஒரு சில பெட்டிகள் கொடுக்கப்பட்டிருக்கும். அவை அனைத்தையும் நீங்கள் பூர்த்தி செய்து அனுப்பினால் மட்டும் போதும். அந்தப் பெட்டிகள் மற்றும் அதில் எப்படி வேலை செய்ய வேண்டும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Title : இந்தப் பெட்டியில் நீங்கள் எந்த ஒரு பதிவை பதிவிட வேண்டுமோ அதன் தலைப்பை கொடுக்க வேண்டும். உதாரணமாக ” Best smart phone under 15000 in India ” என கொடுக்கலாம். அல்லது உங்களுக்கு எந்த தலைப்பு தேவைப்படுகிறதோ அதை நீங்கள் கொடுக்கலாம்.

Category : இந்த கேட்டகரியில் உங்களுடைய பதிவு எந்த கேட்டகிரி கீழே வருகிறதோ அதை தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக நீங்கள் ஒரு டெக்னாலஜி பதிவு எழுதப் போகிறீர்கள் என்றால், கேட்டகிரியில் Tech என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதில் பலவிதமான கேட்டகிரி கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுடைய பதிவு இதன் கீழ் வருகிறதோ அதை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். முக்கியமாக தலைப்பு பதிவு கேட்டகிரி அனைத்தும் சரியாக கொடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

Summary : இந்த சம்மரி என்பது நீங்கள் எழுதப் போகிறார் பதிவில் கதை சுருக்கம் ஆகும். உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை நீங்கள் இங்கு எழுதலாம். உங்களுக்கு ஏதும் சரியாக தெரியவில்லை எனில் இந்த இடத்தில் முதல் பேரகிராப் இங்கே கொடுத்துவிடலாம்.

Content : இந்த இடத்தில்தான் உங்களுடைய பதிவை முழுவதுமாக கொடுக்க வேண்டும். இதில் உங்களுடைய பதிவு நன்றாக எழுதப்பட்டிருக்க வேண்டும். அதன் பிறகு தேவையான தகவல்கள் அனைத்தும் தெளிவாக கொடுக்க வேண்டும். இது ஒரிஜினல் ஆகவும் இதற்கு முன் யாரும் எழுதப்படாத பதிவாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் உங்களுடைய பதிவை ஏற்றுக்கொள்வார்கள் இல்லை எனில் அதனை ரிஜக்ட் செய்து விடுவார்கள். எனவே ஒரு நல்ல பதிவை இங்கு பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவை நீங்கள் இங்கே முழுவதுமாக கொடுத்த பிறகு அடுத்த பெட்டியை நிரப்ப நீங்கள் தொடங்கலாம். முக்கியமாக இதில் 500 வார்த்தைகள் கட்டாயமாக இருத்தல் வேண்டும். எனவே அதை நீங்கள் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

Image : அடுத்து உள்ள பெட்டியில் choose file என கொடுக்கப்பட்டு இருக்கும். இதில் உங்களுக்கு தேவையான இமேஜ் தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதாவது மேலே நீங்கள் எழுதிய பதிவுக்கான ஒரு சரியான அல்லது பொருத்தமான ஒரு படத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

Message to reviewer : இதில் உங்களுக்கு ஏதேனும் ஒரு கருத்தை பார்வையாளருக்கு தெரிவிக்க வேண்டுமெனில் அதனை நீங்கள் டைப் செய்து கொள்ளலாம். நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு பதிவும் இவர் அனுமதி செய்த பிறகே பதிவேற்றப்படும். எனவே அவருக்கு நீங்கள் எதுவும் கூற விரும்பினால் அதனை இங்கு டைப் செய்யலாம்.

நீங்கள் இதனை சமிட் செய்த பிறகு உங்களுடைய பதிவு வெற்றிகரமாக ஏற்றப்படும். ஒருமுறை இந்த பதிவு அவர்கள் ஏற்றுக் கொண்டால் அதன் பிறகு உங்களுடைய கணக்கில் பணம் வந்து சேர்ந்துவிடும். குறைந்த அளவு பேலன்ஸ் இருந்தால் அதை நீங்கள் வித்டிரா செய்து கொள்ள முடியும். இதனை பே அவுட் எடுப்பது எப்படி என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப் படித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

Withdrawal

இந்த வலைத்தளத்தில் இருந்து நீங்கள் பணத்தை எடுக்க வேண்டுமெனில் முதலில் உங்களுடைய தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். இதனை செய்ய உங்களுடைய செட்டிங்ஸ் பக்கத்தை திறந்து கொள்ள வேண்டும். அந்தப் பக்கத்தில் Payment என ஒரு டேப் இருக்கும். அதில் இரண்டு பெட்டிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

1. Withdrawal method : இதில் உங்களுக்கு எந்த முறையில் பணம் எடுக்க வேண்டுமோ அந்த முறையைத் தேர்வு செய்ய வேண்டும். இதில் பலவிதமான பேமெண்ட் வலிகள் கொடுக்கப்பட்டிருக்கும். பேபால், ஸ்க்கிரல், பேடிஎம், போன்பே, Payeer போன்ற வலிகள் இருக்கும். உங்களுக்கு எது தேவையோ அதை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இப்போது அடுத்த பெட்டியில் உள்ள அதை பூர்த்தி செய்யவேண்டும்.

2. Withdrawal account : இந்தப் பெட்டியில் உங்களுடைய அக்கவுண்ட் எண் அல்லது நீங்கள் தேர்வு செய்த பேமெண்ட் முறையின் அக்கவுண்ட் எண் கொடுக்க வேண்டும். உதாரணமாக பேபால் தேர்வு செய்து இருந்தால் உங்களுடைய ஈமெயில் ஐடி கொடுக்க வேண்டும். பேடிஎம் தேர்வு செய்து இருந்தால் உங்களுடைய தொலைபேசி எண் அல்லது யூபிஐ முகவரியைக் கொடுக்க வேண்டும். இப்படி கொடுத்ததால் உங்களுக்கு பேமெண்ட் கிடைக்கும்.

Paid for article link

இந்த Paid for articles வலைத் தளத்தின் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது அதனைப் பயன்படுத்தி இந்த வலைதளத்தை திறந்து பயன்பெற முடியும்.

ADVERTISEMENT

Paidforarticles.com

இந்த பதிவில் இந்த வலைத்தளத்தில் எப்படி வேலை செய்ய வேண்டும் மற்றும் எப்படி பணத்தை எடுக்க வேண்டும் என முழு தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும். இந்த வலைத்தளத்தில் பணம் எடுப்பது மற்றும் வேறு ஏதேனும் கோளாறு இருந்தால் அந்த வலை தளத்தின் நிருபர்கள் அல்லது ஈமெயில் ஐடியை மூலமாக அவர்களை தொடர்பு செய்து கேட்டுக் கொள்ளலாம். இந்த வலைத்தளத்தில் ஏதேனும் தவறாக நடந்தால் அல்லது வேலை செய்யாமல் போய் விட்டால் நாங்கள் பொறுப்பேற்க முடியாது. இவை அனைத்தும் உங்களுக்கு எப்படி வேலை செய்யும் என்பதை விளக்கும் வகையில் கொடுத்து இருக்கிறோம்.

மேலும் இது போன்ற தகவல்கள் உங்களுக்கு வேண்டுமெனில் கீழே உள்ள கருத்து பெட்டியில் தெரிவிக்கலாம். அல்லது வேறு வலைத்தளத்தை பற்றிய தகவல்கள் வேண்டுமெனில் எங்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

DISCLAIMER:

The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 215

57 Comments

  1. இந்தப் பெட்டியில் நீங்கள் எந்த ஒரு பதிவை பதிவிட வேண்டுமோ அதன் தலைப்பை கொடுக்க வேண்டும். உதாரணமாக ” Best smart phone under 15000 in India ” என கொடுக்கலாம். அல்லது உங்களுக்கு எந்த தலைப்பு தேவைப்படுகிறதோ அதை நீங்கள் கொடுக்கலாம்.

  2. தேங்க்யூ சார் ஆட் கிளிக் ஜாப் ரியல் வெப்சைட் இருந்தால் சொல்லுங்க சார் முன்பணம் இல்லாமல் குட் மார்னிங் சார்

Comments are closed.