YouTube Subscribes
வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் யூடியூபில் பல பயனாளர்கள் புதிய யூட்யூப் சேனல் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவருக்கும் ஒரு சில விதிமுறைகள் தெரியாது. நீங்கள் யூடியூபில் பணம் சம்பாதிக்க வேண்டும் எனில் முதலில் உங்களுடைய சேனலில் ஆயிரம் சப்ஸ்கிரைப் இருக்க வேண்டும் மற்றும் 4000 மணி நேரம் வீடியோ பார்க்க பட்டிருக்க வேண்டும் . இந்த இரண்டு தகுதிகளையும் நீங்கள் கடந்தால் மட்டுமே உங்களுக்கு பணம் சம்பாதிக்க அனுமதி வழங்கப்படும். இல்லையெனில் நீங்கள் யூட்யூபில் பணம் சம்பாதிக்க முடியாது.
இந்த பதிவின் மூலமாக 24 நாட்களில் எப்படி ஆயிரம் சப்ஸ்கிரிபர் களை கொண்டு வருவது என பார்க்கலாம். 4000 மணி நேரம் வீடியோ வாட்ச் ஹவர்ஸ் கொண்டுவர கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி அந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளவும்.
யூடியூபில் உங்களுடைய வீடியோ பார்க்கப் பட்டால் மட்டுமே உங்களுக்கு சப்ஸ்கிரைபர் கிடைப்பார்கள். இந்த வீடியோ பார்வையை அதிகப்படுத்துவது மற்றும் முதல் ஆயிரம் சப்ஸ்கிரைப் கொண்டு வருவதற்கு கீழே உள்ள 5 படிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
- நண்பர் மற்றும் உறவினர்
- தினமும் ஒரு வீடியோ
- எஸ் சி ஓ (SEO) பயன்பாடு
- சிறுபடம் (Thumbnail) பயன்பாடு
- சப்ஸ்கிரைப் லிங்க்
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து படிகளை எப்படி செய்வது என தெளிவாக பார்க்கலாம்.
நண்பர் மற்றும் உறவினர்
நீங்கள் முதலில் யூடியூப் சேனல் திறந்தவுடன் உங்களுடைய யூடியூப் சேனலை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உடனே ஷேர் செய்து அவர்களை கட்டாயமாக சப்ஸ்கிரைப் செய்ய வைக்க வேண்டும். ஏனெனில் உங்களுடைய முதல் சப்ஸ்கிரைப் அவர்கள் உங்களை சுற்றி இருப்பார்கள். அப்போதுதான் உங்களுடைய ஆயிரம் சப்ஸ்கிரிபர் வேகமாக கொண்டு வர முடியும்.
நீங்கள் பார்க்கும் அனைவரையும் முடிந்த அளவுக்கு சப்ஸ்கிரைப் செய்ய கட்டாயப்படுத்த வேண்டும். இல்லையெனில் நீங்களே அவர்களுடைய தொலைபேசியை வாங்கி உங்களுடைய சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து கொள்ள வேண்டும். இதுவே முதல் 50 அல்லது 100 சப்ஸ்கிரைபர் கொண்டுவரும் வழியாகும்.
தினமும் ஒரு வீடியோ
உங்களுடைய சேனல் தொடங்கியவுடன் தினமும் ஒரு வீடியோ பப்ளிஷ் செய்து கொண்டே இருக்க வேண்டும். உங்களுடைய சேனலில் 24 நாட்களுக்கு பிறகு 24 வீடியோக்கள் இருக்க வேண்டும். அதாவது ஒரு நாளுக்கு ஒரு வீடியோ கட்டாயமாக இடம் பெற வேண்டும். அந்த வீடியோக்களை 24 மணிநேரம் இடைவேளைக்கு பிறகு போட வேண்டும். அதாவது இன்று காலை 6மணி உங்கள் சேனலில் முதல் வீடியோ அப்லோட் செய்தால் அடுத்த வீடியோ அடுத்த நாள் காலை 6 மணியில் புது வீடியோ இருக்க வேண்டும். இதைத்தான் உங்களுடைய சப்ஸ்கிரைபர் களும் யூடியூப் விரும்பும்.
எனவே 24 நாட்களுக்கு ஒரு வீடியோ வீதம் 24 வீடியோக்கள் நல்ல கருத்துக்களைக் கொண்டு ஒரு சீரான வரிசையில் இடம்பெற வேண்டும். இது ஒரு நல்ல சேனல் மற்றும் சேனல் வளர்ச்சிக்கு உதவும்.
முதல் நான்கு அல்லது 10 வீடியோ போடும் வரை உங்களுடைய சேனலை யூடியூப் கண்டு கொள்ளாது. அதன் பிறகு நீங்கள் தொடர்ந்து வீடியோ போட்டுக்கொண்டே இருந்தால் மட்டுமேயூடியூப் உங்களுடைய வீடியோக்களை மற்ற சப்ஸ்க்ரைப் செய்யாத பயனாளர்களுக்கு சஜசன் கொடுக்கும். எனவே அதன் மூலமாக நீங்கள் அதிக பார்வைகள் மற்றும் சப்ஸ்கிரைபர் களை கொண்டு வர முடியும்.
எஸ் சி ஓ ( SEO ) பயன்பாடு
நீங்கள் 24 நாட்களுக்கு 24 வீடியோ சீராக அப்லோடு செய்து கொண்டே இருந்தாலும் உங்களுடைய வீடியோவில் ஒரு நல்ல சர்ச் இன்ஜின் ஒப்டிமிஷயேசன் அதாவது எஸ்சிஓ இல்லை எனில் வீடியோ மற்றவர்களுக்கு தெரியாது. எனவே நீங்கள் போடக்கூடிய அனைத்து வீடியோக்களும் இந்த எஸ்சிஓ வேலை செய்திருக்கவேண்டும். இதன் மூலமாக யாராவது வீடியோக்களை தேடினால் உங்கள் வீடியோ அதில் இடம்பெறும்.
யூட்யூபில் எஸ்யூவி பொறுத்தவரை மூன்று படிகள் இருக்கிறது. அவற்றைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.
டைட்டில் எஸ்சிஓ
உங்களுடைய வீடியோ என்ன கூற வருகிறதோ அதை பற்றி உங்களுடைய டைட்டிலில் கீவோர்டு இருக்க வேண்டும். அந்த வார்த்தையை உங்களுடைய டைட்டிலில் நல்ல இடத்தில் இடம் பெறுமாறு அமைக்க வேண்டும். அப்போதுதான் வீடியோ நல்ல ரேட்டிங் கிடைக்கும்.
டிஸ்கிரிக்ஷன் எஸ்சிஓ
உங்களுடைய கீ வேர்ட் இதில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு அந்த வீடியோவில் என்ன கூறி இருக்கிறீர்களோ அதைப் பற்றி ஒரு சிறிய முன்னுரை இந்த டிஸ்கஷனில் இருக்க வேண்டும். இது ஏசியோ மற்றும் மிட்டா டேக் ப( mettat tag) உதவும். இதன் மூலமாக உங்களுக்கு அதிக பார்வைகள் கிடைக்கும். யூடியூபில் உங்களுடைய வீடியோ முன்பக்கத்தில் வரும் வாய்ப்பு உள்ளது.
டேக் எஸ்சிஓ
யூடியூபில் அதிகபட்சமாக 500 அளவு மட்டுமே டேக் போட முடியும். நீங்கள் அவை அனைத்தையும் முழுமையாக நிரப்பி விட வேண்டும். ஏனெனில் ஒரு டேக் வீடியோவை நல்ல நிலைக்கு கொண்டு வரவில்லை என்றாலும் மற்றொரு டேக் நல்ல நிலைக்கு கொண்டு வரும். எனவே நீங்கள் இதை அனைத்தையும் முழுமையாக பூர்த்தி செய்து விட வேண்டும்.
சிறுபடம் ( Thumbnail ) பயன்பாடு
உங்களுடைய வீடியோவில் உள்ள முழு கருத்தையும் இந்த ஒரு சிறு படத்தில் அடைக்க வேண்டும். இந்த சிறு படம் மிகவும் எளிமையாகவும் மற்றும் பார்ப்பதற்கு தெளிவாகவும் இருக்க வேண்டும். இந்த சிறு படத்தில் உங்களுடைய புகைப்படத்தை வைத்தால் உங்களுக்கு அதிகமான பார்வைகள் வரும். ஏனெனில் உங்கள் புகைப்படத்தின் மூலமாக ஒரு நம்பிக்கை உருவாகும்.
இந்த புகைப்படத்தில் உங்களுடைய புகைப்படம் இடம் பெற வேண்டும். அதுவும் நீங்கள் ஒரு மகிழ்ச்சியான புகைப்படத்தை இதில் அமைத்தால் மிகவும் அதிக நம்பிக்கை உருவாகும். இந்த சிறு படத்தை உருவாக்க கேன்வா ( Canva ) அல்லது பிக்சல் லேப் ( Pixel lab ) போன்ற இலவச செயலிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
சப்ஸ்கிரைப் லிங்க்
உங்களுடைய யூடியூப் பார்வையாளர்கள் அனைவரையும் சப்ஸ்கிரைப் செய்ய வைப்பது சற்று சிரமமான காரியம். அவர்களுக்கு எப்படி சரி செய்வது என்று ஒரு சிலருக்கு தெரியாது. அல்லது ஒரு சிலர் மறந்து விடுவார்கள். எனவே அவர்களை சப்ஸ்க்ரைப் செய்ய நீங்கள் உங்களுடைய சிவப்பு கலர் சப்ஸ்க்ரைப் பட்டனை அனைத்து இடங்களிலும் கொடுக்க முடியாது. எனவே நீங்கள் ஒரு லிங்க் மூலமாக சப்ஸ்கிரிபே பட்டனை உருவாக்க முடியும்.
முதலில் உங்களுடைய யூடியூப் சேனல் முகப்பு பக்கத்தை திறந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு உங்களுடைய யூ ஆர் எல் பெட்டியில் உள்ள லிங்கை காப்பி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதை ஒரு எடிட்டர் அப்ளிகேஷனில் ஓட்ட வேண்டும். உங்களுடைய யூ ஆர் எல் முடியும் இடத்தில் கீழே உள்ள எழுத்துக்களை போட வேண்டும்.
?sub_confirmation=1
அதாவது உங்களுடைய சேனல் யூ ஆர் எல் https://m.youtube.com/channel/UCR-yY3siB6_nP6XqTh-10Yw என்பது போல் இருந்தால் உங்களுடைய சப்ஸ்க்ரைப் லிங்க் https://m.youtube.com/channel/UCR-yY3siB6_nP6XqTh-10Yw?sub_confirmation=1 என இருக்க வேண்டும். இதனை நீங்கள் அனைத்து இடங்களிலும் பகிர்ந்து அதிகமான சப்சர் இவர்களை பெற முடியும்.
இந்த லிங்கை Bitly போன்ற யூ ஆர் எல் சாடினர் பயன்படுத்தி யூ ஆர் எல் சிறிதாக மாற்றி எளிமையாக அனைத்து இடங்களில் பயன்படுத்த முடியும். மற்றும் அதை எவ்வளவு கிளிக் வந்துள்ளது எப்போது வந்துள்ளது என்பதை ட்ராக் செய்ய முடியும்.
DISCLAIMER:
The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.
Nice