கணினி பழுதுபார்க்கும் தொழில்
நம் அனைவரிடமும் ஒரு கணினி அல்லது மடிக்கணினி கண்டிப்பாக இருக்கும். தொலைபேசியை போலவே கணினியும் எப்போது வேண்டுமானாலும் பழுதுகள் ஏற்படலாம். எனவே அதனை சரிசெய்ய அனைவராலும் முடியாது. கணினி பழுது பார்க்கும் கடைக்கு எடுத்து சென்றால் மட்டுமே அதற்கு முழு தீர்வு கிடைக்கும். எனவே கணினி பழுது பார்க்கும் தொழில் எப்போதுமே நிரந்தரமாக இருந்து கொண்டே இருக்கும். ஏனெனில் கணினி இல்லாமல் இனி உலகம் இயங்காது. நமது அனைத்து தேவைகளுக்கும் கணினி தேவைப்படுகிறது. அதனை பழுதுபார்க்கும் சேவையும் தேவைப்படுகிறது. எனவே நீங்களும் கணினி பழுது பார்க்கும் தொழிலை தொடங்கினால் உங்களுக்கு ஒரு நல்ல தொழிலாக அமையும்.
உங்களுக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும்
இந்த தொழிலை நீங்கள் தொடங்கும் முன் உங்களுக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம். முதலில் உங்களுக்கு அனைத்து விதமான கணினி பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். அவற்றில் என்ன பொருள்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என தெரிய வேண்டும். அந்தப் பொருள்கள் பழுதானால் எப்படி சரி செய்வது மற்றும் அதை எங்கே குறைந்த விலையில் வாங்குவது என்பது போன்ற தகவல்கள் தேவைப்படும். இவற்றை பழுது பார்க்க நீங்கள் முதலில் அதை கற்று இருக்க வேண்டும். உங்களுக்கு அதைப் பற்றி தெரியவில்லை எனில் அதனை கற்றுக் கொடுக்கக்கூடிய நிறுவனங்களிடம் சேர்ந்து பணியை தெரிந்து கொண்டு பின்னர் இந்தத் தொழிலை ஆரம்பிக்கலாம்.
இதை தொடங்க உங்களுக்கு படிப்பறிவு பெரிதாக தேவைப்படாது. இருப்பினும் ஒரு சில பொருள்கள் மற்றும் சாஃப்ட்வேர் சேவையில் வேலை செய்யும்பொழுது உங்களுக்கு படிப்பறிவு சிறிது தேவைப்படும். குறைந்தபட்சம் பத்தாவது படித்திருந்தால் கூட இந்த தொழிலை நீங்கள் செய்ய முடியும். இந்த தொழிலை தொடங்கப் போகிறீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு சில பொருள்கள் கட்டாயம் தேவைப்படும். அப்படி என்னென்ன தேவைப்படும் என்பதை கீழே பார்க்கலாம்.
என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும்
உங்களுடைய முதலீட்டை பொருத்து நீங்கள் உங்களுக்கு தேவையான பொருட்களை கடையில் வாங்கி வைக்க முடியும். எனவே முதலில் உங்களுடைய முதலீடு எவ்வளவு என தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு எந்த வகையான பொருள்களை வாங்க வேண்டுமென பார்க்கலாம்.
குறைந்த முதலீடு
முதலில் உங்களுக்கு பல பென்டிரைவ்கள் தேவைப்படும். அதில் அனைத்து விதமான இயங்குதளத்தின் பதிவுகளும் இருக்க வேண்டும். அனைத்து விதமான ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் களும் இருக்க வேண்டும். கணினிக்கு தேவைப்படும் அனைத்து வகை மென்பொருளும் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் பயனாளர்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த ஒரு மென்பொருளையும் கேட்பார்கள். எனவே அவை அனைத்தையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும்.
உங்களுக்கு ஒரு கடை இருந்தால் மிகவும் சிறந்தது. ஏனெனில் கடை இருந்தால் மட்டுமே சர்வீஸ் செய்ய கணினிகள் அல்லது மடிக்கணினிகளை மக்கள் ஒப்படைப்பார்கள். பிறகு கணினிக்கு தேவைப்படும் வன்பொருள்கள் இருக்க வேண்டும். உதாரணமாக கீ போர்டு மவுஸ் பென்டிரைவ் இதுபோன்று பொருள்கள் இருக்க வேண்டும்.
கணினிக்கு தேவைப்படும் வன் தட்டுகள் சேமிப்பகம் அல்லது நினைவகம் மெமரி மற்றும் க்ரீன் செய்யும் பொருள் இதுபோன்று ஒரு சில பொருள்கள் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இவை அனைத்தும் நீங்கள் குறைந்த விலையில் இன்வெஸ்ட் செய்ய போகிறீர்கள் என்றால் கட்டாயம் இருக்க வேண்டும்.
இந்த பொருள்கள் குறைந்த முதலீட்டில் வாங்க வேண்டுமெனில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை செலவு செய்யலாம். அதற்கு ஒரு நல்ல டீலர் பார்த்து வாங்க வேண்டும். அப்போதுதான் விலை குறைவாகவும் தரமாகவும் கிடைக்கும்.
சிறிது அதிக முதலீடு
இதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள குறைந்த முதலீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் இருக்க வேண்டும். அதனுடன் ஒரு சில பொருள்கள் நீங்கள் அதிகமாக வைத்திருக்க வேண்டும். அதன் வகைகளும் தாவரங்களும் தனித்தனியாக பிரித்து வைக்க வேண்டும்.
சிறிது அதிக முதலீடு உங்களால் செய்ய முடியும் எனில் மேலும் சில பொருள்கள் வாங்கலாம். உதாரணமாக சார்ஜ் செய்யக்கூடிய கருவிகள் பேட்டரி மானிட்டர் கீபோர்டு மற்றும் மவுஸ் கன்வெர்ட்டர் லேன் கேபிள் லேண் கருவிகள் ரௌட்டர் இது போன்றவை. இந்தக் கருவிகளை வாங்கினாள் உங்களுக்கு சற்று அதிகமான முதலீடு தேவைப்படும் . இருப்பினும் உங்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்கும். இது போன்ற பொருள்களை விலை குறைவாக இருக்கும்போது வாங்கி வைத்து பிறகு அதிகமாக இருக்கும்போது விற்றால் லாபம் மிக அதிகமாக கிடைக்கும்.
இந்த பொருள்கள் அனைத்தும் நீங்கள் சற்று அதிக முதலீடு உடன் வாங்க போகிறீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதில் உங்களுக்கு லாபம் சில லட்சங்கள் கிடைக்கும்.
அதிக அளவு முதலீடு
மேலே உள்ள அனைத்து பொருள்களும் நீங்கள் வாங்கி வைத்திருக்க வேண்டும். மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு சில பொருள்கள் அதிகமாக வாங்க வேண்டும். இந்த அதிக முதலீட்டில் அதிக லாபம் பெற முடியும்.
இதில் கணினிகள் மடிக்கணினிகள் கணினி உபகரணங்கள் அனைத்தும் மடிக்கணினி உபகரணங்கள் அனைத்தும் இன்டர்நெட் போன்ற பொருள்கள் டூல்ஸ் போன்ற பொருள்கள் இன்னும் சில பொருட்களை நீங்கள் வாங்க முடியும். இதில் வருமானத்தை அதிகரிக்க ஒரு நல்ல தொழில் இருக்கும் இடத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் ஒரு பெரிய ஷோரூம் இருந்தாள் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். எனவே உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப முதலீடு செய்து லாபத்தை பெறலாம்.
இன்வெஸ்ட்மெண்ட் என்ன செய்ய வேண்டும்
இந்த தொழிலில் நீங்கள் இரண்டு விதமாக இன்வெஸ்ட்மென்ட் செய்யமுடியும். இரண்டில் ஏதேனும் ஒன்றை செய்தால் உங்களுக்கு வருமானம் அதிகமாக கிடைக்கும்.
முதல் வழி : ஒரு பெரிய நகரத்தில் நடுவில் உங்களுடைய கடை இருக்க வேண்டும். அதில் குறைந்த அளவில் பொருள்கள் இருந்தாலும் நல்ல தரமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும். உங்களுக்கு ஏதேனும் பொருள் மீண்டும் தேவைப்பட்டால் அதனை டீலர்களிடம் இருந்து வாங்க ஏற்ற இடமாக இருக்க வேண்டும். இதன் மூலமாக பெரிய தொழிலதிபர்களின் சர்வீஸ் வாங்க முடியும். இதில் ஒரு சர்வீஸ் செய்தால் கூட உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். உங்களுக்கு அதிகமான கஸ்டமர்கள் கிடைப்பார்கள் அதன் மூலமாக வருமானம் அதிகமாக கிடைக்கும்.
இரண்டாம் வழி : இதில் கடை மீது நீங்கள் இன்வெஸ்ட்மென்ட் செய்யாமல் பொருள்கள் இன்வெஸ்ட் செய்தால் லாபமும் கிடைக்கும். இருப்பினும் இது சிறிது காலம் ஆகும். பொருள்கள் அதிகமாக இருந்தால் உங்கள் கடையை தேடி பல நகரங்களில் இருந்து தொடர்பு கிடைக்கும். அதன் மூலமாக உங்களுக்கு வருமானம் பல நகரங்களில் நடைபெறும். இந்த இரண்டு வழிகளில் உங்களுக்கு எது சரியாக இருக்கிறதோ அதை நீங்கள் தேர்வு செய்து செயல்படலாம். இருப்பினும் உங்களுடைய நகரத்தில் எது நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்களோ அதை நீங்கள் செய்யலாம்.
இதில் குறிப்பாக பெரிய நகரம் உள்ள இடங்களில் குறைந்த அளவு பொருள்களை வைத்து தொடங்கினால் கூட அதிக லாபம் கிடைக்கும். சிறிய நகரங்களில் அதிகமான பொருள்கள் வைத்து குறைந்த லாபம் வைத்து பொருள்கள் விற்றால் விற்பனை அதிகரிக்கும் அதனுடன் லாபமும் அதிகரிக்கும். உங்களுக்கு இதில் எது சரியாக இருக்கிறதோ அதை நீங்கள் செய்து தொழிலை செய்யலாம்.
லாபம் எவ்வளவு கிடைக்கும்
நீங்கள் சரியான முறையில் இந்த தொழிலை செய்தால் உங்களுக்கு லாபம் பல மடங்கு கிடைக்கும். ஒரு பொருளை வாங்கி அதன் மார்ஜின் சரியாக வைத்து வைக்க வேண்டும். அதில் எந்த ஒரு குறையும் இல்லாமல் நன்றாக இயங்கினால் உங்களைத் தேடி மக்கள் குவிவார்கள். எனது ஒரு நல்ல பொருளை வாங்கி நல்ல விலையில் விற்கலாம்.
உதாரணமாக ஒரு கீபோர்டு மற்றும் மவுஸ் விலை டீலரிடம் வாங்கினாள் ஆயிரம் ரூபாய் எனில் நீங்கள் பயனாளர்களுக்கு 1,500 முதல் 2,000 ரூபாய் வரை விற்கலாம். இதன் மூலமாக உங்களுக்கு குறைந்தது குறைந்தது 500 முதல் ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். இதேபோல் அனைத்து பொருட்களையும் நீங்கள் சரியான விலை வைத்து சரியான லாபத்தில் விற்றால் அருமையான வருமானம் எடுக்க முடியும்.
வருமானத்தை அதிகரிக்க என்ன செய்வது
முதலில் இந்த தொழிலை நீங்கள் குறைந்தது ஒரு பகுதியில் செய்து இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் தொழிலைப் பற்றியும் உங்களுடைய பகுதியை பற்றியும் நன்றாக உங்களுக்கு தெரியும். அந்த பகுதியில் உங்களுடைய தொழில் நன்றாக உயருமா மற்றும் அங்குள்ள மக்களுக்கு இது அவசியமாக தேவைப்படுகிறதா என்பதைப் பொறுத்து உங்களுடைய தொழிலை விரிவுபடுத்தலாம். இல்லையெனில் நீங்கள் தவறான முயற்சி எதுவும் எடுக்க வேண்டாம்.
வருமானத்தை அதிகரிக்க இந்தத் தொழில் உடன் நேரடியாக தொடர்புடைய மற்றும் மறைமுகமாக தொடர்புடைய மற்ற தொழில்களை நீங்கள் முதலில் செய்ய வேண்டும். இந்த இரண்டு தொழில்கள் எவை என்று கீழே பார்க்கலாம்.
நேரடியாக தொடர்புடைய தொழில்கள் பிரிண்டர் பழுது பார்ப்பது அதை புதிதாக வாங்கிக் கொடுப்பது நெட்வொர்க்கிங் செய்வது ரவுடர் இன்ஸ்டால் செய்வது இன்டர்நெட் வாங்கிக் கொடுப்பது இதுபோன்று தொழில்களை செய்யலாம். இதன் மூலம் உங்களுடைய வாடிக்கையாளர்கள் இரண்டு மடங்காக அதிகரிப்பார்கள் . இதனை செய்து நீங்கள் வெற்றி கண்டால் மற்ற தொழில்களையும் செய்யலாம். கணினி பழுது பார்ப்பு கடையுடன் மறைமுகமாக தொடர்புடைய தொழில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
செக்யூரிட்டி கேமரா இன்ஸ்டால் செய்வது நெட்வொர்க் டிசைன் செய்வது பிளானிங் செய்துகொடுப்பது புதிய ஆர்டர் எடுத்து பயன்படுத்துவது மற்றும் சர்வர் போன்ற பெரிய பொருள்களை நீங்களே உருவாக்குவது. இதுபோன்ற தொழில்களையும் நீங்கள் செய்தால் வருமானம் நல்ல மடங்கு உயரும்.
இதனுடன் என்ன தொழில் செய்யலாம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள தொழில்கள் அனைத்தையும் உங்களால் செய்ய முடியும். இருப்பினும் உங்களுடைய பகுதியில் அந்தத் தொழில் நன்றாக இருக்கிறதா என்பதை உறுதி செய்த பிறகே மற்ற தொழில்களை நீங்கள் செய்ய வேண்டும். இல்லையெனில் அது நஷ்டத்தில் முடியும். எனவே சரியான நேரம் மற்றும் சரியான இடம் பார்த்து மற்ற தொழில்களையும் நீங்கள் செய்து கொடுத்தாள் வருமானம் பல மடங்காக உயரும்.
கேள்விகளுக்கு பதில்
இந்த கம்ப்யூட்டர் கடை தொடங்குவது பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் அல்லது கருத்துக்கள் இருந்தால் அதைக் கீழே உள்ள பெட்டியில் தெரிவிக்கவும். உங்களுடைய கருத்துக்கு கூடிய விரைவில் பதில் அளிக்கப்படும். உங்களிடம் இது போன்று வேறு ஏதேனும் தொழில் தொடங்க யோசனை இருந்தால் அதையும் நீங்கள் தெரிவிக்கலாம்.
DISCLAIMER:
The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.
[…] Read : How To Start Computer Service Center or Computer Shop Business ? […]