ADVERTISEMENT

How To Create PhonePe Account – Full Setup Guide

Follow Income Tamizha on Google News Publisher
ADVERTISEMENT

PhonePe என்றால் என்ன?

போன்-பே என்பது டிஜிட்டல் முறையில் பணத்தை பரிமாற்றம் செய்ய உதவும் ஒரு அப்ளிகேஷன் ஆகும். இதன் தலைமையகம் பெங்களூருவில் உள்ளது. இந்த அப்ளிகேஷன் இந்தியாவில் உள்ள 11 மொழிகளில் செயல்படுகிறது. அதில் தமிழும் ஒன்று. இந்த போன் பே மூலமாக பல வழிகளில் பணத்தை சுலபமாக அனுப்ப முடியும். இதன் மூலமாக பணத்தை நேரடியாக நமது வங்கி கணக்கில் இருந்து மற்றொருவருக்கு அல்லது வேறு ஏதேனும் பயன் போட்டுக்கோ அனுப்ப முடியும். இதற்கு எந்த ஒரு பிடிமானமும் பிடிக்க மாட்டார்கள். இது முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. இந்த அப்ளிகேஷன் உள்ள வசதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

போன் பே வசதிகள் ?

இந்த போன் பே அப்ளிகேஷன் மற்ற வாலட்களை போலவே செயல்படுகிறது. இதன் மூலமாகவும் பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும். எந்த ஒரு பிடிமானமும் இருக்காது. யுபிஐ பேமெண்ட் கள் இதன் மூலமாக சுலபமாக செய்ய முடியும். இதன் மூலமாக பணத்தை வாங்கி நமது வங்கிக் கணக்கில் இலவசமாக அனுப்ப முடியும். உங்களுடைய மொபைல் ரீசார்ஜ் மற்றும் பில்களை செலுத்த முடியும். க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்து எல்லாவித பேமெண்ட் களையும் பண்ண முடியும். ஆன்லைன் புக்கிங் செய்ய முடியும். ட்ரெயின் கார் பஸ் போன்றவற்றை புக் செய்ய முடியும். உணவுகளை நேரடியாக புக் செய்ய முடியும். ஹோட்டல் ரூம் புக் செய்ய முடியும். மற்றும் பிசினஸ் செய்பவர்களுக்கும் இது பயன்படும். அனைத்துவித வாலட் அப்ளிகேஷன் களிலும் உள்ள வசதிகள் இந்த அப்ளிகேஷன்ல் உள்ளது.

படிக்க : கூகுள் பே கணக்கு உருவாக்குவது எப்படி?

போன்பே உருவாக்க தேவையானவை

இந்த கணக்கை உருவாக்க உங்களுக்கு எந்த ஒரு பணமும் தேவைப்படாது. உங்களிடம் ஒரு ஸ்மார்ட்போன் போன் பே அப்ளிகேஷன் பேங்கில் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் மற்றும் வங்கி கணக்கு இருந்தால் மட்டும் போதும். நீங்கள் இந்த போன்பே கணக்கை உருவாக்கி விடலாம். குறிப்பாக உங்கள் வங்கியில் இணைக்கப்பட்ட உங்களுடைய ஸ்மார்ட்போனில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். அப்போதுதான் எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுலபமாக திறக்க முடியும். உங்கள் மொபைலில் இன்டர்நெட் உள்ளதா என்பதை சோதித்துக் கொள்ளவும் மற்றும் உங்களுடைய சிம் கார்டில் எஸ்எம்எஸ் அனுப்பும் அளவுக்கு பணம் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவும். இப்போது உங்களுக்கு புதிய கணக்கை உருவாக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

புதிய கணக்கை உருவாக்குவது எப்படி?

இந்த போன் பே மூலமாக இலவசமான அக்கவுண்ட் ஓபன் செய்ய முடியும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.

போன்பே டவுன்லோட் லிங்க் : go to google and search phonepe

இப்போது அந்த அப்ளிகேஷனை திறந்து கொள்ளவும். அடுத்து வரும் திரையில் உங்களுடைய மொபைல் நம்பர் கேட்கும். அதில் நீங்கள் வங்கியில் எந்த மொபைல் நம்பர் கொடுத்துள்ளீர்கள் ஓ அதே மொபைல் நம்பரை இங்கு உள்ளிடவும். இந்த நம்பர் கொடுத்தவுடன் தொடங்கு ( Proceed ) எனும் பொத்தானை கிளிக் செய்யவும்.

ADVERTISEMENT

இப்பொழுது உங்களுடைய போன் பே ஒரு சில அனுமதிகளை கேட்கும் அதை பார்த்து நீங்கள் அனுமதி கொடுத்துக் கொள்ளவும்.
உங்களுக்கு அடுத்த பக்கம் ( Dashboard / Home ) வெற்றிகரமாக திறந்து விட்டால் நல்லது. இல்லையெனில் Try again ( மீண்டும் தொடர்க ) என்பதை கிளிக் செய்து திரும்பவும் முயற்சி செய்து பார்க்கவும்.

இப்பொழுது உங்களுடைய போன்பே டேஷ்போர்டு அல்லது முகப்பு பக்கம் வந்து இருக்கும். அதில் உங்களுக்கு பலவிதமான செயல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதை அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த முடியும் ஆனால் அதற்கு முக்கியமாக வங்கி கணக்கை போன்பே உடன் இணைக்க வேண்டும். இந்த வங்கிக் கணக்கை எப்படி சரியான முறையில் இணைப்பது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படிக்க : பேடிஎம் அக்கவுண்ட் முழுமையாக திறப்பது எப்படி?

வங்கி கணக்கை இணைப்பது எப்படி?

போன் பேயுடன் வங்கிக் கணக்கை இணைப்பது சுலபமான வழி தான். நீங்கள் பேடிஎம் அல்லது கூகுளே ஏற்கனவே உபயோகித்து இருந்தால் உங்களுக்கு இது சுலபமாக இருக்கும். அனைத்து வாலட் களிலும் ஒரே மாதிரியாகத்தான் பேங்க் அக்கவுண்ட் இணைக்கும் பக்கம் இருக்கும்.

உங்களுக்கான போன்பே ஆக்கவுண்ட் திறந்தவுடன் டேஷ்போர்டு அல்லது முகப்பு பக்கத்தில் வங்கி கணக்கை இணை ( Add bank account ) என்ற ஒரு பொத்தான் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.

ஒருவேளை உங்களுக்கு இந்த வங்கிக் கணக்கை இணை எனும் பொத்தான் வரவில்லை எனில். கீழே உள்ள எனது பணம் ( My money ) என்ற பொத்தானை கிளிக் செய்யவும். அடுத்து வரும் பக்கத்தில் பேமெண்ட் மெத்தட் ( Payment method ) என்ற பிரிவில் உள்ள ( Bank account / UPI ) பேங்க் அக்கௌன்ட் எனும் பொத்தானை கிளிக் செய்யவும்.

ADVERTISEMENT

தொடர்ந்து வரும் பக்கத்தில் பேங்க் அக்கௌன்ட் விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் இப்போதுதான் பேங்க் அக்கவுண்ட் இணைக்க போகிறீர்கள் என்றால் உங்களுக்கு எந்த ஒரு தகவல்களும் இருக்காது. இப்போது புதிய வங்கிக் கணக்கை இணை ( Add new bank account ) என்பதை கிளிக் செய்யவும். இந்த லிங்க் கீழே கொடுக்கப்பட்டிருக்கும்.

அடுத்து வரும் பக்கத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து வித பேங்க் அக்கவுண்ட் களும் இருக்கும். நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்து இருக்கிறீர்களோ அந்த வங்கியை தேர்வுசெய்யவும். அல்லது உங்கள் மொபைல் நம்பர் எந்த வங்கியில் இணைக்கப்பட்டு இருக்கிறதோ அந்த வங்கியை தேர்வுசெய்யவும். உங்கள் வங்கி பெயர் பட்டியலில் இல்லை என்றால் சர்ச் எனும் கருவியை பயன்படுத்தி தேடிக் கொள்ளவும்.

நீங்கள் பேங்க் அக்கவுண்ட் வங்கியை தேர்வு செய்தவுடன் உங்களுக்கு அடுத்த பக்கம் திறக்கும். அதில் உங்களுடைய வங்கி கணக்கு கடைசி நான்கு இலக்க எண் புலப்படும். உங்கள் வங்கிக் கணக்கு இங்கே வரவில்லை எனில் அல்லது வங்கியை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற வாசகம் வந்தால். உங்களுடைய சிம் கார்டில் பேலன்ஸ் இருக்காது, உங்கள் மொபைல் நம்பர் வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கிறது அல்லது நீங்கள் வேறு சிம்மை பயன்படுத்திப் பார்க்க வேண்டும்.

இப்பொழுது உங்களுடைய ஏடிஎம் கார்டு அல்லது டெபிட் கார்டின் கடைசி ஆறு இலக்கங்கள் அல்லது முழுவதும் உள்ளீடாக கேட்கும். அதில் நீங்கள் உங்களுடைய கார்டு தரவுகளை உள்ளீடு செய்க. அடுத்து உங்களுடைய கார்டின் எக்ஸ்பைரி மாதம் மற்றும் எக்ஸ்பைரி வருடம் கேட்கும் அதை உள்ளீடாக கொடுக்கவும். அடுத்து வரும் பக்கத்தில் உங்களுடைய ஏடிஎம் கார்டில் பின் நம்பர் கேட்கும் அதில் உங்களுடைய பின் நம்பரை கொடுக்கவும். இப்பொழுது உங்களுக்கு யுபிஐ பயன்படுத்தும் பக்கம் திறக்கும்.

அந்தப் பக்கத்தில் உங்களுக்கு யுபிஐ பின் உள்ளிட சொல்லும். அதில் Set UPI PIN / Reset UPI PIN என்பதை தேர்வு செய்யவும். அடுத்து வரும் பக்கத்தில் உங்களுக்கு தேவையான நான்கு இலக்க பின் நம்பர் செட் செய்து கொள்ளலாம். இந்த பின் நம்பர் செட் செய்வதன் மூலம் போன்பே மூலமாக வேறு யாரும் பணத்தை எடுக்காமல் இருக்க உதவுகிறது. நீங்களே வேறு யாராவது க்கு பணத்தை அனுப்ப வேண்டும் அல்லது பணத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் இந்த பின் நம்பரை உபயோகித்து தான் பயன்படுத்த முடியும். ஒவ்வொரு பணப்பரிவர்த்தனை களுக்கும் இந்த பின் நம்பர் கேட்கப்படும். இப்போது சரி என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.

ADVERTISEMENT

வேறொரு பேங்க் அக்கவுண்ட் இணைக்க

உங்களுக்கு வேறு பேங்கில் அக்கவுண்ட் இருந்தால் அதையும் இணைக்க முடியும். உங்களுக்கு தேவைப்பட்டால் மட்டும் இன்னொரு வங்கிக் கணக்கை இணைத்துக்கொள்ளலாம். இன்னொரு வங்கி கணக்கை இணைப்பதன் மூலமாக ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு யுபிஐ பரிவர்த்தனை மூலமாக பணத்தை எளிமையாக மாற்றிக்கொள்ள முடியும். உங்களுக்கு இந்த வசதி தேவைப்பட்டால் மட்டும் செய்து கொள்ளலாம்.

படிக்க : சின்ன டாஸ்க் செய்தல் அன்லிமிடெட் பணம் கிடைக்கும்

பணத்தை அனுப்புவது எப்படி?

உங்களுடைய போன்பே முகப்பு பக்கத்திற்கு வந்து கொள்ளவும். முகப்பு பக்கத்தில் பணத்தை அனுப்பு ( Transfer money ) எனும் படியின் கீழ் உங்களுக்கு பணத்தை அனுப்ப நான்கு வழிகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ( To contact ) உங்களுடைய கான்டெக்ட் இல் உள்ள நபருக்கு அனுப்ப வேண்டுமா, ( To account ) வங்கிக் கணக்குக்கு அனுப்ப வேண்டுமா, ( To self ) உங்களுக்கு அனுப்பி கொள்ள வேண்டுமா, என கொடுக்கப்பட்டிருக்கும். இதில் நீங்கள் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து பணத்தை அனுப்பிக் கொள்ளலாம். சரி இதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

To connect

இந்த தேர்வை பயன்படுத்தினால் உங்களுடைய தொலைபேசியில் உள்ள நண்பர்கள் யார் போன்பே ஆக்கவுண்ட் வைத்திருக்கிறார்களோ அவர்களுடைய பெயர்கள் காட்டும். உன் பேய் மூலம் நீங்கள் அவர்களுக்கு பணத்தை அனுப்பிக் கொள்ளலாம். இதை கிளிக் செய்து உங்களுடைய நண்பரே தேர்வுசெய்யவும் பிறகு எவ்வளவு பணத்தை அனுப்ப வேண்டுமோ அதை தேர்வு செய்யவும். அடுத்து வரும் பெட்டியில் உங்களுடைய பின் நம்பரை குறியீடாக கொடுக்கவும். இப்பொழுது உங்களுடைய நண்பருக்கு பணம் அனுப்பப்பட்டு இருக்கும்.

To Account

இந்த அக்கவுண்ட் தேர்வை பயன்படுத்தி அனைத்து வித வங்கி கணக்கிற்கும் பணத்தை அனுப்ப முடியும். இந்தத் தேர்வை செலக்ட் செய்து கொள்ளவும். அடுத்து வரும் பெட்டியில் நீங்கள் யாருக்கு பணத்தை அனுப்ப வேண்டுமோ அவர்களுடைய வங்கி கணக்கு எண் மற்றும் ஐ எஃப் எஸ் சி கோடு உள்ளீடாக கொடுத்து. அடுத்துள்ள பெட்டியில் பணத்தை உள்ளீடாக கொடுத்து. உங்களுடைய பின் நம்பரை உள்ளீடாக கொடுத்து பணத்தை அந்த வங்கி கணக்கிற்கு அனுப்பி கொள்ள முடியும்.

To self

இந்த முறையை பயன்படுத்தி உங்களுடைய வேறு வங்கியில் உள்ள பணத்தை மற்றொரு வங்கிக்கு அனுப்ப முடியும். இதற்கு நீங்கள் முதலில் வங்கி கணக்குகளை பதிவு செய்திருக்க வேண்டும். இப்பொழுது இந்த தேர்வை செலக்ட் செய்து கொள்ளவும் அடுத்து வரும் பெட்டியில் எந்த வங்கியில் இருந்து பணத்தை அனுப்ப வேண்டுமோ அதை செலக்ட் செய்து கொள்ளவும். அடுத்து வரும் பேட்டியில் எந்த வங்கிக் கணக்குக்கு அனுப்ப வேண்டுமோ அந்த வங்கியை சிலை செய்து கொள்ளவும். அடுத்து உங்களுடைய தொகையை உள்ளீடாக கொடுக்கவும். பிறகு உங்களுடைய பின் நம்பரை என்டர் செய்து பணத்தை பரிமாற்றிக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

பணத்தைப் பெறுவது எப்படி?

உங்களுடைய போன்பே முகப்பு பக்கத்தை ஓபன் செய்து கொள்ளவும். அங்கே டு காண்டாக்ட் ( To contact ) எனும் பொத்தான் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளவும். பிறகு நீங்கள் யாரிடம் இருந்து பணத்தையும் பெற வேண்டுமோ அவர்களை தேர்வு செய்து கொள்ளவும். உங்களுடைய நண்பர் போன்பே அக்கவுண்ட் வைக்கவில்லை என்றால் அவரை யுபிஐ ஐடி மூலம் தொடர்பு கொள்ளலாம். உதாரணமாக உங்கள் நண்பர் பேடிஎம் அல்லது கூகுளே யுபிஐ வைத்திருந்தாள் அவர்களை தொடர்பு கொண்டு பணத்தை வாங்கிக் கொள்ள முடியும்.

இப்பொழுது உங்களுடைய நண்பரை தேர்வு செய்து கொள்ளவும் அல்லது கீழே உள்ள BHMI UPI எனும் பொத்தானை செலக்ட் செய்து கொள்ளவும். இப்பொழுது உங்களுடைய நண்பரின் யுபிஐ ஐடியை Add BHMI UPI எனும் தேர்வில் உள்ளீடாக கொடுக்கவும். அடுத்து வரும் பக்கத்தில் யு பி ஐ டி சரி பார்க்கப்படும். இதில் பிழை வந்தால் திரும்ப ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். இல்லையெனில் நீங்கள் உள்ளீடாக கொடுத்த யு பி ஐ டி தவறாக இருக்கும்.

அடுத்து வரும் பக்கத்தில் Send என்பதை தேர்வு செய்தால் உங்களுடைய நண்பருக்கு பணத்தை அனுப்ப முடியும். Request என்பதை தேர்வு செய்தால் நண்பரிடம் பணத்தை கேட்க முடியும். இப்பொழுது ரெக்வெஸ்ட் என்பதை கிளிக் செய்து கொள்ளவும். கீழே உள்ள பெட்டியில் உங்களுக்கு எவ்வளவு தொகை தேவையோ அதை உள்ளீர்கள் கொடுக்கவும். பிறகு Request என்பதை கிளிக் செய்து பணத்தை கேட்கலாம். உங்கள் நண்பர் அதை பார்த்துவிட்டு பணத்தை அனுப்புவார்.

படிக்க : பேபால் அக்கௌன்ட் முழுமையாக உருவாக்குவது எப்படி?

கேள்விக்கு பதில்

போன்பே பற்றிய உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் அல்லது கேள்வி இருந்தால் கீழே உள்ள கருத்து பெட்டியில் தெரிவிக்கவும் உங்களுக்கு பதில் விரைவில் கொடுக்கப்படும்.

DISCLAIMER:

The Recruitment/App/Website Information Provided above is for Informational Purposes only . The above has been taken from the official site of the Organization. We do not provide any guarantee. Recruitment is to be done as per the official recruitment process of the company. We don’t charge any fee for providing this job Information.

Income Tamizha
Income Tamizha

அனைவரும் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த வலைத்தளம். இங்கே பணம் சம்பாதிக்கும் வழிகள், புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

Articles: 215

3 Comments

Comments are closed.